UPSC Special Recruitment 2020: சிறப்பு ஆட்சேர்ப்பு மூலம் 421 பணி இடங்களை நிரப்பும் யுபிஎஸ்சி
UPSC Special 2020 notification: யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் (யுபிஎஸ்சி) பல்வேறு மத்திய அரசு துறைகளில் 421 காலியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது
UPSC Special 2020 notification: யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் (யுபிஎஸ்சி) பல்வேறு மத்திய அரசு துறைகளில் 421 காலியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது
UPSC Special 2020 eligibility, age limit, salary: ஒன்றிய அரசுப்பணியாளர் தேர்வாணையம் (யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன்) , இந்திய அரசுப் பணிகளுக்கான தகுதி வாய்ந்த பணியாளர்களைத் தேர்வு செய்வதற்காக அமைக்கப்பட்ட ஒரு தனி அமைப்பாகும் . இந்திய ஆட்சிப் பணி,இந்தியக் காவல் பணி, இந்திய வெளிநாட்டுப் பணி போன்ற பணிச்சேவைகளை ஒழுங்குபடுத்தி அப்பணியாளர்களின் பணிக்கால வாழ்வு, பயிற்சி மற்றும் சேவைவிதிகளை கட்டுப்படுத்தி வருகிறது
Advertisment
யுபிஎஸ்சி தற்போது பல்வேறு மத்திய அரசு துறைகளில் இருக்கும் 421 காலியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கான, விண்ணப்ப செயல்முறை ஏற்கனவே தொடங்கிய நிலையில், வரும் ஜனவரி 31ம் தேதி,மாலை 6 மணிக்குள் தேர்வர்கள் விண்ணபிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Advertisment
Advertisements
அக்டோபர் 4 ஆம் தேதி இதற்கான எழுத்துத் தேர்வு நடைபெறும். இதில் தகுதி பெரும் தேர்வர்கள் நேர்முகத் தேர்வில் கலந்து கொள்ள வேண்டும். தேர்ந்தெடுக்கப்பட்ட வேட்பாளர்கள் அமலாக்க இயக்குனரகம், கணக்கு அதிகாரி- ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (இபிஎஃப்ஒ) தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் ஆகியவற்றில் பணியாற்றப்படுவார்கள்.
புதுடெல்லி உள்ள அலுவலகத்தில் இரண்டு ஆண்டுகள் வேட்பாளர்கள் பணியமர்த்தப்படுவார்கள். இருப்பினும், அவர்கள் இந்தியாவில் எங்கும் பணியமர்த்தப்படலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ளவர்கள், upsconline.nic.in என்ற இணைய தளத்திற்கு சென்று விண்ணப்பிக்க வேண்டும்.
தகுதி :
வயது: வயது உச்சவரம்பு 30-க அறிவிக்கப்பட்டுள்ளது. இடஒதுக்கீடு பெரும் தேர்வர்களுக்கு, அரசு விதிமுறைகளின்படி, உச்சவயது வரம்பில் தளர்வு இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கல்வித்தகுதி: விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்திலிருந்து ஏதேனும் ஒரு பாடத்தில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம் : அமைச்சரல்லாத பொது மத்திய சேவை குழு ‘பி’ இன் கீழ் 7 வது ஊதியக் குழுவின் பே மேட்ரிக்ஸில் நிலை -8ல் வேட்பாளர்கள் பணியமர்த்தப்படுவார்கள்.
தேர்வு முறை: அப்ஜெக்டிவ் கேள்விகள் கொண்ட எழுத்து தேர்வு நடைபெறும். மேலும் அனைத்து கேள்விகளும் சம மதிப்பெண்களைக் கொண்டிருக்கும். ஒவ்வொரு தவறான பதிலுக்கும் நெகட்டிவ் மதிப்பெண்களும் உண்டு. (அதாவது , அந்த கேள்விக்கு ஒதுக்கப்பட்ட மதிப்பெண்களில் மூன்றில் ஒரு பங்கைக் குறைக்கப்படும் ).
75(எழுத்து தேர்வு ):25(நேர்காணல்) என்ற விகிதத்தில் இறுதியாக தேர்வர்கள் தேர்ந்தேடுக்கப்படுவார்கள்.