/tamil-ie/media/media_files/uploads/2022/03/TRB-TET.jpg)
இந்த ஆண்டு முதல் ஆசிரியர் தகுதித் தேர்வான TET தேர்வில் பி.எட் படித்தவர்களும் தாள்-1 எழுத மாநில அரசு அனுமதித்துள்ளதால், தொடக்கப்பள்ளி ஆசிரியர் பணியிடங்களுக்கு பி.எட் பட்டதாரிகளும் போட்டியிடுவார்கள் என்பதால் டிப்ளமோ ஆசிரியர் பயிற்சி முடித்தவர்கள் கவலையடைந்துள்ளனர். மார்ச் 7, 2022ம் அன்று 2019-ல் வெளியிடப்பட்ட ஆசிரியர் தேர்வு வாரியத்தின் (TRB) அறிவிப்பை நடைமுறைப்படுத்தும் அரசாணையை தமிழக அரசு வெளியிட்டது.
அதன்படி, இதுவரை, பி.எட் பட்டதாரிகள் இரண்டாம் நிலை ஆசிரியர்களாக பணி நியமனம் செய்ய தாள் - 2 எழுத அனுமதிக்கப்பட்டனர். டிப்ளமோ ஆசிரியர் பயிற்சி தேர்ச்சி பெற்றவர்கள் TET தாள் - I எழுத தகுதியுடையவர்களாக அனுமதிக்கப்பட்டனர். ஆனால், இப்போது பி.எட் படித்தவர்களும் TET தேர்வு தாள் - I எழுத அனுமதிக்கப்படுவதால், டிப்ளமோ ஆசிரியர் பயிற்சி தேர்ச்சி பெற்றவர்கள் பட்டதாரி ஆசிரியர்களான பி.எட் படித்தவர்களுடன் போட்டியிட வேண்டிய நிலை உருவாகியுள்ளது. இதனால், டிப்ளமோ ஆசிரியர் பயிற்சி தேர்ச்சி பெற்றவர்கள் அளவில் பாதிக்கப்படுவார்கள் என்பதால் தமிழக அரசு பி.எட் படித்தவர்களை TET தேர்வில் தாள் - I எழுத அனுமதிக்கக் கூடாது என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஆனால், பி.எட் பட்டதாரிகள் தாள் I-ல் தேர்ச்சி பெற்றால் அவர்கள் பணி நியமனம் செய்யப்படுவார்கள் என்று அரசாங்க உத்தரவில் குறிப்பிடப்படவில்லை என்று கல்வியியல் துறை வட்டாரங்கள் தெரிவித்தன. பி.எட் பட்டதாரிகள் தாள் I எழுதலாம் என்று டி.ஆர்.பி கூறியுள்ளது.
பி.எட் படித்தவர்கள், தாள் I எழுதினால் வேலை கிடைக்குமா என்று தெரியவில்லை. தாள் I மற்றும் டி.ஆர்.பி-யில் தேர்ச்சி பெற்றால் வேலை கிடைக்க வாய்ப்பு உள்ளது என்று பலரும் தாள் I தேர்வு எழுத உள்ளதாக தெரிவிக்கின்றன.
இதனால், தமிழக அரசு இந்த விஷயத்தில் தெளிவுபடுத்த வேண்டும் என்பதே டெட் தேர்வு எழுத தாயாராகி வரும் மாணவர்களின் கோரிக்கையாக உள்ளது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
அறிமுகம் இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் வெப் டெஸ்க் என்பது பல துறை பத்திரிகையாளர்களைக் கொண்ட ஒரு குழுவாகும். இந்த குழு உலகம் முழுவதும் 24 மணி நேரமும் நடக்கும் செய்திகள் மற்றும் நிகழ்வுகளை செய்தியாக தமிழில் அளிக்கும். இது இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் ஆன்லைன் வெப் டெஸ்க்கால் சரிபார்க்கப்பட்ட செய்திகளின் நம்பகமான மூலமாகும். இந்த வெப் டெஸ்க் அரசியல், வணிகம், தேசிய மற்றும் சர்வதேச நிகழ்வுகள் மற்றும் இந்தியா முழுவதிலுமிருந்து தினசரி முக்கிய செய்திகள் குறித்த நேரலைப் பதிவுகள் மற்றும் புதுப்பிப்பிக்கப்பட்ட தகவல்களை உங்களுக்கு வழங்குகிறது. நிபுணத்துவம் பல் துறை செய்தி நிபுணத்துவம்: முக்கிய செய்திகளின் நேரலைப் பதிவுகள் முதல் விரிவான ஊடக அறிக்கைகள் வரை நிகழ்நேரத்தில் டிஜிட்டல் மூலம் செய்திகளை அளிப்பதில் வெப் டெஸ்க் குழு நிபுணத்துவம் பெற்றது. பரந்த அளவிலான கவரேஜ்: இந்த வெப் டெஸ்க் பல்வேறு முக்கியமான துறைகளில் விரிவான நிபுணத்துவத்தைக் கொண்டுள்ளது, அவற்றுள்: அரசியல்: தமிழக அரசியல், சட்டமன்ற நிகழ்வுகள், இந்திய பாராளுமன்ற நிகழ்வுகள் மற்றும் தேசிய மற்றும் சர்வதேச அரசியல் செய்திகளை வழங்குதல். தேசிய & சர்வதேச நிகழ்வுகள்: பல்வேறு மாநிலங்களில் உள்ள உள்ளூர் பிரச்சனைகள் முதல் உலகளாவிய பாதுகாப்பு நிலவரங்கள் மற்றும் சர்வதேச விசாரணைகள் வரையிலான செய்திகளை வழங்குதல். தொழில்நுட்பம் & ஏ.ஐ: புதிய செயற்கை நுண்ணறிவு, சாஃப்ட்வேர் அப்டேட்கள் மற்றும் வளர்ந்து வரும் டிஜிட்டல் மீடியா நிலப்பரப்பில் நிபுணர்களின் சமீபத்திய புதுப்பிப்புகளை வழங்குதல். வாழ்க்கை முறை மற்றும் மன ஆரோக்கியம்: சமூகப் போக்குகள், சுகாதார சவால்கள் மற்றும் தனிப்பட்ட நல்வாழ்வு குறித்த நுணுக்கமான தகவல்களை வழங்குதல். கல்வி & வேலை வாய்ப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கான தகவல்கள் முதல் நீட், ஜே.இ.இ போன்ற தேர்வுகள் வரையிலான கல்வி செய்திகளையும், டி.என்.பி.எஸ்.சி, ரயில்வே, வங்கி தேர்வுகள் மற்றும் தமிழகம் மற்றும் இந்திய அளவிலான வேலை வாய்ப்பு குறித்த சமீபத்திய வேலை வாய்ப்பு தகவல்களையும் வழங்குதல். நம்பகத்தன்மை இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழின் ஒருங்கிணைந்த பகுதியாக, வெப் டெஸ்க் "தைரியமான ஊடகவியல்" என்ற மரபின் கீழ் செயல்படுகிறது. ஒவ்வொரு செய்தியும் இந்தியன் எக்ஸ்பிரஸ் ஆன்லைன் டெஸ்க்கால் சரிபார்க்கப்பட்ட செய்திகளின் நம்பகமான மூலமாகும். இந்த கடுமையான சரிபார்ப்பு செயல்முறை, நிகழ்நேரத்தில் செய்திகளை அளிப்பதில் ஒருபோதும் உண்மை துல்லியம் அல்லது பத்திரிகை நேர்மையை இழக்காமல் இருப்பதை உறுதி செய்கிறது. வெப் டெஸ்க் அனுபவம் இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் வெப் டெஸ்க் 8 ஆண்டுகள் அனுபவம் கொண்டது.
Read More →/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)
Follow Us