இந்தியாவின் ஆர்.டி.இ சட்டத்தின் படி, ஒருவர் ஒன்று முதல் எட்டாம் வகுப்புகளில் ஆசிரியராக வேண்டும் என்றால் அவர் கட்டாயம் தகுதி தேர்வில் அந்தந்த மாநிலங்கள் நடத்தும் தகுதித் தேர்வில் அல்லது மத்திய இடை நிலை வாரியம் நடத்தும் தகுதித் தேர்வில் தேர்சிப்பெற்றிருக்க வேண்டும். தமிழகத்தில், தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் ஆசிரியர் தகுதி தேர்வுகளை நடத்திவருகின்றன.
டெட் தேர்வின் 150 மதிப்பெண்களைக் கொண்ட முதல் தாள் ஜூன் மாதம் 8ம் தேதியும் , 150 மதிப்பெண்களைக் கொண்ட இரண்டாம் தாள் ஜூன் 9ம் தேதியும் நடைபெற்றது. முதல் தாளை 1 லட்சத்து 62 ஆயிரத்திற்கு மேலும், இரண்டாம் தாளை 3 லட்சத்து 79 ஆயிரத்திற்கு மேலும் எழுதி இருந்தனர்.
தேர்வு முடிவடைந்த நிலையில் , இத்தேர்வின் முடிவுகள் ஆகஸ்ட் 20 மற்றும் 22- ம் தேதியில் ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டது
TNTET Paper I Scorecard : மதிப்பெண் பட்டியல் வெளியீடு
இதில் வேதனையான தகவல் என்ன வென்றால், பேப்பர் ஒன்றில் சுமார் 480 பேரும் , பேப்பர் இரண்டில் 324 பாஸ் சான்றிதழ் வாங்கும் சூழ்நிலையில் உள்ளனர் (குறிப்பு: பொது பிரிவினர்க்கு 60% பாஸ் மதிபெண், மற்ற பிரிவினருக்கு 55 % பாஸ் மதிப்பெண்)
தேர்வு வினாத் தாள் கடினமாக இருந்ததா? இல்லை, வேறு ஏதேனும் அடிப்படை காரணம் உள்ளதா ? என்பதை ஆசரியர் தேர்வு வாரியமும் , தேர்வர்களும் சுய பரிசோதனை செய்ய வேண்டியக் கட்டாயாத்தில் உள்ளனர் என்பதே நிதர்சனமான உண்மை.