TNPSC Group 4 : சான்றிதழ் பதிவேற்றம் எவ்வாறு செய்வது?
தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம் மூலமாக அமைக்கப்பட்டுள்ள 500க்கும் மேற்பட்ட இ-சேவை மையங்களைப் பற்றிய தகவல்களையும் டிஎன்பிஎஸ்சிஆணையம் தனது இணையதளத்தில் வெளியிட்டிருந்தது.
TNPSC Group 4 candidates required to upload their Scanned Documents within 18 december: டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வில் சான்றிதழ் சரிபார்புக்கு அழைக்கப்பட்ட வேட்பாளர்கள், இன்னும் ஆறு நாட்களுக்குள் (அதாவது, வரும் 18ம் தேதிக்குள்) தங்கள் மூலச் சான்றிதழ்களை ஸ்கேன்(Scan) செய்து தேர்வாணைய இணைய தளத்தில் அரசு கேபிள் டிவி நிறுவனம் நடத்தும் அரசு இ-சேவை மையங்கள் மூலமாக பதிவேற்றம் செய்ய வேண்டும்.
தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம் மூலமாக அமைக்கப்பட்டுள்ள 500க்கும் மேற்பட்ட இ-சேவை மையங்களைப் பற்றிய தகவல்களையும் டிஎன்பிஎஸ்சிஆணையம் தனது இணையதளத்தில் வெளியிட்டிருந்தது.
என்னென்ன சான்றிதழ்களை பதிவேற்றம் செய்யவேண்டும் என்பதை பற்றி தெரிந்து கொள்ள, இந்த கிளிக் செய்யுங்கள்
தேர்வர்கள், வரும் 18ம் தேதிக்குள் மூலச் சான்றிதழ்களை பதிவேற்றம் செய்துவிடுங்கள். இல்லையேல், சான்றிதழ் சரிபார்ப்புக்கு வர உங்களுக்கு விருப்பமில்லை என்று டிஎன்பிஎஸ்சி கருதிக் கொள்ளும். ஏதேனும் சான்றிதழ் இல்லாமல் இருந்தால், அதற்கு என்ன செய்ய வேண்டும் என்று நன்கு யோசியுங்கள். இன்னும் நாட்கள் உள்ளன என்று சோம்பேறித்தனமாக இருக்க வேண்டாம், எந்த நல்ல காரியத்தையும் இன்றே தொடங்குகள்.