இளைஞர்களுக்கு வழிகாட்ட : உச்சதிறன் மேம்பாடு மையத்திற்கு தமிழக அரசு ஒப்பந்தம்
தமிழ்நாடு விஷன் 2023 மற்றும் தமிழ்நாடு தொழில் முதலீட்டு திட்டம் போன்றவைகளின் ஒரு பகுதியாக தமிழக அரசு ஐந்து துறைகளில் “உச்ச திறன் மேம்பாடு மையம் " (Apex Skill Development Centres ) அமைக்க முடிவெடுத்தது.
தமிழ்நாடு விஷன் 2023 மற்றும் தமிழ்நாடு தொழில் முதலீட்டுதிட்டம் போன்றவைகளின் ஒரு பகுதியாக தமிழக அரசு ஐந்து துறைகளில் “உச்ச திறன் மேம்பாடு மையம் " (Apex Skill Development Centres ) அமைக்க முடிவெடுத்தது.
Advertisment
அடையாளம் காணப்பட்ட ஐந்து துறைகள் பின்வருமாறு:
1. ஆட்டோ, ஆட்டோ கூறுகள் மற்றும் இயந்திர கருவிகள்
2. உற்பத்தி மற்றும் மூலதன பொருட்கள்
3. போக்குவரத்து மற்றும் தளவாடங்கள்
4. மருத்துவமனை மற்றும் சுகாதார சேவைகள்
5. கட்டுமானம் மற்றும் உள்கட்டமைப்பு
திமுக கூட்டணி சார்பில் CAAவை எதிர்த்து பேரணி...
இந்த, உச்ச திறன் மேம்பாடு மையத்தின் முக்கிய நோக்கம்' வேலையற்ற இளைஞர்கள் மற்றும் பெண்களுக்கு தொழிற்பயிற்சி அளித்தல், வேலை செய்யும் இளைஞர்களின் திறன்களை மேம்படுத்துதல்.
இதன் தொடர்ச்சியாக, மருத்துவமனை மற்றும் சுகாதார சேவைகள், ஆட்டோ உற்பத்தி,போக்குவரத்து தளவாடங்கள் போன்றவைகளுக்கான 'உச்ச திறன் மேம்பாடு மையம்' உருவாக்கப்பட்டுள்ளது.
இதற்காக, தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் டி.வி.எஸ் பயிற்சி மற்றும் சேவைகள் லிமிடெட், காவேரி மருத்துவமனை, தளவாடத் துறை திறன் கவுன்சில் போன்றவைகளிடம் புரிந்துணர்வு ஒப்பந்தம் போட்டுள்ளது.
ஒவ்வொரு மேம்பாடு மையமும் ரூ. 20 கோடி செலவில், வரும் காலங்களில் முக்கிய துறைகளில் தேவைப்படும் லட்சத்திற்கும் அதிகமான திறமையான தொழிலாளர்களை உருவாக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது . இதற்கான நிதி ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனம் மற்றும் தமிழ்நாடு அரசாங்கத்தால் பகிரப்படுகிறது. ஒவ்வொரு துறையிலிருந்தும் தொழில்களின் கூட்டமைப்பு ரூ.ஒரு கோடி வரையிலான பங்குகள் வைத்திருக்கும்.