TNUSRB SI Recruitment Exam: தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வுக் குழுமம் (TNUSRB) துணை இன்ஸ்பெக்டர் (TK, AR, TSP) தேர்வுக்கான அட்மிட் கார்டை தனது அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. தேர்வுக்கு பதிவு செய்தவர்கள் தங்கள் நுழைவு அட்டையை ஆன்லைனில் tnusrbonline.org இல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
2019ம் ஆண்டு கலையுலகம் இழந்த நட்சத்திரங்கள்
969 காவல்துறை துணை ஆய்வாளர் காலியிடங்களை நிரப்புவதற்காக தேர்வு நடைபெறுகிறது. அவற்றில் 660 காலியிடங்கள் சப்-இன்ஸ்பெக்டர் (TK), 276 காலியிடங்கள் சப்-இன்ஸ்பெக்டர் (AR), மற்றும் 33 காலியிடங்கள் சப்-இன்ஸ்பெக்டர் (TSP). பிரிவுக்கும் நடைபெறுகிறது.
தயாராவது ஓகே… ஜெயிப்பது எப்படி? – டிஎன்பிஎஸ்சிக்கு ரெடியாகும் முன் இதைப் படிங்க
துறைசார் தேர்வர்களுக்கான தேர்வு 2020 ஜனவரி 11 ஆம் தேதி நடத்தப்படும். பொது தேர்வர்களுககன தேர்வுகள் 2020 ஜனவரி 12 ஆம் தேதி நடைபெறும்.
அட்மிட் கார்டை டவுன்லோட் செய்வதற்கான நேரடி இணைப்பு இங்கே.
அட்மிட் கார்டை பதிவிறக்கம் செய்வது எப்படி?
1. அதிகாரப்பூர்வ வலைத்தளத்தைப் பார்வையிடவும்
2. முகப்புப்பக்கத்தில், ‘login for written exam hall ticket’ என்று எழுதப்பட்ட இணைப்பைக் கிளிக் செய்க.
3. திரையில் ஒரு புதிய பக்கம் தோன்றும்
4. அதில், நுழைவு அட்டை காட்சி திரையில் தோன்றும்
5. அட்மிட் கார்டை பதிவிறக்கம் செய்து பிறகு எதிர்கால தேவைக்காக பிரிண்ட் எடுத்துக் கொள்ளுங்கள்.