TNEA: கோவையில் பொறியியல் கவுன்சலிங் ரவுண்ட் -1 டாப் கல்லூரிகள் எவை?

TNEA Counselling: பொறியியல் படிக்க விரும்புபவர்களின் கவனத்திற்கு; கோவையில் உள்ள டாப் இன்ஜினியரிங் கல்லூரிகள் எவை தெரியுமா? ரவுண்ட் 1க்கு நீங்கள் இந்த கல்லூரிகளை தேர்வு செய்யலாம்

TNEA Counselling: பொறியியல் படிக்க விரும்புபவர்களின் கவனத்திற்கு; கோவையில் உள்ள டாப் இன்ஜினியரிங் கல்லூரிகள் எவை தெரியுமா? ரவுண்ட் 1க்கு நீங்கள் இந்த கல்லூரிகளை தேர்வு செய்யலாம்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
TNEA: கோவையில் பொறியியல் கவுன்சலிங் ரவுண்ட் -1 டாப் கல்லூரிகள் எவை?

Top Engineering colleges in Kovai under Anna University for round 1 counselling: தமிழகத்தில் பொறியியல் படிப்புகளுக்கான மோகம் மீண்டும் திரும்பியுள்ளது. இந்த ஆண்டு 2 லட்சத்திற்கும் அதிகமானோர் பொறியியல் கலந்தாய்வுக்கு விண்ணப்பித்துள்ளனர். இந்த பொறியியல் சேர விரும்பும் மாணவர்கள் அவசியம் தெரிந்துக் கொள்ள வேண்டிய பொறியியல் கவுன்சிலிங் செயல்முறை என்ன? பொறியியல் கவுன்சிலிங் ரவுண்ட் 1ல் கோவையில் உள்ள டாப் பொறியியல் கல்லூரிகள் எவை? போன்ற தகவல்களை இப்போது பார்ப்போம்.

Advertisment

பொறியியல் சேர்க்கை செயல்முறைகளில் தற்போது சான்றிதழ் சரிபார்ப்பு பணி நடைபெற்று வருகிறது. இதன் பிறகு ரேண்டம் எண் வெளியிடப்படும். அதன் பின்னர் ரேங்க் வெளியிடப்படும். அதன் அடிப்படையில் கலந்தாய்வு ஆன்லைனில் நடைபெறும். உங்களுடைய விண்ணப்பம் ஏற்றக் கொள்ளப்பட்ட பின்னர், நீங்கள் கல்லூரிகளை தேர்வு செய்ய மூன்று நாட்கள் அவகாசம் வழங்கப்படும். அதாவது உங்களுக்கான தரவரிசை வெளியிடப்பட்ட பின்னர், நீங்கள் ஆன்லைனில், நீங்கள் விரும்பும் கல்லூரிகளை முன்னுரிமை அடிப்படையில் தேர்வு செய்துக் கொள்ளலாம். அதன்பிறகு உங்களுடைய கட் ஆஃப் மதிப்பெண்களுக்கு ஏற்ப உங்களுக்கு நீங்கள் தேர்வு செய்த கல்லூரிகளில் இருந்து ஓதுக்கீடு செய்யப்படும்.

இதையும் படியுங்கள்: ஜே.இ.இ மார்க் தேவையில்லை; சென்னை ஐ.ஐ.டி-யில் டேட்டா சயின்ஸ் பட்டப்படிப்பு; விண்ணப்பிப்பது எப்படி?

தற்போது கோவைப் பகுதியில் ரவுண்ட் 1 கவுன்சலிங்கில் தேர்வு செய்யப்படும் பொறியியல் கல்லூரிகள் எவை என்பதை இப்போது பார்ப்போம். கல்வியாளர் ஜெயபிரகாஷ் காந்தி கோவையில் உள்ள டாப் கல்லூரிகள் எவை என்பதை தனது யூடியூப் பக்கத்தில் வீடியோவாக வெளியிட்டுள்ளார்.

Advertisment
Advertisements

கல்லூரிகளுக்கு மாணவர்கள் அளிக்கும் முன்னுரிமை, ஆவரேஜ் கட் ஆஃப், இடங்கள் நிரப்பப்படும் நிலை ஆகியவற்றின் அடிப்படையில் டாப் கல்லூரிகள் தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில், இவை பொறியியல் கவுன்சலிங் ரவுண்ட் 1ற்கான கோவையில் உள்ள டாப் கல்லூரிகள் என்பதை கவனத்தில் கொள்ளுங்கள்.

நீங்கள் முதல் ரவுண்ட்க்கான கவுன்சிலிங்கிற்கு தகுதி பெற்று, கோவைப் பகுதியில் உள்ள கல்லூரிகளில் சேர விருப்பம் என்றால், கோவையில் உள்ள பி.எஸ்.ஜி காலேஜ் ஆஃப் டெக்னாலஜிக்கு முன்னுரிமை கொடுங்கள். அடுத்த இடத்தில், ஸ்ரீ கிருஷ்ணா காலேஜ் ஆஃப்  இன்ஜினியரிங் அண்ட் டெக்னாலஜி உள்ளது.

அதற்கு அடுத்த இடத்தில் கோயம்புத்தூர் இன்ஸ்டியூட் ஆஃப் டெக்னாலஜி உள்ளது. இதற்கு அடுத்த இடத்தில் கோயம்புத்தூரில் உள்ள குமரகுரு காலேஜ் ஆஃப் டெக்னாலஜி உள்ளது. அடுத்த இடத்தில் கோயம்புத்தூரில் உள்ள பி.எஸ்.ஜி இன்ஸ்டியூட் ஆஃப் டெக்னாலஜி உள்ளது.

இதற்கு அடுத்த இடங்களில், பண்ணாரி இன்ஸ்டியூட் ஆஃப் டெக்னாலஜி, கோயம்புத்தூர் அரசு தொழில்நுட்பக் கல்லூரி, ஸ்ரீ ஈஸ்வர் இன்ஜினியரிங் காலேஜ், கே.பி.ஆர் இன்ஜினியரிங் காலேஜ், ராமகிருஷ்ணா இன்ஜினியரிங் காலேஜ், அண்ணா பல்கலைக்கழக மண்டல வளாகம், டாக்டர் மகாலிங்கம் காலேஜ் ஆஃப் இன்ஜினியரிங் அண்ட் டெக்னாலஜி, கலைஞர் இன்ஸ்டியூட் ஆஃப் டெக்னாலஜி, எஸ்.என்.எஸ் காலேஜ் ஆஃப் டெக்னாலஜி, கற்பகம் இன்ஸ்டியூட் ஆஃப் டெக்னாலஜி ஆகியவை உள்ளன.

மாணவர்கள் இந்தக் கல்லூரிகளை தேர்வு செய்யும் முன்னர், உங்களுக்கு விருப்பமான கல்லூரிகளுக்கு நேரடியாக சென்று, அவர்களின் தரவரிசை, உள்கட்டமைப்பு வசதிகள், வேலைவாய்ப்பு, கல்வி கட்டணம் போன்றவற்றை தெரிந்துக் கொள்ளுங்கள்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Engineering Counselling

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: