Tamil Nadu Public Service Commission Recruitment 2019: பொறியாளர்களுக்கு தமிழ்நாட்டில் பஞ்சம் இல்லை. ஆனால் அவர்களுக்கு அரசுத் துறையில் வேலை கிடைப்பது குதிரைக் கொம்பு. அரசுத் துறையில், அதுவும் தமிழக அரசு அதிகாரியாக பணியாற்றும் வாய்ப்பை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்திருக்கிறது. இது தொடர்பான முழுத் தகவல்களுக்கு கீழே படியுங்கள்.
தமிழ்நாடு தொழில்நுட்பத் துறையில் வேலைவாய்ப்புகள் இருப்பதாக அறிவித்துள்ளது தமிழ்நாடு அரசு பணியாளர்கள் தேர்வாணையம். அசிஸ்டெண்ட் சிஸ்டம் எஞ்சினியர் மற்றும் அசிஸ்டெண்ட் சிஸ்டம் அனலிஸ்ட் பணிகளுக்கான 60 காலியிடங்கள் இருப்பதாக அறிவித்துள்ளது டி.என்.பி.எஸ்.சி.
Read More: TNPSC Recruitment 2019: வேளாண்துறையில் வேலை வாய்ப்பு... டிப்ளோமா முடித்தவரா நீங்கள்?
பிப்ரவரி 20ம் தேதி வரை விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். ஏப்ரல் 7ம் தேதி தேர்வுகள் நடைபெறும். எழுத்துத் தேர்வுகள் சென்னை, மதுரை, கோயம்புத்தூர், திருச்சி, திருநெல்வேலி, சேலம், தஞ்சாவூர், வேலூர் மற்றும் விழுப்புரம் ஆகிய இடங்களில் நடைபெறுகிறது.
TNPSC Recruitment 2019: பொறியாளர்களுக்கு டி.என்.பி.எஸ்.சி. தேர்வு
TNPSC Recruitment 2019 : வயது வரம்பு- கல்வித் தகுதி
குறைந்த பட்ச வயது வரம்பு 21 ஆகும். அதிக பட்ச வயது வரம்பு 30 ஆகும். பட்டியல் இனத்தவர்/ பழங்குடியனருக்கு வயது வரம்பு 35 ஆகும். MBCs/ DCs/ BCs/ BC(M)s வகுப்பினரின் வயது வரம்பு 32 ஆகும்.
Read More: TNPSC Group 1 Services Exam 2019 : தமிழ்நாடு குரூப்1 தேர்வு அறிவிப்பு, பட்டதாரிகளுக்கு செம சான்ஸ்
கம்ப்யூட்டர் சயன்ஸ் படிப்பில் எஞ்ஜினியரிங், கம்ப்யூட்டர் எஞ்ஜினியரிங், எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேஷன் எஞ்ஜினியரிங், ட்ரிப்பிள் ஈ படித்தவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.
கம்ப்யூட்டர் அப்ளிகேஷன்ஸ், கம்ப்யூட்டர் சயன்ஸ், தொழில்நுட்ப அறிவியலில் முதுகலை பட்டம் முடித்தவர்கள் அசிஸ்டண்ட் சிஸ்டம் அனலிஸ்ட் போஸ்ட்டிற்கு விண்ணப்பிக்கலாம்.
மேலும் படிக்க : இந்திய அணுமின் கழகத்தில் வேலை பார்க்க விருப்பமா ?