டிஎன்பிஎஸ்சி குரூப் I பாடத்திட்டம் மாற்றம் : டவுன்லோட் செய்வது எப்படி?

இந்த கூடுதல் பாடத்திட்டங்கள் மாணவர்கள் மத்தியில் எத்தகைய தாக்கங்களை  ஏற்படுத்தும் என்று பொருத்து இருந்துதான் பார்க்கவேண்டும்

TNPSC Group I Exam Syllabus Changed: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் மிகவும் மதிப்பு வாய்ந்த தேர்வாகக் கருதப்படும் குரூப் I தேர்வுக்கான அறிவிப்பை கடந்த ஜனவரி ஒன்றாம் தேதி வெளியிட்டது. அதன் தொடர்ச்சியாக, டிஎன்பிஎஸ்சி தற்போது குரூப்-I தேர்வுக்கான பாடத்திட்டத்திலும் (சிலபஸ்) சில அதிரடி மாற்றங்களை கொண்டுவந்துள்ளது.

TNPSCயிலும் அறிமுகம் ஆனது தகுதித்தேர்வு – தேர்வர்களே மாற்றத்திற்கு தயாராவீர்…

  1. History, Culture, Heritage and Socio – Political Movements in Tamil Nadu ( தமிழ் சமூகத்தின் வரலாறு)
  2. Development Administration in Tamil Nadu

என கூடுதலாக இரண்டு பிரிவுகள் டிஎன்பிஎஸ்சி குரூப் – I முதல்நிலைத் தேர்வில் சேர்க்கப்பட்டுள்ளன.

டிஎன்பிஎஸ்சி தேர்வர்கள் : இந்த 5 Current Affairs-யும் படிச்சாச்சா?

தமிழ் சமூகத்தின் வரலாறு பிரிவில்: திருக்குறள், சுதந்திரப் போராட்டத்தில் தமிழகத்தின் பங்கு, நீதிக் கட்சி, பகுத்தறிவின் வளர்ச்சி, சுய மரியாதை இயக்கம், திராவிட இயக்கம், தந்தை பெரியார் மற்றும் பேரறிஞர் அண்ணாவின் பங்களிப்பு  போன்ற தலைப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன.

 

தமிழ்நாட்டில் வளர்ச்சிக்கான நிர்வாகம் என்ற ஒன்பதாவது பிரிவில்:  தமிழ்நாட்டில் மனித மேம்பாட்டு குறியீடுகள்,
தமிழகத்தின் சமூக சீர்திருத்த இயக்கத்தால் ஏற்பட்ட சமூக, பொருளாதார  மாற்றம், இடஒதுக்கீடு கொள்கை, தமிழகத்தில் கல்வி மற்றும் சுகாதார அமைப்புகள், பல்வேறு துறைகளில் தமிழ்நாட்டின் சாதனைகள்… போன்ற பல்வேறு தலைப்புகள் சேர்க்கப்பட்டுள்ளன

புது பாடத்திட்டத்தை டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்

 

 

முதல் நிலைத் தேர்வில் கூடுதலாக இரண்டு பிரிவுகள் சேர்கப்பட்டுள்ளதால் குரூப் I முதல்நிலைத் தேர்வில் ஆப்டிடியூட் கேள்விகள் குறைவாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த கூடுதலான பாடப்பிரிவுகள் மாணவர்கள் மத்தியில் எத்தகைய தாக்கங்களை ஏற்படுத்தும் ?  என்பதை பொருத்திருந்துதான் பார்க்கவேண்டும் என்று கல்வியாளர்கள் கருத்து தெரவித்து வருகின்றனர்.

முன்னதாக, குரூப் 2 போட்டித் தேர்வில், முதன்மைத் தேர்வுக்கான தேர்ச்சி நடைமுறையில் பல  மாற்றம் கொண்டுவந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Education-jobs News by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Just Now
X
×Close
×Close