TNPSC Group 4 Pass Mark 2019: தமிழ்நாடு சிவில் நீதிபதிகளுக்கான தேர்வை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்திருக்கிறது. செப்டம்பர் 9 முதல் அக்டோபர் 9 முதல் இந்தத் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம். ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். இதற்கிடையே டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வுக்கான விடைத்தாள், கட் ஆஃப் மதிப்பெண் விவரங்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Advertisment
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் சார்பில் தமிழ்நாடு சிவில் நீதிபதிகளுக்கான தேர்வு அறிவிக்கப்பட்டிருக்கிறது. டி.என்.பி.எஸ்.சி அதிகாரபூர்வ இணையதளமான tnpsc.gov.in -ல் செப்டம்பர் 9 முதல் இந்தத் தேர்வுக்கு விண்ணப்பிக்க முடியும். ஆன் லைனில் மட்டுமே விண்ணப்பிக்கலாம்.
Tamil Nadu Public Service Commission Latest News: டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு
விண்ணப்பிக்க இறுதி தேதி அக்டோபர் 9 ஆகும். இந்தத் தேர்வுக்கான கட்டணம் 650 ரூபாய். எஸ்.சி, எஸ்.டி பிரிவினருக்கு கட்டணம் கிடையாது. நவம்பர் 24-ம் தேதி இந்தத் தேர்வு நடைபெறும். 3 கட்டங்களாக தேர்வு முறை அமையும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தத் தேர்வு தொடர்பான முழு விவரங்களை அரசுப் பணியாளர் தேர்வாணைய இணையதளத்தில் காணலாம்.
இதற்கிடையே டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு கடந்த 1-ம் தேதி நடைபெற்றது. இதற்கான விடைத்தாள், கட் ஆஃப் மதிப்பெண் பற்றிய விவரங்களுக்கு 13 லட்சத்திற்கும் மேற்பட்ட தேர்வர்கள் காத்திருக்கிறார்கள். எந்த நேரமும் டி.என்.பி.எஸ்.சி இணையதளத்தில் அவை வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.