Advertisment

TNEA Counselling 2023; தமிழக டாப் பொறியியல் கல்லூரிகள் இவை தான்!

பொறியியல் படிக்க விருப்பமா? தமிழகத்தில் உள்ள டாப் இன்ஜினியரிங் கல்லூரிகளின் பட்டியல் இங்கே

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
top 50 engineering colleges in tamilnadu under anna university, top 10 engineering colleges in tamilnadu under anna university 2022, டாப் 10 பொறியியல் கல்லூரிகள் இவை, தமிழ்நாடு, டாப் 10 பொறியியல் கல்லூரிகள், அண்ணா பல்கலைக்கழகம், பொறியியல் கலந்தாய்வு, top 10 engineering colleges in tamilnadu 2022, top 10 private engineering colleges in tamilnadu, top engineering colleges in tamilnadu rank wise, anna university colleges in tamilnadu, anna university affiliated colleges ranking list

பொறியியல் படிக்க விரும்பும் மாணவர்கள் அவசியம் தெரிந்துக் கொள்ள வேண்டிய தமிழகத்தில் உள்ள டாப் என்ஜீனியரிங் கல்லூரிகள், கட் ஆஃப் உள்ளிட்ட விவரங்களை இப்போது பார்ப்போம்.

Advertisment

தமிழகத்தில் பொறியியல் படிப்புகளுக்கான மோகம் மீண்டும் அதிகரித்துள்ளது. கணினி, தகவல் தொடர்பு மற்றும் டிஜிட்டல் போன்ற துறைகளில் அதிகரித்து வரும் வேலைவாய்ப்புகளின் காரணமாக மாணவர்கள் பொறியியல் படிப்புகளை படிக்க விரும்புகின்றனர்.

இதையும் படியுங்கள்: JEE Mains 2023: தமிழ்நாட்டில் உள்ள டாப் கல்லூரிகள் இவைதான்!

தமிழகத்தில் பொறியியல் கல்லூரிகளுக்கான சேர்க்கையை, அண்ணாப் பல்கலைக்கழகத்தின் தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை அமைப்பு நடத்தி வருகிறது. இந்த பொறியியல் படிப்புகளுக்கு https://www.tneaonline.org/ என்ற இணையதளப் பக்கம் வாயிலாக ஆன்லைனில் விண்ணப்பித்துக் கொள்ள வேண்டும்.

பொறியியல் படிப்புகளில் சேர்க்கை பெற 12 ஆம் வகுப்பில் கணிதம், இயற்பியல், வேதியியல் ஆகிய பாடங்களை படித்திருக்க வேண்டும். மேலும் இந்த 3 படிப்புகளில் பொதுப் பிரிவு மாணவர்கள் என்றால், சராசரியாக 45% மதிப்பெண்களைப் பெற்றிருக்க வேண்டும். மற்ற இடஒதுக்கீட்டுப் பிரிவினர் 40% மதிப்பெண்களை பெற்றிருக்க வேண்டும்.

இந்தநிலையில், தமிழகத்தின் டாப் பொறியியல் கல்லூரிகளை கல்வி ஆலோசகர் அஸ்வின் தனது யூடியூப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். கடந்த ஆண்டில் மாணவர்கள் அதிக முக்கியத்துவம் கொடுத்து எடுத்த அடிப்படையில் கல்லூரிகள் தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளன.

டாப் கல்லூரிகளைப் பொறுத்தவரை, சென்னையில் உள்ள அண்ணாப் பல்கலைக்கழகத்தின் கிண்டி பொறியியல் கல்லூரி முதலிடத்தில் உள்ளது.

2 ஆம் இடத்தில், குரோம்பேட்டையில் உள்ள அண்ணாப் பல்கலைக்கழகத்தின் எம்.ஐ.டி கேம்பஸ் உள்ளது.

3 ஆவது இடத்தில் எஸ்.எஸ்.என் என அழைக்கப்படும் ஸ்ரீ சிவசுப்பிரமணிய நாடார் பொறியியல் கல்லூரி உள்ளது.

4 ஆவது இடத்தில் காரைக்குடியில் உள்ள மத்திய அரசு நிறுவனமான சென்ட்ரல் எலக்ட்ரோகெமிக்கல் ரிசர்ச் இன்ஸ்டியூட் உள்ளது.

5 ஆவது இடத்தில் கோயம்புத்தூர் இன்ஸ்டியூட் ஆஃப் டெக்னாலஜி உள்ளது.

6 ஆவது இடத்தில் மதுரை தியாகராசர் பொறியியல் கல்லூரி உள்ளது.

7 ஆவது இடத்தில் கோயம்புத்தூரில் உள்ள பி.எஸ்.ஜி காலேஜ் ஆஃப் டெக்னாலஜி உள்ளது.

8 ஆவது இடத்தில் சென்னையில் உள்ள சென்னை இன்ஸ்டியூட் ஆட் டெக்னாலஜி உள்ளது.

9 ஆவது இடத்தில் கோயம்புத்தூரில் உள்ள பி.எஸ்.ஜி இன்ஸ்டியூட் ஆஃப் டெக்னாலஜி அண்ட் அப்ளைடு ரிசர்ச் உள்ளது.

10 ஆவது இடத்தில் கோயம்புத்தூரில் உள்ள அரசு தொழில்நுட்பக் கல்லூரி உள்ளது.

11 ஆவது இடத்தில் சென்னையில் உள்ள ஆர்.எம்.கே இன்ஜினியரிங் காலேஜ் உள்ளது.

12 ஆவது இடத்தில் கோயம்புத்தூரில் உள்ள ஸ்ரீ கிருஷ்ணா காலேஜ் ஆஃப் இன்ஜினியரிங் அண்ட் டெக்னாலஜி உள்ளது.

13 ஆவது இடத்தில் சென்னையில் உள்ள லயோலா ICAM இன்ஜினியரிங் காலேஜ் உள்ளது.

14 ஆவது இடத்தில் சென்னையில் உள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வரா காலேஜ் ஆஃப் இன்ஜினிரியங் உள்ளது.

15 ஆவது இடத்தில் சென்னையில் உள்ள ராஜலட்சுமி இன்ஜினியரிங் காலேஜ் உள்ளது.

16 ஆவது இடத்தில் சென்னையில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தின் ஏ.சி.டெக் கேம்பஸ் உள்ளது.

17 ஆவது இடத்தில் கோயம்புத்தூரில் உள்ள குமரகுரு காலேஜ் ஆஃப் டெக்னாலஜி உள்ளது.

18 ஆவது இடத்தில் சென்னையில் உள்ள ராஜலட்சுமி இன்ஸ்டியூட் ஆஃப் டெக்னாலஜி உள்ளது.

19 ஆவது இடத்தில் கோயம்புத்தூரில் உள்ள ஸ்ரீ ஈஸ்வர் காலேஜ் ஆஃப் இன்ஜினிரியங் உள்ளது.

20 ஆவது இடத்தில் கோயம்புத்தூரில் உள்ள ஸ்ரீ கிருஷ்ணா காலேஜ் ஆஃப் டெக்னாலஜி உள்ளது.

21 ஆவது இடத்தில் காரைக்குடியில் உள்ள அழகப்பா செட்டியார் காலேஜ் ஆஃப் இன்ஜினியரிங் அண்ட் டெக்னாலஜி உள்ளது.

22 ஆவது இடத்தில் சென்னையில் உள்ள ஆர்.எம்.டி இன்ஜினியரிங் காலேஜ் உள்ளது.

23 ஆவது இடத்தில் சேலத்தில் உள்ள அரசு பொறியியல் கல்லூரி உள்ளது.

24 ஆவது இடத்தில் சென்னையில் உள்ள ஈஸ்வரி இன்ஜினியரிங் காலேஜ் உள்ளது.

25 ஆவது இடத்தில் ஈரோட்டில் உள்ள பண்ணாரி அம்மன் இன்ஸ்டியூட் ஆஃப் டெக்னாலஜி உள்ளது.

26 ஆவது இடத்தில் சென்னையில் உள்ள ஸ்ரீ சாய்ராம் இன்ஜினியரிங் காலேஜ் உள்ளது.

27 ஆவது இடத்தில் சென்னையில் உள்ள வேலம்மாள் காலேஜ் ஆஃப் இன்ஜினியரிங் அண்ட் டெக்னாலஜி உள்ளது.

28 ஆவது இடத்தில் ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் உள்ள கொங்கு இன்ஜினியரிங் காலேஜ் உள்ளது.

29 ஆவது இடத்தில் சென்னையில் உள்ள செயிண்ட் ஜோசப் காலேஜ் ஆஃப் இன்ஜினியரிங் உள்ளது.

30 ஆவது இடத்தில் கோயம்புத்தூரில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி உள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Anna University Engineering Counselling
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment