தயாராவது ஓகே... ஜெயிப்பது எப்படி? - டிஎன்பிஎஸ்சிக்கு ரெடியாகும் முன் இதைப் படிங்க
தேர்வுக்கு தயாராவது என்பது வேறு ...தேர்வுகளில் வெற்றியடைதல் என்பது வேறு. எனவே, உங்களது ஆயத்தம், தேர்வுக்கு தயாராகிறோம் என்பதோடு மட்டுமல்லாமல், வெற்றியை உறுதி செய்யும் வழியில் இருக்கட்டும்.
TNPSC Recuritment Annual Planner 2020 : தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் , 2020ம் ஆண்டின் தேர்வு கால அட்டவணையை வெளியிட்டிருப்பதை நாம் அனைவரும் அறிந்த நிகழ்வே!.... இது உத்தேச காலண்டர் தான் என்றாலும், இதன்படி, தேர்வர்கள் தங்கள் தேர்வுக்கு ஆயத்தமாக்கி கொள்ள வேண்டும்.
Advertisment
2019ம் ஆண்டு கலையுலகம் இழந்த நட்சத்திரங்கள்
Advertisment
Advertisement
தேர்வுக்கு தயாராவது என்பது வேறு ..... தேர்வுகளில் வெற்றியடைதல் என்பது வேறு. எனவே, உங்களது ஆயத்தம் தேர்வுக்கு தயாராகிறோம் என்பதோடு மட்டும் நிறுத்தி கொள்ளாமல், வெற்றியை உறுதி செய்யும் வழியில் இருக்கட்டும்.
முதலில், உங்கள் தேர்வுக்கு எப்படி கொடுக்கப்பட்டுள்ள பாடத் திட்டங்களை, குறிபிட்ட நாட்களுக்குள் முடிப்பது என்ற அட்டவணையை தயார் செய்யுங்கள். டிஎன்பிஎஸ்சி காலண்டிரில் முதலில் வருவது குரூப் - I குடிமைப் பணித் தேர்வு. கணிதம், அறிவியில் போன்றவைகளுக்கு ரிவிசன் செய்வதற்கான நேரத்தை உங்கள் அட்டவணையில் உருவாக்கி கொள்ளுங்கள். நீங்கள் உருவாக்கும் அட்டவணை உங்களை மனிதின் எண்ணங்களை பிரதிபலிக்க வேண்டும். உங்களின் ஓய்வு நேரத்தை நியாயப்படுத்த வேண்டும். அந்த அட்டவணையை நம்புங்கள். அது தரும் கட்டளைகளை பின் தொடருங்கள்.
முந்தைய ஆண்டு வினாத்தாளை நீங்கள் என்றும் புறக்கணிக்கக்கூடாது. முந்தைய ஆண்டு வினாத்தாள் வேட்பாளர்களுக்கு தேர்வின் தரத்தையும், பல ஆண்டுகளாக நிகழ்ந்த மாற்றங்களையும் புரிந்து கொள்ள உதவுகிறது. ஒவ்வொரு நாளும் ஒரு கடந்த ஆண்டு வினாத்தாளைத் தீர்ப்பதை வாடிக்கையாக வைத்துக் கொள்ளுங்கள்.
முந்தைய ஆண்டு வினாத் தாள்களை டவுன்லோட் செய்ய இங்கேஇங்கே கிளிக் செய்யுங்கள்.
இன்டர்நெட்டில், இலவசமாக கிடைக்கும் பொது நிகழ்வு பாடத் திட்டங்களை தேர்ந்தெடுத்து பயன்படுத்துங்கள்.
சில முக்கியாமான பொது நிகழ்வுகளை கொடுக்கும் வலைத்தளங்கள் , இங்கேஇங்கேஇங்கே
டிஎன்பிஎஸ்சி தேர்வில் 6முதல் 10ம் வகுப்பு பாடத்திட்டங்களிலிருந்து அதிகமாக கேட்கப்படுகின்றன. நாம் ஏற்கனவே இந்த வகுப்பில் உள்ள ஒவ்வொரு அத்தியாயத்தையும் படித்திருப்போம் . இருந்தாலும், அதனை தெளிவுப்படுத்துங்கள்.