3rd Phase Lok Sabha Elections Details : ஏப்ரல் 11ம் தேதி துவங்கி, வரிசையாக தேர்தல்கள் நடைபெற்று வருகின்றது. 7 கட்ட தேர்தல்களில் 2 கட்ட தேர்தல்கள் முடிவுற்றுள்ளன. நாளை மூன்றாம் கட்ட மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனுக்கள் பெறும் பணி மார்ச் 28ம் தேதி முதல் நடைபெற்று வந்தது. வேட்புமனு தாக்கல் செய்ய இறுதி நாள் ஏப்ரல் 4 ஆக அறிவிக்கப்பட்டு, வேட்புமனுக்கள் 5ம் தேதி பரிசீலிக்கப்பட்டது.
3rd Phase Lok Sabha Elections Details - தேர்தல் நடைபெறும் மாநிலங்கள்
அசாம் (4), பிஹார் (5), சத்தீஸ்கர் (7), குஜராத் (26 - ஒரே கட்டமாக), கோவா (2 - ஒரே கட்டமாக), ஜம்மு காஷ்மீர் (1), கர்நாடகா (14), கேரளா (20 - ஒரே கட்டமாக), மகாராஷ்ட்ரா (14), ஒடிசா (6), உ.பி (10), மேற்கு வங்கம் (5), தாத்ரா நாகர் ஹாவேலி (1), டையூ டாமன் (1), திரிபுரா (1) - என 116 தொகுதிகள், 15 மாநிலங்களில் தேர்தல்கள் நடைபெறுகிறது.
இரண்டாம் கட்ட தேர்தலில் இடம் பெற்றுள்ள திரிபுரா கிழக்கு தொகுதிக்கான வாக்குப்பதிவு சட்டம் மற்றும் ஒழுங்கு காரணமாக ஏப்ரல் மாதம் 23ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. இதனால் 116 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு நாளை நடைபெறுகிறது.
மேலும் படிக்க : 2-வது தொகுதியாக கேரளாவின் வயநாட்டை ராகுல் தேர்வு செய்ய காரணம் என்ன?
நட்சத்திர வேட்பாளர்கள்
கேரளாவில் உள்ள வயநாட்டில் காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி போட்டியிடுகிறார்.
குஜராத்தில் உள்ள காந்தி நகரில் பாஜக தேசிய தலைவர் அமித் ஷா போட்டியிடுகிறார்
திருவனந்தபுரம் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் சசி தரூர் போட்டியிடுகிறார்
சாலக்குடி தொகுதியில் பாஜக சார்பில் நடிகரும், மாநிலங்களவை உறுப்பினருமான சுரேஷ் கோபி போட்டியிடுகிறார்.
காஷ்மீரில் ஆனந்த்நாக்கில் நாளை தேர்தல் நடைபெறுகிறது. காஷ்மீரின் முன்னாள் முதல்வரும், அத்தொகுதியின் 2 முறை (2004 & 2014) எம்.பியுமான மெகபூபா முஃப்தி இங்கு போட்டியிடுகிறார்.