டி.என்.பி.எஸ்.சி குரூப்- IV தேர்வில் ‘மறைந்துபோகும் சிறப்பு மை’ மூலம் தேர்வர்கள் முறைகேடுகளில் ஈடுபட்டதை தமிழக சிபி-சிஐடி காவல் பிரிவு கண்டறிந்தது . அதனைத் தொடர்ந்து , வழக்கு விசாரணைகளையும் தற்போது முடிக்கி விடப்பட்டுள்ளது.
பள்ளிக்கல்வித்துறை அலுவலக உதவியாளர் ரமேஷ், எரிசக்தி துறை உதவியாளர் திருக்குமரன், இடைத்தரகர் ராஜசேகர் போன்றோர் இந்த முறைகேடு புகார்களில் இதுவரை கைது செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வு முறைகேடு, எவ்வாறு நடைபெற்றது?
இந்நிலையில், தற்போது தேர்வுகள் இயக்ககத்தில் (டிபிஐ) ஆவண கிளார்க்காக பணிபுரிந்து வரும் ஓம்காந்தன் என்பவரை சிபிசிஐடி போலீசார் கைது செய்திருக்கின்றனர்.
ராமநாதபுரத்தை தாண்டி திருநெல்வேலி போன்ற மாநிலத்தின் பிற பகுதிகளிலும் இந்த முறைகேடுகள் நடந்திருக்கலாம் என்றும் காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர். இதனால் கைது செய்யப்படுவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கலாம் என்று கூறப்படுகிறது.
காவலர் துறையிலும் முறைகேடு:
தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் (TNUSRB), காவல்துறை, சிறைத்துறை, தீயணைப்புத் துறையில் காலியாக உள்ள 8,826 காலிப்பணியிடங்களுக்கு கடந்த ஆண்டு ஆகஸ்ட் 25-ம் தேதி எழுத்து தேர்வு நடத்தியது. இதற்கான தேர்வு முடிவுகள் செப்டம்பர் மாதம் கடைசி வாரத்தில் வெளிவந்தது.
இந்த தேர்விலும் முறைகேடுகள் நடந்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. வேலூர் மாவட்டத்தை சேர்ந்த ஒரு மையத்தில் தேர்வெழுதிய 130-க்கும் அதிகமான தேர்வர்கள் தேர்ச்சி அடைந்திருக்கின்றனர் என்ற தகவல்கள் தற்போதுவெளியாகி வருகின்றது. வேலூர் உள்ள பிரபல தனியார் மையத்தின் மீது அனைவரின் கவனமும் திரும்பியிருக்கிறது.
நீட் தேர்வுக்கான பயற்சி வகுப்புகள் விரைவில் தொடங்கப்படும் : செங்கோட்டையன் அறிவிப்பு
இருப்பினும், தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் காவலர் தேர்வுகளில் எந்தவிதமான முறைகேடுகளும் நடைபெறவில்லை என்று கூறியிருக்கிறது.