தமிழகத்தில் அமைச்சரவை பணிகள், தட்டச்சாளர், கிராம நிர்வாக அலுவலர் உள்ளிட்ட பல்வேறு பதவியிடங்களுக்கு தேர்வர்களை நேரடியாக ஆட்சேர்ப்பு செய்வதற்காக ஒருங்கிணைந்த சிவில் சர்வீசஸ் தேர்வு – 4 (குரூப்- IV) ஐ தமிழ்நாடு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி) நடத்துகிறது.
இந்த கட்டுரையில் டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வு முறை பற்றி விரிவாகப் பார்ப்போம் வாருங்கள்.
கொள்குறி வினா (ஓஎம்ஆர்) வகையில் கேள்விகள் இருக்கும்.
பொது அறிவில் 75 வினாக்கள், திறனறிவு மற்றும் புத்திகூர்மை 25 வினாக்கள், பொது தமிழ் அல்லது பொது ஆங்கிலம் நூறு வினாக்கள் இருக்கும். மொத்தம் 200 மதிப்பெண்கள். 3 மணி நேரம் கால அவகாசம் தரப்படும்.
தேர்வர்கள் தங்களுக்கு வழங்கப்பட்ட ஓஎம்ஆர் தாளில் பதில்களை குறிக்க வேண்டும். தேர்வை வெற்றிகரமாக நடத்திய பின்னர், டி.என்.பி.எஸ்.சி விடைகளை வெளியிடுகிறது. இது தேர்வர்களுக்கு அவர்களின் பதில்களைக் சரிபார்க்க உதவுகிறது. இதன்மூலம் ஏதேனும் விடைகளில் தவறு இருந்தால் ஆட்சேபனைகளை மாணவர்கள் எழுப்பலாம்.
தமிழ்நாடு மருத்துவத்துறையில் 238 பணியிடங்கள்; 12-ம் வகுப்பு, டிகிரி படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!
டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வில் சரியான பதில்களுக்கு தலா 1.5 மதிப்பெண் வழங்கப்படும் தவறான பதில்களுக்கு எந்த மதிப்பெண் குறைப்பும் செய்யப்படாது. பொது அறிவியல், நாட்டு நடப்புகள், புவியியல்,
இந்தியா மற்றும் தமிழகத்தின் வரலாறு மற்றும் கலாசாரம் இந்திய அரசியல், இந்தியப் பொருளாதாரம்,
இந்திய தேசிய இயக்கம் ஆகியவற்றை பொது அறிவு பிரிவில் பாடங்களாக இருக்கும்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil