TNUSRB Result: 10,906 சிறைக் காவலர் பணியிடங்களுக்கான தேர்வு முடிவுகள் வெளியீடு

tnusrb result, tnusrb selection list : மொத்தக் காலிப்பணியிட எண்ணிக்கைக்கேற்ப 5 மடங்கு விண்ணப்பதார்கள் மட்டுமே வகுப்புவாரியாக அழைக்கப்படுகின்றனர்.    

tnusrb result, tnusrb selection list : மொத்தக் காலிப்பணியிட எண்ணிக்கைக்கேற்ப 5 மடங்கு விண்ணப்பதார்கள் மட்டுமே வகுப்புவாரியாக அழைக்கப்படுகின்றனர்.    

author-image
WebDesk
New Update
TNUSRB Result: 10,906  சிறைக் காவலர் பணியிடங்களுக்கான தேர்வு முடிவுகள் வெளியீடு

TNUSRB selection list for CV PMT ET and PET:  இரண்டாம் நிலை காவலர், இரண்டாம் நிலை சிறைக்காவலர் மற்றும் தீயணைப்பாளர் உள்ளிட்ட 10,906 பணியிடங்களுக்கான தேர்வு முடிவுகளை தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டது.

Advertisment

publive-image

அடுத்தக்கட்ட தேர்வுக்கு (உடற்கூறு அளத்தல், உடற்தகுதி தேர்வு, உடற்திறன் போட்டி அசல் சான்றிதழ்) தகுதி பெற்ற விண்ணப்பதாரர்களின் பதிவு எண்களும் தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வுக்குழுமத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

முடிவுகளை, tnusrbonline.org/  என்ற இணையதளம் வாயிலாக தெரிந்து கொள்ளலாம்.

Advertisment
Advertisements

publive-image

எழுத்துத் தேர்வில் தகுதி மதிப்பெண்ணாகக் குறைந்தபட்சம் 28 மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும். இருப்பினும், அடுத்தக் கட்டத் தேர்வான அசல் சான்றிதல்கள் சரிபாத்தல், உடற்தகுதித் தேர்வு மற்றும் உடற்திறன் போட்டிகளுக்கு விண்ணப்பத்தாரர்கள் பெறும் உயர்ந்தபட்ச மதிப்பெண்கள் அடிப்படையில் மொத்தக் காலிப்பணியிட எண்ணிக்கைக்கேற்ப 5 மடங்கு விண்ணப்பதார்கள் மட்டுமே வகுப்புவாரியாக அழைக்கப்படுகின்றனர்.

தகுதி பெற்ற விண்ணப்பதாரர்களுக்கு இப்போட்டிகளில் கலந்து கொள்வதற்கான அழைப்பு கடிதம் விரைவில் இணையதளத்தில் வெளியிடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

இத்தேர்வுக்கான கல்வித்தகுதியான 10 ம் வகுப்பினை தமிழ் வழியில் படித்து தேர்ச்சி பெற்றிருந்தால் அவர்களுக்கு இறுதி தற்காலிகத் தேர்வின் போது மட்டுமே (Final Provisional Selection) வகுப்பு வாரியாக 20 சதவீதம் முன்னுரிமை வழங்கப்படும். எழுத்துத் தேர்வு மற்றும் உடற்திறன் போட்டிகளின் போது 20 சதவீத முன்னுரிமை பின்பற்றப்பட மாட்டாது.

இதற்கிடையே, தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வுக் குழுமம் (TNUSRB) துணை இன்ஸ்பெக்டர் (TK, AR, TSP) தேர்வுக்கான வாய்மொழித் தேர்வுக்கான அட்மிட கார்டு மற்றும்  கால அட்டவணை வெளியாகியுள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Tnusrb

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: