Explained : கொரோனா வைரஸ் ஒரு இடத்தில் எவ்வளவு காலம் வாழும்?

எனவே, கடினமான நாற்காலி மேற்பரப்பை  விட மென்மையான பொம்மையில் கொரோனா வைரஸ் அதிக நேரம் வாழ வாய்ப்புள்ளது.

Coronavirus, Coronavirus In India, coronavirus longevity on surface

CoronaVirus Explained: தற்போதெல்லாம் நமக்கு அலுவலகக் கதவை திறக்கும் போதோ, ஏடிஎம்-ல் பணம் எடுப்பதற்காக எண்களை அழுத்தும் போதோ, ஓலா கேப்பில் கதவை திறக்கும் போதோ, புறநகர் ரயில்களில் கம்பியை பிடிக்கும் போதோ……கொரொனோ வைரஸ் பற்றிய கேள்விகள் எழ ஆரம்பிக்கின்றது. கடைசியாய் இந்த மேற்பரப்பை (கதவு, ரயில் கம்பி….) யார் தொட்டு இருப்பார்? இந்த பேற்பரப்பிற்கு வந்திருந்த வைரஸ் எவ்வளவு நேரம் ஸ்திரதன்மையுடன் இருக்கும். இதுபோன்ற கேள்விகளுக்கு (மனக் குழப்பங்களுக்கு) இங்கு பதிலளிக்க முயல்கிறோம்.

உலக சுகாதார அமைப்பு (WHO) “தற்போது உலகம் முழுதும் பரவி வரும் nகொவிட்-19 (COVID) நோயை ஏற்படுத்தும் வைரஸ், ஒரு சாதாரண மேற்பரப்பில் எவ்வளவு காலம் உயிர்வாழும் என்பதை அறுதியிட்டு கூறமுடியாது” என்று தெரிவித்ததுள்ளது.

இருப்பினும், இந்த வகை வைரஸ்கள் மற்ற கொரோனா வைரஸ்களைப் (கடும் சுவாச நோய்- சார்ஸ்) போல செயல்படுவதாக உணரப்படுகிறது.

ஒரு மேற்பரப்பில் சில மணிநேரம் முதல் பல நாட்கள் வரை ஸ்திரதன்மையுடன் இருக்கலாம் என்று nகொவிட்-19 வைரஸ் குறித்த முதற்கட்ட ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இருப்பினும், மேற்பரப்பு வகை, வெப்பநிலை, சுற்றுச்சூழலின் ஈரப்பதம் பொருத்து இந்த காலளவு மாறுபடலாம் என்று கூறப்படுகிறது.

நோய்களை கட்டுப்படுத்துவதற்கான தேசிய மையத்தின் இயக்குனர் டாக்டர் சுஜீத் சிங் கூறினார்: “பொதுவாக கடினமான மேற்பரப்பில் கொரோனா வைரஸ், சுமார் ஒன்பது மணி நேரமாவது உயிர் வாழும்; மென்மையான மேற்பரப்பில், கொரோனா வைரஸ் நீண்ட காலம் உயர் வாழும். இருப்பினும், இந்த காலளவு வெப்பம்,வெப்ப நிலை, மற்றும் ஈரப்பதத்தை பொறுத்தது.

Coronavirus Updates : அச்சத்தின் விளிம்பில் உலகம்: கொரோனா வைரசால் 4,948 பேர் உயிரழப்பு

கொரோனா வைரஸின் ஆயுள் காலம் அதிக மாறுபாடுடையது. சில வைரஸ் ஐந்து நாட்கள் வரை வாழலாம். சில வைரஸ் ஒன்பது நாட்கள் வரை வாழும். எனவே தான், நாம்  சந்தேகிக்கும் இடங்களில், சோடியம் ஹைபோகுளோரைட் மூலம் கிருமி நீக்கம் செய்து, நான்கு முதல் ஆறு மணி நேரம் அந்த இடத்தை லாக் செய்து விடுகிறோம். நாம் ‘பியூமிகேட் (fumigate)’செய்யவில்லை, மாறாக கிருமி நீக்கம் செய்கிறோம். ”

கடினமான நாற்காலி மேற்பரப்பை  விட மென்மையான பொம்மையில் கொரோனா வைரஸ் அதிக நேரம் வாழ வாய்ப்புள்ளது. இருப்பினும், நாம் நமது கைகளை சோப்பு மற்றும் தண்ணீரில் நன்கு கழுவிக்கொண்டால்  (அ) கை சுத்திகரிப்பான் மூலம் சுத்தம் செய்து கொண்டால் இந்த இரண்டுமே நம்மை பாதிக்காது.

உலக சுகாதரா மையம் தனது பரிந்துரையில்: “ஒரு மேற்பரப்பு பாதிக்கப்படலாம் என்று நீங்கள் நினைத்தால், வைரஸைக் கொல்ல எளிய கிருமிநாசினியைக் கொண்டு அதை சுத்தம் செய்து, உங்களையும் மற்றவர்களையும் பாதுகாத்துக்கொள்ளுங்கள். ஆல்கஹால் அடிப்படையிலான கை சுத்திகரிப்பான் மூலம் உங்கள் கைகளை சுத்தம் செய்யுங்கள். உங்கள் கண்கள், வாய் அல்லது மூக்கைத் தொடுவதைத் தவிர்த்து விடுங்கள் என்று கூறியுள்ளது.

Get the latest Tamil news and Explained news here. You can also read all the Explained news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: How long the virus that causes covid 19 survives on surfaces

Next Story
அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் பாதிப்பு – அமல்படுத்தப்படுமா தொற்றுநோய்கள் சட்டம்?.coronavirus, covid-19, epidemic diseases act 1897, coronavirus cses in india
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express