TNPSC Group 4 Exam: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்திற்கு விண்ணப்பம் செய்தவர்களின் மொத்த எண்ணிக்கை 16.29 லட்சம் ஆகும். கடந்த 1-ம் தேதி தேர்வு எழுதியவர்களின் எண்ணிக்கை 13.59 லட்சம். ஹால் டிக்கெட்டை பெற்றுக்கொண்டும் 2.7 லட்சம் பேர் தேர்வு எழுத வரவில்லை.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் சார்பில் குரூப் 4 தேர்வு செப்டம்பர் 1-ம் தேதி நடைபெற்றது. கிராம நிர்வாக அலுவலர் பணியிடங்கள் 397, ஜூனியர் அசிஸ்டண்ட் 2688 பேர், சர்வேயர்கள் 509, டைப்பிஸ்ட் 1901, பில் கலெக்டர்கள் 34 பேர் தேர்வு செய்யப்பட இருக்கிறார்கள்.
இதற்காக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்திற்கு விண்ணப்பம் செய்தவர்களின் மொத்த எண்ணிக்கை 16.29 லட்சம் ஆகும். கடந்த 1-ம் தேதி தேர்வு எழுதியவர்களின் எண்ணிக்கை 13.59 லட்சம். ஹால் டிக்கெட்டை பெற்றுக்கொண்டும் 2.7 லட்சம் பேர் தேர்வு எழுத வரவில்லை.
விண்ணப்பம் செய்தவர்களில் 83.4 சதவிகிதம் பேர் தேர்வு எழுதியிருக்கிறார்கள். வழக்கமாக அரசுத் துறைத் தேர்வுகளில் இப்படி தேர்வு எழுதுகிறவர்களின் சதவிகிதம் 70-ஐ ஒட்டியே இருக்கும். அதிக சதவிகிதம் பேர் இந்த முறை தேர்வு எழுதியதற்கு காரணம், தமிழ்நாடு முழுவதும் தாலுகா வாரியாக தேர்வு மையங்களை அமைத்ததுதான். தமிழ்நாடு முழுவதும் மொத்தம் 5575 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டன. எனவே கிராமப்புற தேர்வர்கள் எளிதில் தேர்வு மையங்களுக்கு சென்று தேர்வு எழுத முடிந்தது.
தமிழகத்தில் சென்னையில்தான் அதிக மாணவர்கள் தேர்வு எழுதினார்கள். அதேசமயம் தேர்வுக்கு விண்ணப்பித்தும், தேர்வு எழுத வராத மாணவர்கள் விகிதமும் சென்னையில்தான் அதிகம். சென்னையில் விண்ணப்பித்த 1.25 லட்சம் மாணவர்களில், 90,200 பேர் தேர்வு எழுதினார்கள். 28 சதவிகிதம் பேர் வரவில்லை. சென்னையில் மட்டும் 405 மையங்களில் தேர்வு நடைபெற்றது.
தமிழகத்திலேயே குறைவான நபர்கள் தேர்வு நடைபெற்றது நீலகிரி மாவட்டத்தில்தான். இங்கு விண்ணப்பம் செய்த 7341 பேரில் 5940 பேர் தேர்வு எழுதினர். மிகக் குறைவான ‘ஆப்சென்ட்’ விகிதம் தர்மபுரி மாவட்டத்தில்தான். திருநெல்வேலி, சேலம், மதுரை மாவட்டங்களில் தலா 75,000-க்கும் அதிகமானோர் தேர்வில் பங்கேற்றிருக்கிறார்கள்.
TNPSC Group 4 Answer Key: ஆன்லைனில் செக் செய்வது எப்படி ?
இதில் தேர்ச்சி பெறுகிறவர்கள் நேரடித் தேர்வு மூலமாக பணியில் அமர்த்தப்பட இருக்கிறார்கள். விரைவில் விடைத்தாள் அதிகாரபூர்வமாக டி.என்.பி.எஸ்.சி இணையதளத்தில் வெளியாகும். அதில் தேர்வர்கள் தாங்கள் எழுதிய விடைகளை ஒப்பிட்டுப் பார்க்கலாம். கட் ஆஃப் மதிப்பெண் உள்ளிட்ட தகவல்களும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில் கிடைக்கும்.