TNPSC Group 4 Notification 2019 : சிறிய முயற்சி; எளிய பயிற்சி - 200 கேள்விகள்......300 மதிப்பெண்கள் ; 6491 பணியிடங்கள் - - வெற்றி நம்கைவசம்!!!

TNPSC Group 4 Notification 2019 : கொஞ்சம் முயற்சி, கொஞ்சம் கடின உழைப்பு இவ்விரண்டும் தேர்வர்களாகிய நம்மிடம் இருந்தால், 6,491 பணியிடங்கள் நமக்காகவே காத்திருக்கின்றது..

TNPSC 2019 Group 4 Notification Released: தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் என்றழைக்கப்படும் தமிழ்நாடு பப்ளிக் சர்வீஸ் கமிஷன், குரூப் 4 தேர்விற்கான அறிவிப்பை, சில தினங்களுக்கு முன் வெளியிட்டது. 6491 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த பணியிடங்களுக்கு ஜூன் 14 முதல் ஜூலை 14ம் தேதி ஆன்லைன் மூலம் விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம் என டிஎன்பிஎஸ்சி நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

10ம் வகுப்பு தகுதிக்கே அரசு வேலை ; குரூப் 4 தேர்வு வாய்ப்பை தவறவிட்டுவிடாதீர்கள் மாணவர்களே!!!

முக்கிய தேதிகள்

டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வுக்கு விண்ணப்பிக்க கடைசி நாள் – ஜூலை 14, 2019
தேர்வுக் கட்டணம் செலுத்த இறுதி நாள் – ஜூலை 16, 2019
தேர்வு நாள் – செப்டம்பர் 1, 2019

தேர்வு வினாத்தாள் முறை ( Exam pattern)

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு 3 மணிநேரம் கால அளவு கொண்டது. 4 விடைகள் கொடுத்து சரியான விடையை தேர்ந்தெடுக்கும் வகையில், தேர்வர்கள் 200 கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டும். அதிகபட்ச மதிப்பெண்கள் 300. இந்த வினாத்தாள் பத்தாம் வகுப்பு கல்வித்தரத்தை அடிப்படையாக கொண்டதாக இருக்கும்.

TNPSC Group 4: டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வு முக்கிய தேதிகள், பணிகள் விவரம்

200 கேள்விகளில் பொதுத்தமிழ் அல்லது பொது ஆங்கிலம் என 100 கேள்விகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

பொதுக்கல்விக்கு (General Studies) என 75 கேள்விகளும் Aptitude Testக்கு என 25 கேள்விகளும் ஒதுக்கப்பட்டுள்ளன.
வினாத்தாளில், General Studies மற்றும் Aptitude Testக்கான வினாக்கள், ஆங்கிலம் மற்றும் தமிழ் மொழியில் இடம்பெற்றிருக்கும். பொதுத்தமிழ் பகுதியில் உள்ள வினாக்கள் தமிழ்மொழியிலும், பொது ஆங்கிலம் (General English) பகுதியில் உள்ள வினாக்கள் ஆங்கிலத்திலும் கேட்கப்பட்டிருக்கும். தேர்வர்கள், பொதுத்தமிழ் அல்லது பொது ஆங்கிலம் தேர்ந்தெடுக்க வேண்டும்.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Education-jobs News by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
×Close
×Close