Advertisment

TNPSC Group 4 Notification 2019 : 10ம் வகுப்பு தகுதிக்கே அரசு வேலை ; குரூப் 4 தேர்வு வாய்ப்பை தவறவிட்டுவிடாதீர்கள் மாணவர்களே!!!

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்விற்கான பாடத்திட்டம் ( syllabus) மற்றும் மாதிரி வினாத்தாள் (previous question papers) TNPSC அதிகாரப்பூர்வ இணையதளமான இணையதளத்தில் வழங்கப்பட்டுள்ளன.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
tnpsc group 4, Tamil Nadu Public Service Commission, tnpsc group 4 study material in english pdf free download, tnpsc group 4 syllabus 2019 in tamil pdf free download, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், tnpsc exam.in, tnpsc group 4 syllabus in tamil medium 2019 pdf, வேலைவாய்ப்புச் செய்திகள், tnpsc group 4 jobs details, tnpsc group 4 vacancies

tnpsc group 4, Tamil Nadu Public Service Commission, tnpsc group 4 study material in english pdf free download, tnpsc group 4 syllabus 2019 in tamil pdf free download, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், tnpsc exam.in, tnpsc group 4 syllabus in tamil medium 2019 pdf, வேலைவாய்ப்புச் செய்திகள், tnpsc group 4 jobs details, tnpsc group 4 vacancies

TNPSC 2019 Group 4 Notification Released: தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் என்றழைக்கப்படும் தமிழ்நாடு பப்ளிக் சர்வீஸ் கமிஷன், குரூப் 4 தேர்விற்கான அறிவிப்பை, சில தினங்களுக்கு முன் வெளியிட்டது. 6491 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த பணியிடங்களுக்கு ஜூன் 14 முதல் ஜூலை 14ம் தேதி ஆன்லைன் மூலம் விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம் என டிஎன்பிஎஸ்சி நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisment

200 கேள்விகள்......300 மதிப்பெண்கள் ; 6491 பணியிடங்கள் - கொஞ்சம் முயற்சி, கொஞ்சம் கடினஉழைப்பு - வெற்றி நம்கைவசம்!!!

முக்கிய தேதிகள்

டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வுக்கு விண்ணப்பிக்க கடைசி நாள் – ஜூலை 14, 2019

தேர்வுக் கட்டணம் செலுத்த இறுதி நாள் – ஜூலை 16, 2019

தேர்வு நாள் – செப்டம்பர் 1, 2019

கிராம நிர்வாக அலுவலர் (வி.ஏ.ஒ) – 397 பணியிடங்கள்

இந்த தேர்வின் மூலம் 397 புதிய கிராம நிர்வாக அலுவலர்கள் ( வி.ஏ.ஓ.க்கள்) தேர்ந்தடுக்கப்பட உள்ளனர். இந்த தேர்விற்கு குறைந்தபட்ச கல்வித்தகுதி பத்தாம் வகுப்பாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பத்தாம் வகுப்பிற்கு கூடுதலாக எவ்வளவு படித்திருந்தாலும்,இத்தேர்வில் கல்வித்தகுதிக்குரிய ஆவணமாக பத்தாம் வகுப்பு கல்விச்சான்றிதழே ஏற்றுக்கொள்ளப்படும் . தேர்வர்கள், தமிழ் மொழியில் போதிய புலமை பெற்றிருத்தல் அவசியம். அதேபோல், 2688 பணியிடங்களுக்கான ஜூனியர் அசிஸ்டெண்ட் ( நான்-செக்யூரிட்டி), 34 பணியிடங்களுக்கான பில் கலெக்டர் - கிரேடு-1, 74 பணியிடங்களுக்கான டிராப்ட்ஸ்மேன் உள்ளிட்டவைகளுக்கும் பத்தாம் வகுப்பு தேர்ச்சியே குறைந்தபட்ச கல்வித்தகுதியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

டைப்பிஸ்ட் பணி (1901 பணியிடங்கள்)

10ம் வகுப்பு தேர்ச்சியுடன் டைப்ரைட்டிங் பயிற்சியில் தேர்ச்சி

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் சீனியர் / ஹையர் கிரேடு அல்லது

தமிழ் டைப்ரைட்டிங்கில் சீனியர் கிரேடு மற்றும் ஆங்கிலத்தில் லோயர் கிரேடு அல்லது

ஆங்கிலம் டைப்ரைட்டிங்கில் சீனியர் கிரேடு மற்றும் தமிழில் லோயர் கிரேடு

ஸ்டெனோ டைப்பிஸ்ட் பணி ( 784 பணியிடங்கள்)

10ம் வகுப்பு தேர்ச்சியுடன் டைப்ரைட்டிங் மற்றும் சார்ட்ஹேண்ட் தேர்வில் தேர்ச்சி

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் சீனியர் / ஹையர் கிரேடு அல்லது

தமிழ் டைப்ரைட்டிங்கில் சீனியர் கிரேடு மற்றும் ஆங்கிலத்தில் லோயர் கிரேடு அல்லது

ஆங்கிலம் டைப்ரைட்டிங்கில் சீனியர் கிரேடு மற்றும் தமிழில் லோயர் கிரேடு

கம்ப்யூட்டர் கல்வித்தகுதி

டைப்பிஸ்ட் மற்றும் ஸ்டெனோ டைப்பிஸ்ட் பணிகளுக்கு விண்ணப்பிப்பவர்கள், ஆபிஸ் ஆட்டோமேஷன் கம்ப்யூட்டர் சான்றிதழ் படிப்பை நிறைவு செய்திருத்தல் வேண்டும். இந்த சான்றிதழ் படிப்பை முடிக்காதவர்களும் விண்ணப்பிக்கலாம். பணியின் பயிற்சிகாலத்தினுள் அவர்கள் இந்த படிப்பை நிறைவு செய்திட வேண்டும்.

பீல்டு சர்வேயர் (509 பணியிடங்கள்)

10ம் வகுப்பு தேர்ச்சியுடன் ஐடிஐக்களில் சர்வே குறித்த பயிற்சி பெற்றிருக்க வேண்டும்.

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்விற்கான பாடத்திட்டம் ( syllabus) மற்றும் மாதிரி வினாத்தாள் (previous question papers) TNPSC அதிகாரப்பூர்வ இணையதளமான www.tnpsc.gov.in இணையதளத்தில் வழங்கப்பட்டுள்ளன. தேர்வு குறித்த அதிகபட்ச விபரங்களுக்கும், தேர்வர்கள் இந்த இணையதளத்தையே அணுகுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

Tnpsc
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment