Advertisment

TNPSC VAO Recruitment 2019 Process: கிராம நிர்வாக அலுவலர் பணியிடங்களுக்கான தேர்வு! எப்படி நடத்தப்படுகிறது தெரியுமா?

TNPSC VAO 2019 Selection Procedure Complete Details:கல்வித்தகுதிகள் உள்ளிட்ட அனைத்து விவரங்களும் இணையதளத்தில் வெளியிடப்படும்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
TNPSC VAO Recruitment 2019

TNPSC VAO Recruitment 2019

TNPSC VAO Recruitment 2019 : தமிழக அரசில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு தேவையான பணியாளர்களை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) எழுத்து தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கிறது. தமிழக அரசின் பல்வேறு வகையான பதவிகளுக்கும் தனித்தனியாக கிரேடு வாரியாக தேர்வு நடத்தப்படுகிறது. அந்த வகையில், குரூப்-4 , விஏஓ ஆகிய பணியிடங்களுக்கு தனித்தனியாக நடத்தப்பட்டு வந்த எழுத்துதேர்வை கடந்த 2017 ஆண்டு முதல் ஒன்றிணைத்து நடத்தப்பட்டு வருகிறது.

Advertisment

டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வு - தேர்வர்களே இதைமட்டும் படிங்க...வெற்றி 100 சதவீதம் உங்கள் வசம்தான்!!!

டி.என்.பி.எஸ்.சி.யின் இணையதளத்தில் www.tnpsc.gov.in, தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம். தேர்வுக் கட்டணம் செலுத்தும் முறை, கட்டண சலுகை, கல்வித்தகுதிகள் உள்ளிட்ட அனைத்து விவரங்களும் இணையதளத்தில் வெளியிடப்படும்.

TNPSC VAO recruitment 2019:மற்ற விபரங்கள்:

தகுதி: 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 21 -30 வயதுக்குள் தேர்வர்கள் இருக்க வேண்டும். எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு 40 வயது வரை வரம்பு உண்டு. ஒருங்கிணைந்த சிவில் சர்வீசஸ் தேர்வு குரூப் 4 தேர்வுக்காக அறிவிப்பு ஜூன் மாதத்தில் வெளியாகும்.

இந்த ஆண்டும் 397 இடங்களுக்கான கிராம நிர்வாக அலுவலர் தேர்வு அறிவிப்பு வெளியாகியுள்ளது. வரும் செப்டம்பர் 1 ஆம் தேதி தேர்வு நடைபெறுகிறது. விஏஓ பதவிக்கு தேர்வு எழுதுபவர்கள் தேர்வில் 300 மதிப்பெண்களில் குறைந்தபட்சம் 90 மதிப்பெண்களைப் பெற வேண்டும்.

read more.. குரூப் 4 தேர்வு அறிவிப்பு வெளியீடு - ஆன்லைனில் விண்ணப்பிப்பது எப்படி?

தேர்வில் பொது அறிவு, தமிழ், ஆங்கிலம், மன திறன் சோதனை கேள்விகள் கேட்கப்படும். தேர்வானது தொடர்ந்து 3 மணி நேரம் நடைபெறும். எழுத்து தேர்வுக்கு பிறகு தேர்வர்கள் ஆவண சரிபார்ப்புக்கு அழைக்கப்படுவார்கள், மேலும் அந்த பதவிக்கு தரவரிசைப்படி ஒதுக்கப்படுவார்கள்.

எழுத்து தேர்வு தேர்வுக்குப் பிறகு, வேட்பாளர்கள் கிராம நிர்வாக அலுவலர் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவுடன், ஒவ்வொரு நபரும் தனது பொறுப்பில் கிராமத்தில் வசிக்க வேண்டும், மேலும் அந்த கிராமத்தின் வேட்பாளர் பொறுப்பாளராக இருக்கும் வரை அந்த கிராமத்தில் தொடர்ந்து வசிப்பார்.

Tnpsc
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment