Advertisment

TNUSRB Police Jobs: தமிழக போலீஸ் தேர்வு; இப்படி படித்தால்… வெற்றி உறுதி

தமிழக காவல்துறை வேலையில் 3552 காவலர் பணியிடங்கள்; மாதிரி வினாத்தாள் எப்படி உள்ளது? தேர்வுக்கு தயாராவது எப்படி?

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
தமிழக போலீஸ் தேர்வு: கட் ஆஃப் எப்படி இருக்கும்?

TNUSRB police constable recruitment 2022 preparation strategies: தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியம் இரண்டாம் நிலை காவலர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மொத்தம் 3,552 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்தப் பணியிடங்களுக்கு எவ்வாறு தயாராகுவது?, சிலபஸ் என்ன? மாதிரி வினாத்தாளில் எப்படி வினாக்கள் கேட்கப்பட்டிருக்கின்றன? என்பதை இப்போது பார்ப்போம்.

Advertisment

காவலர் பணியிடங்களுக்கான தேர்வு இரண்டு பகுதிகளாக நடைபெறும். முதல் பகுதி தமிழ் மொழித் தகுதி தேர்வு. இதில் 40% மதிப்பெண்கள் எடுப்பது அவசியம். இல்லையென்றால், முதன்மை தாள் மதிப்பீடு செய்யப்படமாட்டாது. இந்த பகுதி 80 மதிப்பெண்களுக்கு நடைபெறும்.

இதையும் படியுங்கள்: தமிழக அஞ்சல்துறை வேலைவாய்ப்பு; 10 ஆம் வகுப்பு தேர்ச்சி போதும்!

தமிழ் மொழி தகுதித் தேர்வு

இலக்கணம் – எழுத்து, சொல், பொருள், பொது, யாப்பு, அணி, மொழித்திறன், பிரித்து எழுதுதல், பிழைத் திருத்தம், எதிர்ச்சொல், சேர்த்து எழுதுதல், மொழிபெயர்ப்பு

இலக்கியம் – திருக்குறள், தொல்காப்பியம், கம்பராமயணம், எட்டுத்தொகை, பத்துப்பாட்டு, ஐம்பெருங்காப்பியங்கள், ஐஞ்சிறுகாப்பியங்கள், அறநூல்கள், பக்தி இலக்கியம், சிற்றிலக்கியங்கள், நாட்டுப்புற இலக்கியம், புதுக்கவிதை, மொழிப்பெயர்ப்பு நூல்கள் உள்ளிட்டவை

தமிழ் அறிஞர்களும், தமிழ் தொண்டும் – தமிழ் அறிஞர்கள், தமிழின் தொன்மை, தமிழரின் பண்பாடு, உரைநடை, தமிழ் தொண்டு, சமுதாயத் தொண்டு

முதன்மை எழுத்துத் தேர்வு

இரண்டாம் பகுதியாக முதன்மை எழுத்துத் தேர்வு நடைபெறும். இதில் பெறக் கூடிய மதிப்பெண்கள் அடிப்படையில் தான் அடுத்த செயல்முறைக்கு தகுதி செய்யப்படுவார்கள். இது 70 மதிப்பெண்களுக்கு நடைபெறும்.

இதில் பொது அறிவு பகுதியில் இருந்து 45 வினாக்களும், உளவியல் பகுதியில் இருந்து 25 வினாக்களும் இடம் பெறும்.

பொது அறிவு – இயற்பியல், வேதியியல், உயிரியல், சூழ்நிலையியல், உணவு & ஊட்டச்சத்தியல், வரலாறு, புவியியல், இந்திய அரசியல், பொருளாதாரம், நடப்பு நிகழ்வுகள் ஆகிய பகுதிகளிலிருந்து வினாக்கள் இடம்பெறும்.

உளவியல் – தொடர்பு அல்லது தொடர்புகொள் திறன், எண் பகுப்பாய்வு, தருக்க பகுப்பாய்வு, அறிவாற்றல் திறன், தகவல்களைக் கையாளும் திறன் ஆகியவற்றில் இருந்து வினாக்கள் கேட்கப்படும்.

தேர்வுக்கு தயார் ஆவது எப்படி?

இந்த முறை 70 கேள்விகள் கேட்கப்பட உள்ள நிலையில், அவை எளிமையாக கேட்கப்படலாம். தேர்வாணையத்தால் வெளியிடப்பட்டுள்ள மாதிரி வினாத்தாளில், இந்த 70 கேள்விகளில் 27 கேள்விகள் வரலாறு, குடிமையியல், அரசியலமைப்பு, புவியியல் அடங்கிய சமூக அறிவியல் பாடத்தில் இருந்தும், 20 கேள்விகள் உளவியல் பாடத்திலிருந்தும், 10 கேள்விகள் அறிவியல் பாடத்திலிருந்தும், 8 கேள்விகள் நடப்பு நிகழ்வுகளில் இருந்தும், 5 கேள்விகள் தமிழில் இருந்தும் கேட்கப்பட்டுள்ளன. எனவே, அதற்கேற்றாற்போல் தேர்வர்கள் தயாராகிக் கொள்ள வேண்டும்.

முதலில் தேர்வர்கள் சமூக அறிவியல் பாடங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். அதற்கு அடுத்தாக உளவியல் பகுதிக்கு முக்கியத்துவம் கொடுத்து படிக்க வேண்டும். அடுத்து அறிவியல், நடப்பு நிகழ்வுகள் மற்றும் தமிழுக்கு முக்கியத்துவம் கொடுங்கள்.

இவற்றில், தமிழ் மற்றும் பொது அறிவு பகுதிகளுக்கு 6 ஆம் வகுப்பு முதல் 10 ஆம் வகுப்பு வரையிலான பள்ளி பாடப் புத்தகங்களை நன்றாக படித்துக் கொள்ள வேண்டும். குறிப்பாக புக் பேக் கொஸ்டின் மற்றும் அடைப்புக்குள் உள்ள தகவல்களையும் நன்றாக படித்துக் கொள்ள வேண்டும். உளவியல், கணித பகுதிக்கு 6 முதல் 10 ஆம் வகுப்பு வரையிலான பள்ளி கணித பாடங்களில் இருந்து, படித்துக் கொள்ளுங்கள்.

ஒரு நாளில் எவ்வளவு நேரம் எந்த பகுதிக்கு ஒதுக்கி படிக்க வேண்டும் என்பதை திட்டமிட்டு தயாராகிக்கொள்ளுங்கள். போலீஸ் வேலைக்கு உடற்தகுதி தேர்வும் உண்டு என்பதால், படிப்புடன் கூடவே உடற்பயிற்சியும் செய்துக் கொள்ளுங்கள்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Jobs Police
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment