தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியத்தின் டெட் தேர்வு பலகட்டங்களாக நடைபெற்று வரும் நிலையில், இதுவரை தேர்வில் கேட்கப்பட்ட கேள்விகள் என்னென்ன என்பதை இப்போது பார்ப்போம்.
தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கான ஆசிரியர் பணியிடங்களை தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் பல்வேறு தேர்வுகளை நடத்தி நிரப்பி வருகிறது. இந்த தேர்வுகளில் மிக முக்கியமானது ஆசிரியர் தகுதித் தேர்வு. இந்த தேர்வு இடைநிலை ஆசிரியர்கள் மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வாகும். இந்த தேர்வு இரண்டு தாள்களாக நடைபெறும். முதல் தாள் டிப்ளமோ ஆசிரியர் பயிற்சி (D.T.Ed) படித்தவர்களுக்கும், இரண்டாம் தாள் பட்டப்படிப்பு ஆசிரியர் பயிற்சி (B.Ed) படித்தவர்களுக்கும் நடைபெறும்.
இதையும் படியுங்கள்: தபால் துறை வேலை வாய்ப்பு; ஐ.டி.ஐ தகுதி; உடனே அப்ளை பண்ணுங்க!
இந்த ஆண்டு டெட் தேர்வு கணினி வழித் தேர்வாக நடைபெறுகிறது. முதலில் முதல் தாளுக்கான தேர்வு தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இந்த தேர்வுகள் அக்டோபர் 14 முதல் 19 ஆம் தேதி வரை 6 நாட்கள் நடைபெறுகிறது. இதில் தற்போது வரை 2 நாட்கள் தேர்வு நடைபெற்றுள்ளது.
இனி நடக்கக்கூடிய தேர்வு எழுதும் தேர்வர்களுக்காக, அக்டோபர் 14 மற்றும் 15 ஆகிய தேதிகளில் நடந்த தேர்வில் கேட்கப்பட்ட கேள்விகள் குறித்து இப்போது பார்ப்போம். இந்த வினாத் தொகுப்பை பிரபு மேத்ஸ் (Prabu Maths) என்ற யூடியூப் சேனல் வெளியிட்டுள்ளது. தேர்வில் வினாக்கள் பிரிவு வாரியாக கேட்கப்படாமல், ஒட்டுமொத்தமாக கேட்கப்பட்டுள்ளது. வினாக்கள் கலவையாக இடம்பெற்றுள்ளது.
ஹைக்கூ கவிதைகளை அறிமுகப்படுத்தியது யார்?
X ஒரு ஒற்றைப்படை எண் எனில் அதன் அடுத்த ஒற்றைப்படை எண்?
பூமியில் நீரின் பரப்பு சதவீதம் என்ன?
குழந்தைகளின் நேர்மையற்ற தன்மை மற்றும் நேர்மை குறித்து கொடுக்கப்பட்ட விடைகள் மூலம் பதில் அளிக்க கூடிய ஒரு கேள்வி.
நீரின் கடினத்தன்மையை நீக்கும் முறை?
வேலுநாச்சியார் யாருக்கு நடுகல் இட்டு வணக்கம் செலுத்தினார்?
ஆந்த்ரோசையானின் நிறமி எது?
வைட்டமின் பி மற்றும் சி பயன்கள் என்ன?
நாட்கள்- வேலை கணக்குகள்
கோணங்கள் சார்ந்த வினாக்கள்
நெய்தல் நிலத்தின் வாழ்க்கைமுறை சார்ந்த வினா
தேவநேயப்பாவாணர் இயற்பெயர்?
ரோஜா பூ இதழ் சிவப்பாக இருக்க காரணம் என்ன?
காற்றினை அளக்க பயன்படும் கருவி என்ன?
தமிழ் மூவாயிரம் என அழைக்கப்படும் நூல் எது?
இலக்கணக்குறிப்பு – வளையல், மரங்கொத்தி
மிகப்பழமையான மாநகராட்சி எது?
மலரின் கடினத்தன்மை வாய்ந்த பகுதி எது?
ஒளிச்சேர்க்கையால் பிளவுபடும் வாயு எது?
தனிவட்டி, கூட்டுவட்டி கணக்குகள்
சுருக்குக கணக்குகள்
முக்கோணவியல் கணக்குகள்
மூதாய் மரம் என அழைக்கபடுவது எது?
கல்வியே தெய்வம் என்ற பாடலின் ஆசிரியர் யார்?
பூம்புனல் ஆறு சார்ந்த வினா
இந்தியாவில் அதிகமாக மழைபெய்யும் இடங்களில் 3 ஆவது இடம் எது?
கார்ல்- பியர்சனின் ஆய்வு எதனுடன் தொடர்புடையது?
பகு எண், பகா எண் கணக்குகள்
காரணி அடிப்படை இயற்கணித கணக்குகள்
சராசரி, வீச்சு, சதவீதம் சார்ந்த கணக்குகள்
மனவெழுச்சி காரணிகள் – அடிப்படை தத்துவங்கள்
பியாஜேவின் படிநிலைகள்
குழந்தைகளுக்கு மகிழ்ச்சியான கற்றலாக அமைவது எது?
எரிக்சனின் வளர்ச்சி நிலைகள் குறித்த நிலைகள்
கல்விக்கண் திறந்த காமராஜர் என்று கூறியது யார்?
பாரதியார், பாரதிதாசன் நூல்கள் சார்ந்த வினாக்கள்
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.