Advertisment

TNPSC Group 4 Counseling: குரூப் 4 தேர்வர்களுக்கு ஹேப்பி நியூஸ்; கவுன்சலிங் தேதிகள் அறிவிப்பு

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் குரூப் 4 தேர்வு கவுன்சலிங் தேதிகள் அறிவிப்பு; தேர்வானவர்களின் பட்டியல் இங்கே

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
tnpsc

tnpsc

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் குரூப் 4 தேர்வுக்கான கவுன்சிலிங் தேதிகளை அறிவித்துள்ளது. கலந்தாய்வு ஜூலை 20 ஆம் தேதி முதல் தொடங்குகிறது.

Advertisment

தமிழக அரசுத்துறைகளில் உள்ள நான்காம் நிலை பணியிடங்கள் மற்றும் வி.ஏ.ஓ பணியிடங்கள் குரூப் 4 தேர்வு மூலம் நிரப்பப்படுகிறது. இந்த ஆண்டுக்கான குரூப் 4 தேர்வு 2022 ஆம் ஆண்டு ஜூலை 24 ஆம் தேதி நடைபெற்றது. இந்த குரூப் 4 தேர்வு 7301 பணியிடங்களுக்கு நடைபெற்றது. பின்னர் தேர்வு முடிவுகள் வெளியிடும் நேரத்தில், குரூப் 4 தேர்வுக்கான காலியிடங்கள் 10,117 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளதாக தேர்வாணையம் அறிவித்தது.

இதையும் படியுங்கள்: அறநிலையத் துறை வேலை வாய்ப்பு; குறைந்தபட்ச தகுதி போதும்! உடனே விண்ணப்பிங்க!

இருப்பினும் தேர்வர்கள், கல்வியாளர்கள், அரசியல் கட்சி தலைவர்கள் எனப் பலரும் குரூப் 4 பணியிடங்களை அதிகரிக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்து வந்தனர். இந்தநிலையில், தேர்வாணையம் குரூப் 4 பணியிடங்களை 10,178 ஆக அதிகரித்து அறிவித்தது.

குரூப் 4 தேர்வுக்கான முடிவுகள் இந்த ஆண்டு மார்ச் மாதம் 24 ஆம் தேதி வெளியிடப்பட்டது. அதனைத் தொடர்ந்து தகுதிப்பெற்றவர்கள் சான்றிதழ்களை இணையதளம் மூலம் பதிவேற்றம் செய்ய அறிவுறுத்தப்பட்டனர்.

இந்தநிலையில் குரூப் 4 கலந்தாய்வுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, கலந்தாய்வு ஜூலை 20 ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 10 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. கலந்தாய்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்புக்கு தேர்வானவர்களின் தனிப்பட்ட மின்னஞ்சல் முகவரிக்கு, கலந்தாய்வு நடைபெறும் தேதி, நேரம் மற்றும் தேவையான ஆவணங்கள் அடங்கிய விவரங்கள் அனுப்பப்பட்டுள்ளதாக தேர்வாணையம் தெரிவித்துள்ளது. முதற்கட்டமாக கலந்தாய்வுக்கு 8500 பேர் அழைக்கப்பட்டுள்ளனர். கலந்தாய்வு சென்னையில் உள்ள தேர்வாணைய அலுவலகத்தில் நடைபெறுகிறது.

கவுன்சிலிங்கிற்கு தேர்வு செய்யப்பட்டவர்களின் விவரங்களை இந்த இணைப்பில் காணலாம்: https://www.tnpsc.gov.in/Document/Counselling/sel_COUNS_JA_VAO.pdf

இந்த குரூப் 4 தேர்வானது இளநிலை உதவியாளர், கிராம நிர்வாக அலுவலர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர், வரித் தண்டலர், கள உதவியாளர், பண்டக காப்பாளர் ஆகிய பணியிடங்களுக்கு நடைபெற்றது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tnpsc Tnpsc Group4
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment