டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வுகளுக்கான கட் ஆஃப் மதிப்பெண்கள் நீதிமன்ற தீர்ப்புக்கு பிறகு எப்படி இருக்கும் என தேர்வர்களுக்கு சந்தேகம் எழுந்துள்ளது. எனவே கட் ஆஃப் எவ்வளவு இருக்கும் என்பதை இப்போது பார்ப்போம்.
தமிழக அரசுத்துறைகளில் உள்ள நான்காம் நிலை பணியிடங்கள் மற்றும் வி.ஏ.ஓ பணியிடங்கள் குரூப் 4 தேர்வு மூலம் நிரப்பப்படுகிறது. இந்த ஆண்டுக்கான குரூப் 4 தேர்வு ஜூலை 24 ஆம் தேதி நடைபெற்றது. இந்த குரூப் 4 தேர்வு 7301 பணியிடங்களுக்கு நடைபெற்றது. இதற்கான தேர்வு முடிவுகள் அக்டோபர் மாதத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது.
இதையும் படியுங்கள்: திருவாரூர் மத்திய பல்கலை. வேலைவாய்ப்பு; 10-ம் வகுப்பு தகுதி; உடனே அப்ளை பண்ணுங்க!
ஆனால் இடஒதுக்கீட்டு வழக்கின் நீதிமன்ற தீர்ப்பால், தேர்வாணையத்தின் தேர்வு முடிவுகள் வெளியாகுவதில் தாமதம் ஏற்பட்டது. தீர்ப்புக்கு ஏற்ப முடிவுகளில் மாற்றங்கள் செய்யப்பட்டு, தற்போது குரூப் 2 தேர்வுக்கான முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. மேலும், குரூப் 4 தேர்வு முடிவுகள் டிசம்பர் மாதத்தில் வெளியாகும் என்றும் தேர்வாணையம் அறிவித்துள்ளது.
முந்தைய குரூப் 4 தேர்வுகளில் முதல் பகுதியில் தமிழ் அல்லது ஆங்கிலத்தை விருப்ப பாடமாக தேர்வர்கள் தேர்வு செய்துக் கொள்ளலாம். ஆனால் தமிழக அரசு தமிழ் மொழித் தகுதி தேர்வை கட்டாயமாக்கியுள்ளதால், ஆங்கில பாடத்தில் இதற்கு முன்னர் தயாராகி வந்தவர்கள் சற்று சிரமப்பட்டிருக்கலாம். இது கடந்த சில வருடங்களாக தமிழ் பாடத்தில் தயாராகி வந்தவர்களுக்கு சற்று சாதகமானதாக இருக்கலாம்.
கடந்த சில ஆண்டுகளாக டிகிரி அல்லது அதற்கு மேல் படித்தவர்களே குரூப் 4 தேர்வில் அதிக அளவில் தேர்ச்சி பெற்று வந்தனர். அதிலும் குரூப் 1 அல்லது குடிமை பணி தேர்வுக்கு தயாராகி வருபவர்கள் ஆங்கில பாடத்தை எடுத்து, குறிப்பிடத்தக்க அளவில் தேர்ச்சி பெற்று வந்தனர். ஆனால், இந்த முறை தமிழ் கட்டாயமாக்கப்பட்டுள்ளதால், தமிழில் 90க்கு மேல் எடுப்பவர்களுக்கு வேலை கிடைக்கும் சூழல் உள்ளது.
மேலும், பொது அறிவு வினாக்கள் குரூப் 4 தரத்திலே இருந்ததால், இந்த தேர்வுக்கு மற்றும் தயாராகி வருபவர்களுக்கு அது சாதகமாக இருக்கலாம். எனவே தமிழில் 90 மதிப்பெண்களுக்கு மேலும், பொது அறிவில் 40-50 மதிப்பெண்களும், கணிதத்தில் 20 மதிப்பெண்களும், இந்தத் தேர்வுக்கு மட்டும் தயாராகி வருபவர்களால் எளிதாக எடுக்க முடியும் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
அதன் அடிப்படையில், இந்த குரூப் 4 தேர்வுக்கான கட் ஆஃப் எப்படி இருக்கும் என்பதை இப்போது பார்ப்போம். இங்கு கட் ஆஃப் மதிப்பெண்கள் என குறிப்பிடப்படுவது, கேள்விகளின் எண்ணிக்கையே, தேர்வுக்கான மதிப்பெண்கள் அளவு அல்ல. மொத்தம் 200 கேள்விகளுக்கு எத்தனை வினாக்கள் சரி என்பதையே, நாம் இங்கு கட் ஆஃப் மதிப்பெண்களாக குறிப்பிட்டு இருக்கிறோம்.
இந்த ஆண்டு பொது பிரிவினருக்கான கட் ஆஃப் 173 க்கும் மேலும், BC பிரிவினருக்கு 168 க்கும் மேலும், MBC பிரிவினருக்கு 166க்கு மேலும், SC பிரிவினருக்கு 158க்கு மேலும், BCM பிரிவினருக்கு 154க்கு மேலும், SCA பிரிவினருக்கு 152க்கு மேலும், ST பிரிவினருக்கு 153 க்கும் மேலும் இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இந்தப் பணியிடங்களில் ஒவ்வொரு பிரிவிலும் பெண்களுக்கு 1-2 மதிப்பெண்கள் குறைவாக இருக்க வாய்ப்புள்ளது.
ஒட்டுமொத்தமாக இந்த கட் ஆஃப் மதிப்பெண்களில் 3-5 மதிப்பெண்கள் வரை கூடுதலாகவோ அல்லது குறைவாகவோ வரலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. அதேநேரம், தமிழ் வழியில் படித்தவர்களுக்கு அனைத்து பிரிவுகளிலும் 3-4 வினாக்கள் வரை குறைய வாய்ப்பு உள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.