டிஎன்பிஎஸ்சி குரூப் 4,குரூப் 2-ஏ தேர்வுகளில் மேஜிக் பேனா மூலம் முறைகேடுகள் நடைபெற்றாதாக முதற்கட்ட விசாரனையில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த பேனாவை தயாரித்த அசோக் என்பவரை சிபிசிஐடி கைது செய்துள்ளது. மேஜிக் பேனா எல்லாம் கட்டுக் கதை என்று பல மக்கள் நினைத்துக் கொண்டிருக்கையில் அசோக்கின் கைது பலரையும் திரும்பி பார்க்க வைத்துள்ளது.
Advertisment
எந்த நிர்பந்தத்தில்/எப்படி/எத்தனை மேஜிக் பேனாவை அசோக் தயாரித்தார் என்ற கோணத்தில் சிபிசிஐடி விசாரித்து வருகிறது. ஏற்கனவே ஜெயக்குமாரின் முகப்பேர் வீட்டில் சோதனை நடத்திய போது 50க்கும் மேற்பட்ட மேஜிக் பேனாக்களை கண்டெடுத்ததாக கூறப்பட்டது.
மேஜிக் பேனா கதை: ராமேஸ்வரம்,கீழக்கரை தேர்வு மையங்களில் தேர்வு எழுதிய 99 பேருக்கு வாழ்நாள் தடை விதிக்கப்பட்டது.
தேர்வறைக்கு செல்லும்முன் இந்த 99 தேர்வர்களுக்கும் சிறப்பு பேனாக்கள் கொடுக்கப்பட்டதாகவும், இந்த பேனாவில் எழுதிய எழுத்து அதிவிரைவாக மறையக் கூடியதாகவும். தேர்வர்கள் சாதாராண பேனாவின் மூலம் விடைத்தாளில் கேட்கப்படும் பதிவு எண், கையெழுத்து போன்றவைகளை பூர்த்தி செய்கின்றனர். சிறப்பு பேனாவின் மூலம் கேட்கப்பட்ட கேள்வி பதில்களை பூர்த்தி செய்துள்ளனர்.
இந்த சிறப்பு பேனாவின் பூர்த்தி செய்த விடைகள் சில மணி நேரங்களில் அழிந்த விடுவதால்,மற்றொரு சாதாரண பேனாவின் மூலம் சரியான விடைகளை பூர்த்தி செய்திருக்கின்றனர். விடைத் தாள்களை வேறு வாகனங்களுக்கு மாற்றப்பட்டு திருத்தப் பட்டுள்ளன. இது தொடர்பாக டிஎன்பிஎஸ்சி ரெக்கார்ட் கிளாக் ஓம்காந்தன் என்பவரை சிபிசிஐடி கைது செய்து விசாரித்து வருகிறது.