Advertisment

TNPSC Results; குரூப் 2 மெயின் தேர்வு ரிசல்ட் டிசம்பரில் வெளியிடப்படும் – டி.என்.பி.எஸ்.சி

குரூப் 1 பதவிகளுக்கான முதல்நிலை தேர்வு முடிவுகள் இந்த மாதம் (ஏப்ரல்) வெளியிடப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குரூப் 1 முதல்நிலை தேர்வு கடந்த 2022 நவம்பர் மாதம் நடைபெற்றது

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
tnpsc

tnpsc

குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான முடிவுகள் இம்மாதம் வெளியிடப்படும் என தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் தெரிவித்துள்ளது.

Advertisment

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) குரூப் 1, குரூப் 2, குரூப் 4 மற்றும் பல்வேறு துறைகளின் தேர்வுகளை நடத்தி, காலிப்பணியிடங்களை நிரப்பி வருகிறது. பெரிதும் எதிர்ப்பார்க்கப்பட்ட குரூப் 4 தேர்வு முடிவுகள் கடந்த மாதம் வெளியிடப்பட்டது. இந்தநிலையில், தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும் என்ற தகவலை தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.

இதையும் படியுங்கள்: SSC CHSL, MTS Exams; எஸ்.எஸ்.சி தேர்வுகளை தமிழில் எழுதலாம் – மத்திய அரசு அனுமதி

அதன்படி, குரூப் 1 பதவிகளுக்கான முதல்நிலை தேர்வு முடிவுகள் இந்த மாதம் (ஏப்ரல்) வெளியிடப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குரூப் 1 முதல்நிலை தேர்வு கடந்த 2022 நவம்பர் மாதம் நடைபெற்றது.

5446 பணியிடங்களுக்கு நடத்த குரூப் 2 முதன்மைத் தேர்வு முடிவுகள் டிசம்பர் மாதம் வெளியிடப்படும். குரூப் 2 முதன்மைத் தேர்வு கடந்த பிப்ரவரி 25 ஆம் தேதி நடைபெற்றது. முன்னதாக மெயின் தேர்வு முடிவுகள் செப்டம்பர் மாதம் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது டிசம்பரில் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்து சமய அறநிலையத்துறையில் கிரேடு 3 மற்றும் கிரேடு 4 பதவிகளுக்கான தேர்வு முடிவுகளும் இம்மாதம் வெளியிடப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

publive-image

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tnpsc
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment