TNPSC Group 4 and AE exams application process ends soon: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில் பல்வேறு வேலைவாய்ப்பு அறிவிப்புகள் வெளிவந்துள்ளன. அவற்றில் மிக முக்கிய தேர்வுகளுக்கான விண்ணப்பச் செயல்முறை இந்த மாதத்தில் முடிவடைகின்றன. அந்த தேர்வுகள் என்ன? அதற்கான தகுதிகள் என்ன? போன்ற முக்கிய தகவல்களை இப்போது பார்ப்போம்.
குரூப் 4 தேர்வு
தமிழக அரசுத்துறைகளில் காலியாக உள்ள நான்காம் நிலை பணியாளர்களை நிரப்பும் குரூப் தேர்வுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. விண்ணப்பிக்க கடைசி தேதி 28.04.2022
மொத்த காலியிடங்களின் எண்ணிக்கை : 7304
நிரப்பப்படும் பதவிகள்: இளநிலை உதவியாளர் (Junior Assistant), தட்டச்சர் (Typist), சுருக்கெழுத்து தட்டச்சர் (Steno-Typist), கிராம நிர்வாக அலுவலர் (Village Administative Officer), வரித் தண்டலர் (Bill Collector), நில அளவர் (Field Surveyor), வரைவாளர் (Draftsman)
கல்வித் தகுதி: பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தட்டச்சர் மற்றும் சுருக்கெழுத்தர் பதவிக்கு பத்தாம் வகுப்பு தேர்ச்சி உடன் அரசு தொழில்நுட்ப தட்டச்சு மற்றும் சுருக்கெழுத்து தேர்வுகளில் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் இளநிலை (மற்றும்/அல்லது) முதுநிலையில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயதுத் தகுதி: 18 வயது முதல் 30 வரை உள்ளவர்கள் இந்த தேர்வை எழுதலாம். தமிழ்நாடு அரசு விதிகளின் குறிப்பிட்ட பிரிவினர்களுக்கு வயது வரம்பு சலுகைகளும் உண்டு.
தேர்வு முறை: எழுத்து தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்
மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் (District Child Protection Officer)
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) சமூக பாதுகாப்புத் துறையில் காலியாக, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 30.04.2022க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.
காலியிடங்களின் எண்ணிக்கை: 16
கல்வித் தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் Degree in Sociology or Social Work or Psychology or Child Development or Criminology படிப்பு முடித்திருக்க வேண்டும்.
வயதுத் தகுதி: 01.07.2022 அன்று 32 வயதிற்குள் இருக்க வேண்டும். SC, SC(A), ST, MBC(V), MBC DNC, MBC, BC and BCM பிரிவுகளுக்கு வயது வரம்பு கிடையாது.
சம்பளம் : ரூ.56,100 – 2,05,700
தேர்வு முறை: இந்த பணியிடங்களுக்கு எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
ராஷ்ட்ரிய இந்திய இராணுவ கல்லூரி சேர்க்கை
டேராடூனில் உள்ள இந்திய இராணுவ கல்லூரியில் சேர்க்கைக்கான விண்ணப்பச் செயல்முறை டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் தொடர்ந்து வருகிறது. விண்ணப்பிக்க கடைசி தேதி 25.04.2022
கல்வித் தகுதி : 7 ஆம் வகுப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
இதையும் படியுங்கள்: வருவாய்த்துறை வேலைவாய்ப்பு; 8-ம் வகுப்பு படித்தவர்கள் உடனே அப்ளை பண்ணுங்க!
வயதுத் தகுதி : 02 ஜனவரி 2010 முதல், 1 ஜூலை 2011க்குள் பிறந்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
பொறியியல் சேவை தேர்வு
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் உள்ள காலியிடங்களை நிரப்ப ஒருங்கிணைந்த பொறியியல் சேவை தேர்வு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த பணியிடங்களுக்கான விண்ணப்ப செயல்முறை 04.04.2022 முதல் 03.05.2022 வரை இருக்கும்.
Automobile Engineer
காலியிடங்களின் எண்ணிக்கை: 4
கல்வித் தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் Degree in Automobile (or) Mechanical Engineering படிப்பு முடித்திருக்க வேண்டும். 5 வருட பணி அனுபவம் அவசியம்.
சம்பளம் : ரூ.56,100 – 2,05,700
Junior Electrical Inspector
காலியிடங்களின் எண்ணிக்கை: 8
கல்வித் தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் Degree in Electrical Engineering படிப்பு முடித்திருக்க வேண்டும்.
சம்பளம் : ரூ.37,700 – 1,38,500
Assistant Engineer (Agricultural Engineering)
காலியிடங்களின் எண்ணிக்கை: 66
கல்வித் தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் B.E. (Agriculture) or B. Tech (Agricultural Engineering) or B.Sc., (Agricultural Engineering) (or) B.E. (Mechanical) (or) B.E. (Civil) (or) B.Tech (Automobile Engineering) or B.E. (Production Engineering) or B.E.(Industrial Engineering) (or) B.E (Civil and Structural Engineering) or B.E (Mechanical and Production Engineering) படிப்பு முடித்திருக்க வேண்டும்.
சம்பளம் : ரூ.37,700 – 1,38,500
Assistant Engineer (Highways Department)
காலியிடங்களின் எண்ணிக்கை: 33
கல்வித் தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் Degree in Civil Engineering படிப்பு முடித்திருக்க வேண்டும்.
சம்பளம் : ரூ.37,700 – 1,38,500
Assistant Director of Industrial Safety and Health
காலியிடங்களின் எண்ணிக்கை: 18
கல்வித் தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் Degree in Mechanical Engineering or Production Engineering or Industrial Engineering or Electrical Engineering or Chemical Engineering or Textile Technology படிப்பு முடித்திருக்க வேண்டும்.
சம்பளம் : ரூ.37,700 – 1,38,500
Assistant Engineer (Civil) (Water Resources Department, PWD)
காலியிடங்களின் எண்ணிக்கை: 309
கல்வித் தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் B.E degree in Civil Engineering or Civil and Structural Engineering படிப்பு முடித்திருக்க வேண்டும்.
சம்பளம் : ரூ.37,700 – 1,38,500
General Foreman
காலியிடங்களின் எண்ணிக்கை: 7
கல்வித் தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் Degree in Mechanical Engineering (or) Automobile Engineering (or) Automobile Technology படிப்பு முடித்திருக்க வேண்டும்.
சம்பளம் : ரூ.37,700 – 1,38,500
Technical Assistant
காலியிடங்களின் எண்ணிக்கை: 11
கல்வித் தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் Degree in Mechanical Engineering (or) Automobile Engineering (or) Automobile Technology படிப்பு முடித்திருக்க வேண்டும்.
சம்பளம் : ரூ.37,700 – 1,38,500
Assistant Engineer (Rural Development and Panchayat Raj Department)
காலியிடங்களின் எண்ணிக்கை: 93
கல்வித் தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் B.E degree in Civil Engineering படிப்பு முடித்திருக்க வேண்டும்.
சம்பளம் : ரூ.37,700 – 1,38,500
Assistant Engineer (Tamil Nadu Urban Habitat Development Board)
காலியிடங்களின் எண்ணிக்கை: 64
கல்வித் தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் Degree in Engineering (Civil) படிப்பு முடித்திருக்க வேண்டும்.
சம்பளம் : ரூ.37,700 – 1,38,500
Assistant Engineer (Chennai Metropolitan Development Authority)
காலியிடங்களின் எண்ணிக்கை: 13
கல்வித் தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் B.E degree (Civil or Highways) படிப்பு முடித்திருக்க வேண்டும். 5 வருட பணி அனுபவம் அவசியம்.
சம்பளம் : ரூ.37,700 – 1,38,500
வயதுத் தகுதி: 01.07.2022 அன்று 32 வயதிற்குள் இருக்க வேண்டும். ஆட்டோமொபைல் இன் ஜினியர் பணியிடங்களுக்கு 37 வயது வரை விண்ணப்பிக்கலாம். SC, SC(A), ST, MBC(V), MBC DNC, MBC, BC and BCM பிரிவுகளுக்கு வயது வரம்பு கிடையாது.
தேர்வு முறை: இந்த பணியிடங்களுக்கு எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம் : ரூ. 150, இருப்பினும் ஏற்கனவே நிரந்தர பதிவு வைத்திருப்பவர்கள் கட்டணம் செலுத்த தேவையில்லை.
தேர்வுக் கட்டணம் : ரூ. 200, இருப்பினும் SC, SC(A), ST, MBC(V), MBC - DNC, MBC, BC, BCM மற்றும் விதவைகள் உள்ளிட்ட பிரிவுகளுக்கு கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்கு உண்டு.
ஒவ்வொரு விண்ணப்பத்திற்கும் தனியாக விண்ணப்பக் கட்டணம் மற்றும் தேர்வுக் கட்டணம் செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: விண்ணப்பிக்க விரும்புபவர்கள் www.tnpsc.gov.in அல்லது www.tnpscexams.in என்ற இணையதள பக்கத்திற்கு சென்று விண்ணப்பிக்க வேண்டும். ஏற்கனவே நிரந்தர பதிவு வைத்திருப்பவர்கள் அதன் மூலம் விண்ணப்பிக்கலாம்.
இந்த அறிவிப்புகள் குறித்து மேலும் விவரங்கள் அறிய https://www.tnpsc.gov.in/English/Notification.aspx என்ற இணையதள பக்கத்தை பார்வையிடவும்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.