Top 25 Engineering colleges list under Anna University in Salem: பொறியியல் படிக்க விரும்பும் மாணவர்களில் பெரும்பாலானோரின் தேர்வு முதலில் சென்னை, அடுத்தது கோவை என்று தான் உள்ளது. சென்னையில் உள்ள கல்லூரிகளின் தரம் மற்றும் வேலைவாய்ப்பு போன்றவை மாணவர்களை சென்னை பகுதியில் உள்ள கல்லூரிகளுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்க வைக்கிறது. இதேபோல், கோவை பகுதியில் உள்ள கல்லூரிகளும் மாணவர்களால் அதிகம் விரும்பப்படுகிறது.
அதேநேரம், சென்னை, கோவை தவிர, தமிழகத்தின் பிற பகுதிகளில் தரமான, சிறப்பான, நல்ல வேலைவாய்ப்பை பெற்றுத் தரக்கூடிய ஏராளமான கல்லூரிகள் உள்ளன. அந்த வகையில் சேலம் பகுதியில் உள்ள டாப் 25 என்ஜீனியரிங் கல்லூரிகள் எவை என்பது குறித்து இப்போது பார்ப்போம்.
இதையும் படியுங்கள்: TNEA Counselling: சென்னையில் பொறியியல் அட்மிஷன் ரவுண்ட் -1 டாப் கல்லூரிகள் எவை?
தமிழகத்தில் பொறியியல் கல்லூரிகளுக்கான சேர்க்கையை, அண்ணாப் பல்கலைக்கழகத்தின் தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை அமைப்பு நடத்தி வருகிறது. இந்த பொறியியல் படிப்புகளுக்கு https://www.tneaonline.org/ என்ற இணையதளப் பக்கம் வாயிலாக ஆன்லைனில் விண்ணப்பித்துக் கொள்ள வேண்டும்.
இந்தநிலையில், கல்வியாளர் ரமேஷ்பிரபா தனது யூடியூப் சேனலில் தமிழகத்தின் சேலம் பகுதியில் உள்ள டாப் 25 பொறியியல் கல்லூரிகள் எவை என பட்டியலிட்டுள்ளார். இதில் சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி, ஆகிய மாவட்டங்களில் உள்ள பொறியியல் கல்லூரிகள் தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த டாப் 25 பொறியியல் கல்லூரிகளின் தரவரிசையானது, அண்ணா பல்கலைக்கழகம் சமீபத்தில் வெளியிட்டுள்ள கல்லூரி முன்னுரிமை பட்டியல் அடிப்படையில் அமைக்கப்பட்டுள்ளது. கடந்த 5 வருடங்களில் கம்ப்யூட்டர் சயின்ஸ் படிப்புகளில் பொதுப்பிரிவினருக்கு கட் ஆஃப் மதிப்பெண்களின் சராசரி அடிப்படையில் முன்னுரிமை பட்டியல் வெளியிடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
சேலத்தில் உள்ள அரசு பொறியியல் கல்லூரி சேலம் பகுதியில் முதலிடத்தில் உள்ளது.
2 ஆம் இடத்தில், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பர்கூர் அரசுப் பொறியியல் கல்லூரி உள்ளது.
3 ஆவது இடத்தில் சேலத்தில் உள்ள சோனா காலேஜ் ஆஃப் டெக்னாலஜி உள்ளது.
4 ஆவது இடத்தில் தருமபுரி அரசு பொறியியல் கல்லூரி உள்ளது.
5 ஆவது இடத்தில் சேலத்தில் உள்ள நாலெட்ஜ் (Knowledge) இன்ஸ்டியூட் ஆஃப் டெக்னாலஜி உள்ளது.
6 ஆவது இடத்தில் நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் உள்ள கே.எஸ்.ரங்கசாமி காலேஜ் ஆஃப் டெக்னாலஜி உள்ளது.
7 ஆவது இடத்தில் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் உள்ள அதியமான் காலேஜ் ஆஃப் இன்ஜினியரிங் உள்ளது.
8 ஆவது இடத்தில் நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் உள்ள கே.எஸ்.ஆர் காலேஜ் ஆஃப் இன்ஜினியரிங் உள்ளது.
9 ஆவது இடத்தில் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள விவேகானந்தா காலேஜ் ஆஃப் இன்ஜினியரிங் ஃபார் உமன் உள்ளது. இது ஒரு பெண்கள் கல்லூரி.
10 ஆவது இடத்தில் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் உள்ள ஈ.ஆர் பெருமாள் மணிமேகலை காலேஜ் ஆஃப் இன்ஜினியரிங் உள்ளது.
11 ஆவது இடத்தில் சேலத்தில் உள்ள ஏ.வி.எஸ் இன்ஜினியரிங் காலேஜ் உள்ளது.
12 ஆவது இடத்தில் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பாவை இன்ஜினியரிங் காலேஜ் உள்ளது.
13 ஆவது இடத்தில் சேலத்தில் உள்ள தீரஜ்லால் காந்தி காலேஜ் ஆஃப் டெக்னாலஜி உள்ளது.
14 ஆவது இடத்தில் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கே.எஸ்.ஆர் இன்ஸ்டியூட் ஃபார் இன்ஜினியரிங் அண்ட் டெக்னாலஜி உள்ளது.
15 ஆவது இடத்தில் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள முத்தயம்மாள் இன்ஜினியரிங் காலேஜ் உள்ளது.
16 ஆவது இடத்தில் கிருஷ்ணகிரியில் உள்ள பி.எஸ்.வி காலேஜ் ஆஃப் இன்ஜினியரிங் அண்ட் டெக்னாலஜி உள்ளது.
17 ஆவது இடத்தில் நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடில் உள்ள செங்குந்தர் காலேஜ் ஆஃப் இன்ஜினியரிங் உள்ளது.
18 ஆவது இடத்தில் சேலம் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீ சண்முகா காலேஜ் ஆஃப் இன்ஜினியரிங் அண்ட் டெக்னாலஜி உள்ளது.
19 ஆவது இடத்தில் நாமக்கலில் உள்ள முத்தயம்மாள் காலேஜ் ஆஃப் இன்ஜினியரிங் உள்ளது.
20 ஆவது இடத்தில் சேலத்தில் உள்ள ஏ.வி.எஸ் காலேஜ் ஆஃப் டெக்னாலஜி உள்ளது.
21 ஆவது இடத்தில் நாமக்கலில் உள்ள விவேகானந்தா காலேஜ் ஆஃப் டெக்னாலஜி ஃபார் உமன் உள்ளது. இது பெண்களுக்கான கல்லூரியாகும்.
22 ஆவது இடத்தில் நாமக்கலில் உள்ள மகேந்திரா இன்ஜினியரிங் காலேஜ் உள்ளது.
23 ஆவது இடத்தில் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள எக்ஸல் இன்ஜினியரிங் காலேஜ் உள்ளது.
24 ஆவது இடத்தில் சேலம் மாவட்டம் ஆத்தூர் பகுதியில் உள்ள பாரதியார் இன்ஸ்டியூட் ஆஃப் இன்ஜினியரிங் ஃபார் உமன் உள்ளது. இது பெண்களுக்கான கல்லூரியாகும்.
25 ஆவது இடத்தில் நாமக்கலில் உள்ள ஞானமணி காலேஜ் ஆஃப் டெக்னாலஜி உள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.