Top 10 Engineering colleges list under Anna University in Vellore Villupuram region: தமிழகத்தில் பொறியியல் படிப்பதற்கான ஆர்வம் அதிகரித்துள்ளது. இந்த பொறியியல் கவுன்சிலிங்கிற்கு விண்ணப்பித்தவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்தை தாண்டியுள்ளது. இந்தநிலையில், தமிழகத்தின் வேலூர்-விழுப்புரம் மண்டலத்தில் உள்ள டாப் 10 பொறியியல் கல்லூரிகள் எவை என்பதை இப்போது பார்ப்போம்.
Advertisment
பொறியியல் படிக்க விரும்பும் மாணவர்களில் பெரும்பாலானோரின் தேர்வு முதலில் சென்னை, அடுத்தது கோவை என்று தான் உள்ளது. சென்னையில் உள்ள கல்லூரிகளின் தரம் மற்றும் வேலைவாய்ப்பு போன்றவை மாணவர்களை சென்னை பகுதியில் உள்ள கல்லூரிகளுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்க வைக்கிறது. இதேபோல், கோவை பகுதியில் உள்ள கல்லூரிகளும் மாணவர்களால் அதிகம் விரும்பப்படுகிறது.
அதேநேரம், சென்னை, கோவை தவிர, தமிழகத்தின் பிற பகுதிகளில் தரமான, சிறப்பான, நல்ல வேலைவாய்ப்பை பெற்றுத் தரக்கூடிய ஏராளமான கல்லூரிகள் உள்ளன. அந்த வகையில் திருச்சி, சேலம், மதுரை, திருநெல்வேலி, வேலூர் உள்ளிட்ட மண்டலங்களிலும் சிறந்த கல்லூரிகள் நிறைய உள்ளன.
Advertisment
Advertisements
இந்தநிலையில், கல்வியாளர் ரமேஷ்பிரபா தனது யூடியூப் சேனலில் தமிழகத்தின் வேலூர் - விழுப்புரம் பகுதியில் உள்ள டாப் 25 பொறியியல் கல்லூரிகள் எவை என பட்டியலிட்டுள்ளார். இதில் டாப் 10 பொறியியல் கல்லூரிகள் எவை என்பதை இப்போது பார்ப்போம். இதில் வேலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, கடலூர், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் உள்ள பொறியியல் கல்லூரிகள் தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த டாப் 25 பொறியியல் கல்லூரிகளின் தரவரிசையானது, அண்ணா பல்கலைக்கழகம் சமீபத்தில் வெளியிட்டுள்ள கல்லூரி முன்னுரிமை பட்டியல் அடிப்படையில் அமைக்கப்பட்டுள்ளது. கடந்த 5 வருடங்களில் கம்ப்யூட்டர் சயின்ஸ் படிப்புகளில் பொதுப்பிரிவினருக்கு கட் ஆஃப் மதிப்பெண்களின் சராசரி அடிப்படையில் முன்னுரிமை பட்டியல் வெளியிடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
வேலூரில் உள்ள தந்தை பெரியார் அரசு தொழில்நுட்ப கல்லூரி, வேலூர்- விழுப்புரம் பகுதியில் முதலிடத்தில் உள்ளது.
2 ஆம் இடத்தில், விழுப்புரத்தில் அண்ணா பல்கலைக்கழக உறுப்பு கல்லூரி உள்ளது.
3 ஆவது இடத்தில் விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் உள்ள அண்ணா பல்கலைக்கழக உறுப்பு கல்லூரி உள்ளது.
4 ஆவது இடத்தில் திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக உறுப்பு கல்லூரி உள்ளது.
5 ஆவது இடத்தில் ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள அன்னை மீரா காலேஜ் ஆஃப் இன்ஜினியரிங் அண்ட் டெக்னாலஜி உள்ளது.
6 ஆவது இடத்தில் கடலூர் மாவட்டத்தில் உள்ள அண்ணாமலை பல்கலைக்கழக ஃபேகல்டி ஆஃப் இன்ஜினியரிங் அண்ட் டெக்னாலஜி உள்ளது.
7 ஆவது இடத்தில் வேலூர் மாவட்டத்தில் உள்ள ஜி.ஜி.ஆர் காலேஜ் ஆஃப் இன்ஜினியரிங் உள்ளது.
8 ஆவது இடத்தில் கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக உறுப்பு கல்லூரி உள்ளது.
9 ஆவது இடத்தில் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அருள்மிகு மீனாட்சி அம்மன் காலேஜ் ஆஃப் இன்ஜினியரிங் உள்ளது.
10 ஆவது இடத்தில் வேலூரில் உள்ள கிங்ஸ்டன் இன்ஜினியரிங் காலேஜ் உள்ளது.