scorecardresearch

மருத்துவத் துறை வேலை வாய்ப்பு; குறைந்தபட்ச கல்வித் தகுதி போதும்; உடனே அப்ளை பண்ணுங்க!

தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வேலை வாய்ப்பு; குறைந்தபட்ச கல்வித்தகுதி போதும்; விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்!

மருத்துவத் துறை வேலை வாய்ப்பு; குறைந்தபட்ச கல்வித் தகுதி போதும்; உடனே அப்ளை பண்ணுங்க!

தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் காலியாக உள்ள சமையலர், சலவையாளர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 11 பணியிடங்கள் நிரப்பட உள்ளன. இந்தப் பணியிடங்கள் நேரடி நியமன அடிப்படையில் நிரப்பப்பட உள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 30.09.2022க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.

இதையும் படியுங்கள்: வடபழநி முருகன் கோயில் வேலை வாய்ப்பு; குறைந்தபட்ச கல்வித் தகுதி போதும்! உடனே விண்ணப்பிங்க!

சமையலர்

காலியிடங்களின் எண்ணிக்கை : 5

கல்வித் தகுதி : தமிழில் எழுதப் படிக்க தெரிந்திருக்க வேண்டும்.

வயதுத் தகுதி : 01.01.2022 அன்று அதிகப்பட்ச வயது SC/SCA/ST – 37, MBC/BC/BCM – 34, OC -32

சம்பளம் : ரூ. 15,700 – 58,100

சலவையாளர்

காலியிடங்களின் எண்ணிக்கை : 6

கல்வித் தகுதி : தமிழில் எழுதப் படிக்க தெரிந்திருக்க வேண்டும்.

வயதுத் தகுதி : 01.01.2022 அன்று அதிகப்பட்ச வயது SC/SCA/ST – 37, MBC/BC/BCM – 34, OC -32

சம்பளம் : ரூ. 15,700 – 58,100

தேர்வு முறை: இந்த பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை : இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தங்கள் சுய விவரக் குறிப்பு அடங்கிய விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து தேவையான சான்றுகளை இணைத்து கீழ்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

முகவரி : முதல்வர், அரசு தூத்துக்குடி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, தூத்துக்குடி

விண்ணப்பிக்க கடைசி தேதி:  30.09.2022

இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய https://cdn.s3waas.gov.in/s3019d385eb67632a7e958e23f24bd07d7/uploads/2022/09/2022092053.pdf என்ற இணையதளப் பக்கத்தைப் பார்வையிடவும்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Educationjobs news download Indian Express Tamil App.

Web Title: Tuticorin govt medical college recruitment 2022 apply soon