18 துணை ஆட்சியர், 19 காவல்துறை துணை கண்காணிப்பாளர உட்பட்ட மொத்த 69 காலி பணியிடங்களுக்கு குரூப் I தேர்வுக்கான விண்ணப்ப செயல்முறை நேற்றோடு முடிவதுள்ளது. இன்னும் சில நாட்களில் இதற்கான அட்மிட் கார்டு வெளியாகும். குரூப் I முதல்நிலை தேர்வு வரும் ஏப்ரல் மாதம் ஐந்தாம் தேதி நடத்தப்படும்.
முதல்நிலைத் தேர்வு :
History, Culture, Heritage and Socio–Political Movements in Tamil Nadu (தமிழ் சமூகத்தின் வரலாறு) Development Administration in Tamil Nadu (தமிழ்நாட்டில் வளர்ச்சிக்கான நிர்வாகம்) என்று இரண்டு பிரிவுகள் குரூப் I ப்ரிலிம்ஸ் தேர்வில் கூடுதலாக சேர்கப்பட்டுள்ளது.
பொதுவாக 50 கேள்விகள் இந்த ஆப்டிடியூட் புகுதிகளில் இருந்து வரும், ஆனால் தற்போது அவை 25 கேள்விகளாக குறைக்கப்பட்டுள்ளது.
குரூப் I தேர்வு: பிப்ரவரி மாத முக்கிய 5 கரண்ட் அப்பைர்ஸ்
தமிழ் சமூகத்தின் வரலாறு பிரிவில் நாம் படிக்க வேண்டியவை:
தமிழ்நாட்டில் வளர்ச்சிக்கான நிர்வாகம் என்ற பிரிவில் நாம் கூடுதலாக படிக்க வேண்டியைவை: தமிழ்நாட்டில் மனித மேம்பாட்டு குறியீடுகள், தமிழகத்தின் சமூக சீர்திருத்த இயக்கத்தால் ஏற்பட்ட சமூக,பொருளாதார மாற்றம், இடஒதுக்கீடு கொள்கை, தமிழகத்தில் கல்வி மற்றும் சுகாதார அமைப்புகள், பல்வேறு துறைகளில் தமிழ்நாட்டின் சாதனைகள்…
இந்த இரண்டு பிரிவுகளும் முதல் முறையாக சேர்க்கப்பட்டுள்ளதால் கேள்விகள் மிகவும் கடினமாக இருக்க வாய்ப்பில்லை என்று கருதப்படுகிறது.
குரூப் I முதல்நிலைத் தேர்வு பொறுத்த மட்டில் தமிழ்நாடு பாட நூல்கள் மிகவும் முக்கியம். 10,11,12 பாட நூல்களை படித்தாலே முக்கால் வாசி கேள்விகளுக்கு நம்மால் விடையளிக்க முடியும்.
சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் தமிழ்நாட்டு பாட நூல்கள் விலைக்கு விற்கப்படுகின்றன. ஆர்வமுள்ளவர்கள், இங்கே சென்று வாங்கி கொள்ளலாம்.