Tamil Nadu Government Conducts TNPSC Group 4 Free Motivation Camp In Chennai: டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு எழுதும் தேர்வர்களுக்கு சென்னையில் தமிழக அரசு இலவச ஊக்குவிப்பு முகாம் ஏற்பாடு செய்திருக்கிறது. செவ்வாய்க் கிழமைக்குள் இதற்காக பதிவு செய்ய வேண்டும். புதன்கிழமை இந்த முகாம் நடைபெறும்.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் சார்பில் கிராம நிர்வாக அலுவலர், டைப்பிஸ்ட், பீல்டு சர்வேயர் உள்ளிட்ட 6.491 பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப் 4 தேர்வு, செப்டம்பர் 1ம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்வு எழுத 14 லட்சத்திற்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்திருக்கிறார்கள்.
Free Motivation Camp For TNPSC Group 4 Aspirants: குரூப் 4 தேர்வர்களுக்கு சென்னையில் இலவச முகாம்
இந்தத் தேர்வுக்கான ஹால் டிக்கெட் விரைவில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில் வெளியிடப்பட இருக்கிறது. அதற்கு முன்பாக தேர்வுக்கு தயாராகும் தேர்வர்களுக்கு அரசு சார்பில் ஊக்குவிப்பு முகாம் நடைபெற இருக்கிறது. தமிழ்நாடு அரசு சார்பில் சென்னையில் இயங்கும் அண்ணா இன்ஸ்டிடியூட் ஆஃப் மேனேஜ்மெண்ட் இதை நடத்துகிறது.
டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கு எப்படி தயார் ஆவது? தேர்வில் வெற்றி பெற பாடத்திட்டங்களை எவ்வாறு வகைப்படுத்தி படிப்பது? உள்ளிட்ட தேர்வு குறித்த தகவல்களை இதில் தெரியப்படுத்துவார்கள். அனுபவம் வாய்ந்த சீனியர் ஐஏஎஸ் அதிகாரிகள் இதில் கலந்து கொள்ள வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
இந்த முகாம் முற்றிலும் இலவசம். ஆகஸ்ட் 21ம் தேதி சென்னை சேப்பாக்கம், கலைவாணர் அரங்கத்தில் இது நடைபெற உள்ளது. இந்த இலவச முகாமினை, மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தொடங்கி வைக்கிறார். ஆகஸ்ட் 21ம் தேதி காலை 9.30 மணிமுதல் மாலை 5.30 மணிவரை முகாம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த முகாமில் கலந்துகொள்ள விரும்பும் தேர்வர்கள் ஆகஸ்ட் 20-ம் தேதி (செவ்வாய்க் கிழமை) மாலை 5 மணிக்கு முன்னதாக www.annainstitute.org என்ற இணையதளத்தில் முன்பதிவு செய்துகொள்ள வேண்டும். முகாமில் கலந்துகொள்ளும் தேர்வர்களுக்கு உணவு மற்றும் இன்னபிற வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
முன்பதிவு செய்தவர்கள், ஆகஸ்ட் 21ம் தேதி காலை 9 மணிக்குள் முகாம் நடைபெற உள்ள கலைவாணர் அரங்கத்தில் வருகையை கட்டாயமாக பதிவு செய்ய வேண்டும். முதலில் வரும் ஆயிரம் நபர்களுக்கு மட்டுமே அனுமதி என்பதால், தேர்வர்கள் விரைந்து முன்பதிவு செய்து பயன் பெறலாம்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.