upsc, civil services preliminary examination 2020, withdrawal of application
தேர்வர்கள் தங்கள் விண்ணப்பங்களை திரும்பப் பெற வசதியை யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் (யுபிஎஸ்சி) அறிமுகப்படுத்தியுள்ளது. சிவில் சர்வீசஸ் (ப்ரிலிம்ஸ்) தேர்வுக்கு விண்ணப்பித்த தேர்வர்கள் தங்கள் விண்ணப்பத்தை மார்ச் 18 ஆம் தேதி மாலை 6 மணிக்குள் திரும்பப் பெறலாம் என்று கூறப்பட்டுள்ளது.
Advertisment
சிஎஸ்இ பிரிலிம்ஸ் 2020 மே 31, 2020 அன்று நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. ப்ரிலிம்ஸ் தேர்வுக்கு விண்ணப்பித்துவிட்டு, இருப்பினும் தேர்வுக்கு தயாராகாத சூழ்நிலையில் இருக்கும் தேர்வர்கள் (அ) இந்த வருடம் தேர்வு எழுத வேண்டாம் என்று நினைக்கும் தேர்வர்கள் தங்களது விண்ணப்பத்தை திரும்ப பெரும் முயற்சியாக இந்த திட்டம் மார்ச் 12 ஆம் தேதி முதல் வரும் மார்ச் மார்ச் 18 ஆம் தேதி வரை செயல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு ப்ரிலிம்ஸ் தேர்வில் 10 லட்சம் தேர்வர்கள் விண்ணப்பம் செய்திருந்தாலும், 5 லட்சம் தேர்வர்கள் மட்டுமே தேர்வரைக்கு வந்திருந்தானர். எனவே, தேவையற்ற செலவீனங்களைத் தவிர்க்க யுபிஎஸ்சி இந்த முயற்சியை மேற்கொண்டுள்ளது. மேலும், தற்செயலாக விண்ணப்பம் செய்து விட்டு, தேர்வர்கள் தங்கள் வாய்ப்பை வீணடிக்க வேண்டாம் என்ற நோக்கிலும் இந்த முயற்சி செயலாக்கப்பட்டது.
படி 1: பதிவு செய்யப்பட்ட விண்ணப்பத்தின் விவரங்களை தேர்வர்கள் (பதிவு என்) வழங்க வேண்டும்.
படி 2: விண்ணப்பத்தை சமர்ப்பிக்கும் போது வழங்கப்பட்ட பதிவு செய்யப்பட்ட மொபைல் எண் மற்றும் மின்னஞ்சல் முகவரி மிகவும் முக்கியம். தேர்வர்களின் மொபைல் மற்றும் மின்னஞ்சலுக்கு அனுப்பப்பட்ட OTP விவரங்களை உறுதிப்படுத்திய பின்னரே கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்படும்,
படி 3: ஒன்றுக்கு மேற்பட்ட விண்ணப்ப படிவங்களை சமர்ப்பித்திருந்தால், கடைசியாய் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பம் பரிசீலிக்கப்படும்.
படி 4: கோரிக்கை இறுதியாக ஏற்றுக்கொண்ட பிறகு, வேட்பாளர் அங்கீகரிக்கப்பட்ட ரசீதை பிரிண்ட் அவுட் எடுத்துக் கொள்ள வேண்டும்.
படி 5: தேர்வு கட்டணத் தொகையை திருப்பித்தர யுபிஎஸ்சி எந்த ஏற்பாடும் செய்யவில்லை. எனவே விண்ணப்பம் வெற்றிகரமாக திரும்பப் பெறப்பட்டாலும் கூட, கட்டணம் திருப்பித் தரப்படாது.