Advertisment

TNPSC Group 4 Notification 2019 : டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்விற்கான வயதுவரம்பு மற்றும் கல்வித்தகுதி - முழுத்தகவல்கள்

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்விற்கு விண்ணப்பிக்க குறைந்தபட்ச கல்வித்தகுதி பத்தாம் வகுப்பு என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
tnpsc group 4

tnpsc group 4

TNPSC 2019 Group 4 Notification Released: தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் என்றழைக்கப்படும் தமிழ்நாடு பப்ளிக் சர்வீஸ் கமிஷன், குரூப் 4 தேர்விற்கான அறிவிப்பை, சில தினங்களுக்கு முன் வெளியிட்டது.

Advertisment

6491 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த பணியிடங்களுக்கு ஜூன் 14 முதல் ஜூலை 14ம் தேதி ஆன்லைன் மூலம் விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம் என டிஎன்பிஎஸ்சி நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

TNPSC Group 4 Notification 2019 : டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வு பணி விபரங்கள் மற்றும் விண்ணப்பிக்க தேவையான ஆவணங்கள்

பணியிடங்கள்

கிராம நிர்வாக அலுவலர் (வி.ஏ.ஒ) – 397

ஜூனியர் அசிஸ்டெண்ட் (நான் செக்யூரிட்டி) – 2688

பில் கலெக்டர், கிரேடு – I – 34

பீல்டு சர்வேயர் – 509

டிராப்ட்ஸ்மேன் – 74

டைப்பிஸ்ட் – 1901

ஸ்டெனோ டைப்பிஸ்ட் – 784

TNPSC Group 4 2019 Syllabus: ஆங்கிலம், அறிவியல், அரசியல் கொஞ்சம் வரலாறு! - டி.என்.பி.எஸ்.சி குரூப் 4-க்கு அப்ளை செய்யுங்கள்!

முக்கிய தேதிகள்

டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வுக்கு விண்ணப்பிக்க கடைசி நாள் – ஜூலை 14, 2019

தேர்வுக் கட்டணம் செலுத்த இறுதி நாள் – ஜூலை 16, 2019

தேர்வு நாள் – செப்டம்பர் 1, 2019

குரூப் 4 தேர்வுக்கு விண்ணப்பிக்க வயது மற்றும் கல்வித்தகுதி நிர்ணயம் செய்யப்பட்டுள்ளன.

கிராம நிர்வாக அலுவலர் பணியிடத்திற்கான வயது வரம்பு :

கிராம நிர்வாக அலுவலர் ( வி.ஏ.ஓ.) பணிக்கு குறைந்தபட்ச வயது 21 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதிகபட்ச வயது 30 ஆக வரையறுக்கப்பட்டுள்ளது.

அதிகபட்ச வயது வரம்புவில், இதர பிரிவினரை தவிர்த்து மற்ற வகுப்பினருக்கு வயதுவரம்பில் தளர்வு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

எஸ்.சி, எஸ்சி(ஏ). எஸ்டி., மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பு

பிற்படுத்தப்பட்ட வகுப்பு மற்றும் இதர பிரிவுகளில் உள்ள 40 வயது

ஆதரவற்ற விதவைகள்

எஸ்.சி, எஸ்சி(ஏ). எஸ்டி., மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பு

பிற்படுத்தப்பட்ட வகுப்புகளில் உள்ள முன்னாள் ராணுவ வீரர்களுக்கு 53 வயது

இதர வகுப்புகளில் உள்ள முன்னாள் ராணுவ வீரர்களுக்கு 48 வயது

மாற்றுத்திறனாளி பிரிவினருக்கு அதிகபட்ச வயது வரம்பிலிருந்து கூடுதலாக 10 ஆண்டுகள்

இதர பிரிவினருக்கு 30 வயது

இதர பணியிடங்களுக்கான வயது வரம்பு

ஸ்டெனோ டைப்பிஸ்ட் கிரேடு 3, டைப்பிஸ்ட், டிராப்ட்ஸ்மேன், பீல்டு சர்வேயர், பில் கலெக்டர் கிரேடு 1, ஜூனியர் அசிஸ்டெண்ட் ( செக்யூரிட்டி) மற்றும் ஜூனியர் அசிஸ்டெண்ட் ( நான்-செக்யூரிட்டி) பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க குறைந்தபட்ச வயது 18 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

டிராப்ட்ஸ்மேன் மற்றும் பீல்டு சர்வேயர் பணி - தமிழ்நாட்டிலுள்ள

ஐடிஐகளில் பயிற்சி பெற்றவர்களுக்கு 35 வயது

பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மற்றும்

பிற்படுத்தப்பட்ட வகுப்பு ( இஸ்லாமியர்) 32 வயது

எஸ்சி, எஸ்சி (அருந்ததியர்), எஸ்டி மற்றும் அனைத்து பிரிவுகளிலும் உள்ள

ஆதரவற்ற விதவைகள் 35 வயது

இதர பிரிவினருக்கு 30 வயது

மாற்றுத்திறனாளி பிரிவினருக்கு அதிகபட்ச வயது வரம்பிலிருந்து கூடுதலாக 10 ஆண்டுகள்

எஸ்.சி, எஸ்சி(ஏ). எஸ்டி., மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பு

பிற்படுத்தப்பட்ட வகுப்புகளில் உள்ள முன்னாள் ராணுவ வீரர்களுக்கு 53 வயது

இதர வகுப்புகளில் உள்ள முன்னாள் ராணுவ வீரர்களுக்கு 48 வயது

வயது வரம்பு மற்றும் வயது வரம்பு தளர்வு குறித்த அதிக விபரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை சரிபார்க்கவும்.

கல்வித்தகுதி

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்விற்கு விண்ணப்பிக்க குறைந்தபட்ச கல்வித்தகுதி பத்தாம் வகுப்பு என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர் மேற்படிப்பு படித்திருந்தாலும், அவரது பத்தாம் வகுப்பு தேர்ச்சி விபரமே, கல்வித்தகுதிக்கான ஆதாரமாக எடுத்துக்கொள்ளப்படும்.

டைப்பிஸ்ட் பணிக்கு

10ம் வகுப்பு தேர்ச்சியுடன் டைப்ரைட்டிங் பயிற்சியில் தேர்ச்சி

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் சீனியர் / ஹையர் கிரேடு அல்லது

தமிழ் டைப்ரைட்டிங்கில் சீனியர் கிரேடு மற்றும் ஆங்கிலத்தில் லோயர் கிரேடு அல்லது

ஆங்கிலம் டைப்ரைட்டிங்கில் சீனியர் கிரேடு மற்றும் தமிழில் லோயர் கிரேடு

ஸ்டெனோ டைப்பிஸ்ட் பணிக்கு

10ம் வகுப்பு தேர்ச்சியுடன் டைப்ரைட்டிங் மற்றும் சார்ட்ஹேண்ட் தேர்வில் தேர்ச்சி

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் சீனியர் / ஹையர் கிரேடு அல்லது

தமிழ் டைப்ரைட்டிங்கில் சீனியர் கிரேடு மற்றும் ஆங்கிலத்தில் லோயர் கிரேடு அல்லது

ஆங்கிலம் டைப்ரைட்டிங்கில் சீனியர் கிரேடு மற்றும் தமிழில் லோயர் கிரேடு

கம்ப்யூட்டர் கல்வித்தகுதி

டைப்பிஸ்ட் மற்றும் ஸ்டெனோ டைப்பிஸ்ட் பணிகளுக்கு விண்ணப்பிப்பவர்கள், ஆபிஸ் ஆட்டோமேஷன் கம்ப்யூட்டர் சான்றிதழ் படிப்பை நிறைவு செய்திருத்தல் வேண்டும். இந்த சான்றிதழ் படிப்பை முடிக்காதவர்களும் விண்ணப்பிக்கலாம். பணியின் பயிற்சிகாலத்தினுள் அவர்கள் இந்த படிப்பை நிறைவு செய்திட வேண்டும்.

பீல்டு சர்வேயர்

10ம் வகுப்பு தேர்ச்சியுடன் ஐடிஐக்களில் சர்வே குறித்த பயிற்சி பெற்றிருக்க வேண்டும்.

மற்ற அனைத்து பணியிடங்களுக்கும் 10ம் வகுப்பு தேர்ச்சியே, குறைந்தபட்ச தேர்ச்சியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாது, விண்ணப்பதாரர்கள் தமிழ் மொழியில் போதிய புலமை பெற்றிருக்கவேண்டும்.

Tnpsc
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment