தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் நல ஆணையரகத்தில் திட்ட அலுவலர், கணக்காளர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 53 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்கள் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 23.09.2023க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.
இதையும் படியுங்கள்: ஆவின் நிறுவனத்தில் 322 காலியிடங்கள்; டி.என்.பி.எஸ்.சி மூலம் நிரப்ப தமிழக அரசு அறிவிப்பு
Program Officer
காலியிடங்களின் எண்ணிக்கை : 4
கல்வித் தகுதி : அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழத்தில் Bachelor's degree in social policy/work, rural development, development studies, public policy, public administration, Bachelor’s degree in Rehabilitation Sciences, Post Graduate Diploma in Community Based Rehabilitation படித்திருக்க வேண்டும். மேலும் 3-5 ஆண்டுகள் பணி அனுபவம் அவசியம்.
சம்பளம் : ரூ. 75,000
Data Analyst
காலியிடங்களின் எண்ணிக்கை : 1
கல்வித் தகுதி : அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழத்தில் Bachelor’s Degree in Computer Science, Information Technology படித்திருக்க வேண்டும். மேலும் 2 ஆண்டுகள் பணி அனுபவம் அவசியம்.
சம்பளம் : ரூ. 30,000
Senior Accountant
காலியிடங்களின் எண்ணிக்கை : 1
கல்வித் தகுதி : அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழத்தில் Bachelor’s degree in accounting/ financial management/ public finance படித்திருக்க வேண்டும். மேலும் 5 ஆண்டுகள் பணி அனுபவம் அவசியம்.
சம்பளம் : ரூ. 30,000
District Program Officer
காலியிடங்களின் எண்ணிக்கை : 32
கல்வித் தகுதி : அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழத்தில் Bachelor's degree in social policy/work, rural development, development studies, public policy, public administration, Bachelor’s degree in Rehabilitation Sciences, Post Graduate Diploma in Community Based Rehabilitation படித்திருக்க வேண்டும். மேலும் 3-5 ஆண்டுகள் பணி அனுபவம் அவசியம்.
சம்பளம் : ரூ. 40,000
Accountant
காலியிடங்களின் எண்ணிக்கை : 15
கல்வித் தகுதி : அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழத்தில் Bachelor’s degree in accounting/ financial management/ public finance படித்திருக்க வேண்டும். மேலும் 2-3 ஆண்டுகள் பணி அனுபவம் அவசியம்.
சம்பளம் : ரூ. 25,000
தேர்வு செய்யப்படும் முறை : இந்தப் பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை : இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://scd.tn.gov.in/rights_project_recruitment.php என்ற இணையதளப் பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து பிரிண்ட் எடுத்துக் கொள்ளுங்கள். பின்னர் விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களுடன் கீழ்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
முகவரி : Project Director-RIGHTS Project cum Director, Directorate for Welfare of the Differently Abled, No.5, Kamarajar Salai, Lady Willington College Campus, Chennai-600005.
விண்ணப்பிக்க கடைசி தேதி : 23.02.2023
இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய https://scd.tn.gov.in/rights_project_recruitment.php என்ற இணையதளப் பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பைப் பார்வையிடவும்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.