குரூப் I தேர்வு: பிப்ரவரி மாத முக்கிய 5 கரண்ட் அப்பைர்ஸ்

Tnpsc Group I Exam Preparation: குரூப் I தேர்வுக்கு விண்ணபிக்க பிப்ரவரி 19ம் தேதி  கடைசி தேதியாகும்.குரூப் I முதல்நிலை மற்றும் முதன்மை தேர்வுக்கான கரண்ட் அப்பைர்ஸ் இங்கே

TNPSC Exam Scam, TNPSC 2020
TNpsc Group I preparation, Syllabus, Tnpsc Group I Current Affairs

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் மிகவும் மதிப்பு வாய்ந்த தேர்வாகக் கருதப்படும் குரூப் I தேர்வுக்கான அறிவிப்பை கடந்த ஜனவரி ஒன்றாம் தேதி வெளியிட்டது. அதன் தொடர்ச்சியாக, டிஎன்பிஎஸ்சி தற்போது குரூப்-I தேர்வுக்கான பாடத்திட்டத்திலும் (சிலபஸ்) சில அதிரடி மாற்றங்களை கொண்டுவந்துள்ளது.

குரூப் I தேர்வுக்கு விண்ணபிக்க பிப்ரவரி 19ம் தேதி  கடைசி தேதியாகும்.

மேலும் விவரகங்களுக்கு: டிஎன்பிஎஸ்சி குரூப் I பாடத்திட்டம் மாற்றம் : டவுன்லோட் செய்வது எப்படி?

குரூப் I முதல்நிலை மற்றும் முதன்மை தேர்வுக்கான கரண்ட் அப்பைர்ஸ் இங்கே:

1. இடம்பெயரும் பறவை இனங்கள் தொடர்பான ஐநா அமைப்பின் தலைமைப் பொறுப்பை இந்தியா ஏற்றுக் கொண்டுள்ளது

இடம்பெயரும் பறவை இனங்கள் தொடர்பான ஐநா அமைப்பின் 13-ஆவது மாநாடு காந்தி நகரில் (17.02.2020), 130 நாடுகளைச் சேர்ந்த உயர் அதிகாரிகள், சுற்றுச்சூழல் வழக்கறிஞர்கள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் உயிரி பன்முகத் தன்மை வல்லுநர்கள் முன்னிலையில் தொடங்கியது.  நரேந்திர மோடி காணொலிக் காட்சி வாயிலாக இந்த ஐநா மாநாட்டைத் தொடங்கி வைத்தார்.

இந்த மாநாட்டில், இடம்பெயரும் பறவைகளுக்கான ஐநா அமைப்பின் அடுத்த மூன்றாண்டுகளுக்கான தலைமைப் பொறுப்பை இந்தியா இன்று ஏற்றுக் கொண்டது. இந்த மாநாடு இந்தியாவில் நடைபெறுவது இடம்பெயரும் பறவைகள் மற்றும் அவற்றின் வாழ்விடங்கள் மீது சிறப்புக் கவனம் செலுத்துவதற்கான தொடக்கத்தைக் குறிப்பதாக உள்ளது .


இடம்பெயரும் பறவைகள், பாலூட்டிகள் மற்றும் நீர்வாழ் உயிரினங்கள், இடம்பெயரும் போது, அதிகளவில் அழிவை சந்திக்க வேண்டியிருப்பதால், இவற்றை பாதுகாக்க சம்பந்தப்பட்ட நாடுகள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டியது அவசியம்.

2. நாட்டின் 11 ஆவது பாதுகாப்பு கண்காட்சியைத் தொடங்கி வைத்தார் பிரதமர்

பிரதமர் நரேந்திர மோடி கடந்த பிப்ரவரி ஐந்தாம் தேதி உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் 11 ஆவது பாதுகாப்பு கண்காட்சியை தொடங்கி வைத்தார். இரண்டாண்டுக்கு ஒருமுறை நடைபெறும் இந்தியாவின் ராணுவக் கண்காட்சி, உலகளாவில் பாதுகாப்பு உற்பத்தி மையமாக நாடு உருவெடுப்பதை பிரதிபலிப்பதாகும். பாதுகாப்புக் கண்காட்சி 2020 இந்தியாவின் பெரிய பாதுகாப்பு கண்காட்சித் தளங்களில் ஒன்றாக மாறியுள்ளதுடன் உலகளவில் முன்னோடி பாதுகாப்புக் கண்காட்சியாகவும் திகழ்கிறது. இந்த முறை ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாதுகாப்பு உற்பத்தியாளர்கள் மற்றும் உலகம் முழுவதிலும் இருந்து 150 நிறுவனங்கள் கண்காட்சியில் பங்கேற்றுள்ளன.

3.ஸ்ரீ ராம் ஜென்ம பூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளை:

உச்சநீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் ‘ஸ்ரீ ராம் ஜென்ம பூமி தீர்த்த ஷேத்ரா’ அறக்கட்டளை அமைப்பதற்கான ஒப்புதலை மத்திய அரசு வழங்கியுள்ளது. அயோத்தியாவில் பிரம்மாண்டமான ராமர் கோயில் கட்டுவதற்கான அனைத்து முடிவுகளையும் சுயேச்சையான இந்த அறக்கட்டளை மேற்கொள்ளும்

உச்சநீதிமன்ற உத்தரவின்படி சன்னி வக்ஃப் வாரியத்திற்கு 5 ஏக்கர் நிலம் ஒதுக்க உத்திர பிரேதச அரசிடம் மத்திய அரசு கேட்டுக் கொண்டது என்றும், அம் மாநில அரசு இதனை ஏற்றுக் கொண்டுள்ளது.

அயோத்தியில் ராமர் கோயில் கட்ட டிரஸ்ட் அமைப்பு – யார் யார் உறுப்பினர்கள்? முழு விபரம் இதோ

பாபர் மசூதி விவகாரம் : புதிய மசூதி கட்ட 5 ஏக்கர் நிலத்தை அறிவித்தது உ.பி. அரசு!

அயோத்தி ராமர் கோவில் முஸ்லீம்களின் கல்லறைகள் மீதா கட்டப்படும்? அறக்கட்டளைக்கு கடிதம்!

பிரம்மாண்டமான ராமர் கோயில் கட்டுமானத்தையும், எதிர்காலத்தில் ராம் லல்லாவுக்கு வழிபாடு செய்ய வரும் பக்தர்களின் உணர்வையும் மனதில் கொண்டு ஆர்ஜிதம் செய்யப்பட்டுள்ள சுமார் 67.703 ஏக்கர் நிலத்தையும் தற்போது உருவாக்கப்பட்டுள்ள ஸ்ரீ ராம் ஜென்ம பூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளைக்கு மாற்றுவது என அரசு முடிவு செய்துள்ளது.

4. இடஒதுக்கீடு  அடிப்படை உரிமை இல்லை – உச்ச நீதிமன்றம்

அரசு பணிகளில் பதவி உயர்வுகளுக்கு இட ஒதுக்கீடு அளிக்கப்பட வேண்டியது அவசியமில்லை என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பினை வழங்கியது. இந்த இடஒதுக்கீடானது அடிப்படை உரிமை இல்லை என்றும், மாநில அரசுகள் இடஒதுக்கீடு அடிப்படையில் பதவி உயர்வுகளை வழங்க வேண்டும் என கட்டாயப்படுத்தக் கூடாது என்றும் உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது.

பதவி உயர்வு இட ஒதுக்கீடு விவகாரம்: உச்சநீதிமன்ற ‘கட்டளைப் பேராணை’ என்பது என்ன?

ஒதுக்கீடு அடிப்படையில் உயர்ப்பதவிகளை நிரப்புமாறு மாநில அரசுகளுக்கு மண்டமஸ் எனப்படும் கட்டளை ஆணையை பிறப்பிக்க இயலாது என்றும் கூறியுள்ளது நீதிபதிகள் எல். நாகேஸ்வரராவ் மற்றும் ஹேமந்த் குப்தா அடங்கிய அமர்வு.

5. மருத்துவ ரீதியிலான கருக்கலைப்பு திருத்த மசோதா 2020-க்கு அமைச்சரவை ஒப்புதல்

1971ம் ஆண்டின் மருத்துவ ரீதியிலான கருக்கலைப்பு சட்டத்தில் திருத்தம் கொண்டு வருவதற்கான, மருத்துவ ரீதியிலான கருக்கலைப்பு திருத்த மசோதா 2020-க்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. இந்த மசோதா நாடாளுமன்றத்தின் வரும் கூட்டத் தொடரில் தாக்கல் செய்யப்படும்.

6. பிம்ஸ்டெக்  போதைப் பொருள் கடத்தல் தடுப்பு மாநாட்டு

பிம்ஸ்டெக் (பலவகை தொழில்நுட்பம் மற்றும் பொருளாதார ஒத்துழைப்புக்கான வங்காள விரிகுடா முன்முயற்சி) நாடுகள் பங்கேற்கும் ‘போதைப் பொருள் கடத்தல் தடுப்பு மாநாட்டினை’ மத்திய உள்துறை அமைச்சர் புதுதில்லியில் பிப்ரவரி 13ம் தேதி தொடங்கிவைத்தார்

2018-ல் காட்மாண்டுவில் நடைபெற்ற நான்காவது பிம்ஸ்டெக் உச்சிமாநாட்டில், பிரதமர்  நரேந்திர மோடி அளித்த வாக்குறுதியைத் தொடர்ந்து, போதைப் பொருள் கட்டுப்பாட்டு அமைப்பு இந்த மாநாட்டிற்கு ஏற்பாடு செய்துள்ளது. போதைப் பொருள் கடத்தலால் ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல்கள் குறித்தும், உறுப்புநாடுகள் பின்பற்றும் சிறந்த நடைமுறைகளில் இருந்து கற்றறிந்து இந்த அச்சுறுத்தல்களை முறியடிக்கத் தேவையான கூட்டு நடவடிக்கைகள் குறித்தும் விவாதிப்பதற்கு அனைத்து உறுப்பு நாடுகளுக்கும் இந்த மாநாடு வாய்ப்பை வழங்கும் என்று நம்பப்படுகிறது.

பிம்ஸ்டெக் அமைப்பின் ஒவ்வொரு நாட்டிலிருந்தும் தூதுக்குழுக்கள் இந்த மாநாட்டில் பங்கேற்க அழைக்கப்பட்டுள்ளன. மேலும் இந்தியாவில் இருந்து போதைப் பொருள் தடுப்பு சட்டங்களை அமலாக்கும் மத்திய மாநில முகமைகளும், மற்ற உறுப்புநாடுகளின் முகமைகளும் அழைக்கப்பட்டுள்ளன.

வங்கக் கடலின் அருகேயும், கரையோரப் பகுதிகளிலும் உள்ள நாடுகள், அதாவது, இந்தியா, பங்களாதேஷ், பூடான், மியான்மர், நேபாளம், இலங்கை, தாய்லாந்து ஆகியவை பிம்ஸ்டெக் அமைப்பின் உறுப்பு நாடுகளாக உள்ளன.

 

Get the latest Tamil news and Educationjobs news here. You can also read all the Educationjobs news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Tnpsc group i exam current affairs and preparation

Next Story
182 காலி பணியிடங்கள்: இஸ்ரோ புது அறிவிப்புpslv 2, isro
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com