Top Engineering colleges in Chennai under Anna University for round 1 counselling: பொறியியல் படிக்க விரும்பும் மாணவர்கள் அவசியம் தெரிந்துக் கொள்ள வேண்டிய பொறியியல் கவுன்சிலிங் செயல்முறை என்ன? பொறியியல் கவுன்சிலிங் ரவுண்ட் 1ல் சென்னையில் உள்ள டாப் பொறியியல் கல்லூரிகள் எவை? போன்ற தகவல்களை இப்போது பார்ப்போம்.
தமிழகத்தில் பொறியியல் கல்லூரிகளுக்கான சேர்க்கையை, அண்ணாப் பல்கலைக்கழகத்தின் தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை அமைப்பு நடத்தி வருகிறது. இந்த பொறியியல் படிப்புகளுக்கு https://www.tneaonline.org/ என்ற இணையதளப் பக்கம் வாயிலாக ஆன்லைனில் விண்ணப்பித்துக் கொள்ள வேண்டும்.
இதையும் படியுங்கள்: மதுரை மண்டலம்: டாப் 10 பொறியியல் கல்லூரிகள் எவை?
பொறியியல் சேர்க்கைக்கான கலந்தாய்வு ஆன்லைனில் நடைபெறும். உங்களுடைய விண்ணப்பம் ஏற்றக் கொள்ளப்பட்ட பின்னர், நீங்கள் கல்லூரிகளை தேர்வு செய்ய மூன்று நாட்கள் அவகாசம் வழங்கப்படும். அதாவது உங்களுக்கான தரவரிசை வெளியிடப்பட்ட பின்னர், நீங்கள் ஆன்லைனில், நீங்கள் விரும்பும் கல்லூரிகளை முன்னுரிமை அடிப்படையில் தேர்வு செய்துக் கொள்ளலாம். அதன்பிறகு உங்களுடைய கட் ஆஃப் மதிப்பெண்களுக்கு ஏற்ப உங்களுக்கு நீங்கள் தேர்வு செய்த கல்லூரிகளில் இருந்து ஓதுக்கீடு செய்யப்படும்.
தற்போது சென்னைப் பகுதியில் டாப் பொறியியல் கல்லூரிகள் எவை என்பதை இப்போது பார்ப்போம். கல்வியாளர் ஜெயபிரகாஷ் காந்தி சென்னையில் உள்ள டாப் கல்லூரிகள் எவை என்பதை தனது யூடியூப் பக்கத்தில் வீடியோவாக வெளியிட்டுள்ளார்.
கல்லூரிகளுக்கு மாணவர்கள் அளிக்கும் முன்னுரிமை, ஆவரேஜ் கட் ஆஃப், இடங்கள் நிரப்பப்படும் நிலை ஆகியவற்றின் அடிப்படையில் டாப் கல்லூரிகள் தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில், இவை ரவுண்ட் 1ற்கான சென்னையில் உள்ள டாப் கல்லூரிகள் என்பதை கவனத்தில் கொள்ளுங்கள்.
நீங்கள் முதல் ரவுண்ட்க்கான கவுன்சிலிங்கிற்கு தகுதியானவர் என்றால், சென்னையில் உள்ள அண்ணாப் பல்கலைக்கழகத்தின் கிண்டி பொறியியல் கல்லூரிக்கு முன்னுரிமை கொடுங்கள். தமிழக அளவில் இந்த கல்லூரி தான் முதலிடத்தில் உள்ளது. அடுத்த இடத்தில், குரோம்பேட்டையில் உள்ள அண்ணாப் பல்கலைக்கழகத்தின் எம்.ஐ.டி கேம்பஸ் உள்ளது.
டெக்ஸ்டைல், லெதர் டெக்னாலஜி, கெமிக்கல் போன்ற படிப்புகளை படிக்க விரும்புபவர்கள் அண்ணா பல்கலைக்கழகத்தின் ஏ.சி.டெக் கல்லூரியை தேர்வு செய்யலாம்.
அதற்கு அடுத்த இடத்தில் தனியார் கல்லூரியான எஸ்.எஸ்.என் என அழைக்கப்படும் ஸ்ரீ சிவசுப்பிரமணிய நாடார் பொறியியல் கல்லூரி மாணவர்களின் விருப்பமான கல்லூரியாக உள்ளது.
இதற்கு அடுத்த இடங்களில், ராஜலட்சுமி இன்ஜினியரிங் காலேஜ், ஆர்.எம்.கே இன்ஜினியரிங் காலேஜ், சாய்ராம் இன்ஜினியரிங் காலேஜ், சென்னை இன்ஸ்டியூட் ஆஃப் டெக்னாலஜி, எஸ்.ஆர்.எம் ஈஸ்வரி இன்ஜினியரிங் காலேஜ், ஆர்.எம்.டி இன்ஜினியரிங் காலேஜ், ஆர்.எம்.கே காலேஜ் ஆஃப் இன்ஜினியரிங் அண்ட் டெக்னாலஜி, ராஜலெட்சுமி இன்ஸ்டியூட் ஆஃப் டெக்னாலஜி, சாய்ராம் இன்ஸ்டியூட் ஆஃப் டெக்னாலஜி, ஸ்ரீ வெங்கடேஸ்வரா காலேஜ் ஆஃப் இன்ஜினியரிங், பனிமலர் இன்ஜினியரிங் காலேஜ் ஆகியவை உள்ளன.
அடுத்ததாக லயோலா காலேஜ், செயிண்ட் ஜோசப் இன்ஜினியரிங் காலேஜ், சவீதா இன்ஜினியரிங் காலேஜ், வேலம்மாள் இன்ஜினியரிங் காலேஜ், வேலம்மாள் இன்ஸ்டியூட் ஆஃப் டெக்னாலஜி, செயிண்ட் ஜோசப் இன்ஸ்டியூட் ஆஃப் டெக்னாலஜி, பனிமலர் இன்ஸ்டியூட் ஆஃப் டெக்னாலஜி ஆகியவை அடுத்த இடங்களில் உள்ளன.
மாணவர்கள் இந்தக் கல்லூரிகளை தேர்வு செய்யும் முன்னர், உங்களுக்கு விருப்பமான கல்லூரிகளுக்கு நேரடியாக சென்று, அவர்களின் தரவரிசை, உள்கட்டமைப்பு வசதிகள், வேலைவாய்ப்பு, கல்வி கட்டணம் போன்றவற்றை தெரிந்துக் கொள்ளுங்கள்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil