Top 5 Engineering colleges in Kovai for AI and Data Science courses: செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence), தரவு அறிவியல் (Data Science), இணைய பாதுகாப்பு (Cyber Security), Internet of Things, 5G தொழில்நுட்பம் போன்ற படிப்புகளுக்கு தற்போது மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடையே அதிக ஆர்வம் இருந்து வருகிறது. இவை சம்பந்தப்பட்ட துறைகளின் வளர்ச்சி மற்றும் வேலைவாய்ப்பு காரணமாக இந்த படிப்புகளை படிக்க மாணவர்கள் விரும்புகின்றனர்.
Advertisment
இந்த செயற்கை நுண்ணறிவு மற்றும் தரவு அறிவியலுக்கு அடிப்படையாக கம்ப்யூட்டர் இன்ஜினியரிங் உள்ளது. மேலும் ஐடி, எல்ட்ரானிக்ஸ் போன்ற பொறியியல் படிப்புகளை படித்தவர்களும் உயர்கல்வியில் இந்த துறைகள் சார்ந்து படிக்கலாம்.
இந்த செயற்கை நுண்ணறிவு மற்றும் தரவு அறிவியல் படிப்புகளை படிக்க, கோவை மண்டலத்தில் உள்ள சிறந்த கல்லூரிகளை கேரியர் கைடன்ஸ் யூடியூப் சேனலின் அஸ்வின் பட்டியலிட்டுள்ளார். அந்த கல்லூரிகள் எவை என்பதை இப்போது பார்ப்போம்.
Advertisment
Advertisements
கோயம்புத்தூர் இன்ஸ்டியூட் ஆஃப் டெக்னாலஜி – இது அரசு நிதியுதவி பெறும் கல்லூரி. இந்த கல்லூரியில் மேற்கூறிய படிப்புகள், Self-Support வகையில் உள்ளது.
குமரகுரு காலேஜ் ஆஃப் டெக்னாலஜி – இது தனியார் கல்லூரி. செயற்கை நுண்ணறிவு மற்றும் தரவு அறிவியல் படிப்புகளுக்கான சிறந்த கல்லூரியாக உள்ளது.
ஸ்ரீ கிருஷ்ணா காலேஜ் ஆஃப் இன்ஜினியரிங் அண்ட் டெக்னாலஜி - இது தனியார் கல்லூரி. செயற்கை நுண்ணறிவு மற்றும் தரவு அறிவியல் படிப்புகளுக்கான சிறந்த கல்லூரியாக உள்ளது.
ஸ்ரீ ஈஸ்வர் காலேஜ் ஆஃப் இன்ஜினியரிங் - இது தனியார் கல்லூரி. செயற்கை நுண்ணறிவு மற்றும் தரவு அறிவியல் படிப்புகளுக்கு கோவைப் பகுதியில் மிகச்சிறந்த கல்லூரியாக உள்ளது. இந்தக் கல்லூரி பல்வேறு நிறுவனங்களுடன் இணைந்து இந்த கோர்ஸ்களை பயிற்றுவிக்கிறது.
ஸ்ரீ ராமகிருஷ்ணா இன்ஜினியரிங் காலேஜ் - இது தனியார் கல்லூரி. செயற்கை நுண்ணறிவு மற்றும் தரவு அறிவியல் படிப்புகளுக்கான சிறந்த கல்லூரியாக உள்ளது.
இதைத் தவிர ஈரோடு கொங்கு இன்ஜினியரிங் காலேஜ் மற்றும் பண்ணாரி அம்மன் இன்ஜினியரிங் காலேஜ் போன்றவையும் சிறந்த கல்லூரிகளாக உள்ளன.