Election 2019: தேர்தலில் போட்டியில்லை; திமுகவுக்கு ஆதரவு! - ஸ்டாலினை சந்தித்த பின் வேல்முருகன்

Election 2019 : திமுக தலைவர் ஸ்டாலினை சந்தித்து வேல்முருகன் ஆதரவு

Election 2019: அ.தி.மு.க. கூட்டணிக் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று வெளியாகிறது.

இதோ அதிமுக போட்டியிடும் தொகுதிகள் குறித்து உடனுக்குடன் updates:

08:10 PM – தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிறுவனர் வேல்முருகன், திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து தனது ஆதரவினை தெரிவித்துள்ளார். தவிர, தான் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்றும் வேல்முருகன் கூறினார்.

06:20 PM – அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் கூட்டணிக் கட்சியான எஸ்டிபிஐ.,க்கு மத்திய சென்னை நாடாளுமன்ற தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

05:00 PM – ராகுலை விமர்சிக்க என்ன தகுதி உள்ளது என்ற தமிழக காங்கிரஸ் தலைவரின் கேள்விக்கு பதிலளித்துள்ள தமிழிசை, ‘நேரு குடும்ப வாரிசு என்ற ஒரே தகுதியை கொண்டதால், ராகுல் காந்திக்கு காங்கிரஸ் தலைவர் பதவி வழங்கப்பட்டுள்ளது. யாரிடமும் சிபாரிசு கோராமல் அரசியலை சுயபுத்தியுடன் பகுத்தாய்ந்து, பாதை வகுத்து சொந்தக்காலில் நின்று அடிமட்ட தொண்டராய் படிப்படியாக நான் உயர்ந்துள்ளேன். மேலும், இந்திய குடிமகள், தமிழ்நாட்டு பிரஜை என்ற முறையில் தமக்கு எல்லாம் தகுதிகளும் உண்டு என்பது, கே.எஸ்.அழகிரிக்கு புரியாவிட்டாலும் மக்களுக்கு நன்றாக புரியும்’ என்று தெரிவித்துள்ளார்.

4:10 PM – மேலும் படிக்க: முதல்வர் பழனிசாமி – விஜயகாந்த் சந்திப்பு சிறப்புப் புகைப்படத் தொகுப்பு

03:20 PM – அதேபோல், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஜோதிமணி, தமிழகத்தில் இருந்தும் மக்களவைத் தேர்தலில் ராகுல் காந்தி போட்டியிட வேண்டும் என ட்விட்டரில் வேண்டுகோள் வைத்திருக்கிறார்.

02:50 PM – தமிழக காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர் தனது ட்விட்டரில், “ராகுல் காந்தி தமிழகத்தில் இருந்து போட்டியிட வேண்டும் என்பது மக்களின் விருப்பமாக உள்ளது. தமிழக மக்கள் ராகுல் மீது அதிக அன்பும், மரியாதையும் வைத்துள்ளனர். தமிழகத்தில் இருந்து எம்.பி.யாக தேர்வு பெற்று பிரதமரானால், அது தமிழகத்திற்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த தென் இந்தியாவுக்கும் பெருமை அளிப்பதாக அமையும்” என குறிப்பிட்டுள்ளார்.

02:20 PM – கன்னியாகுமரி தொகுதியில் போட்டியிட ராகுல்காந்தி பெயரில் விருப்ப மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. காங்கிரஸ் சார்பில் போட்டியிட விருப்பமனு விநியோகம் தொடங்கிய நிலையில், முதல் மனுவாக ராகுல் காந்தி பெயரில் காங்கிரஸ் தொண்டர்கள் விருப்பமனு அளித்துள்ளனர்.

02:00 PM – “சென்னை ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியில் ராகுல்காந்தி கலந்து கொண்ட நிகழ்ச்சி பற்றி சென்னை தேர்தல் அதிகாரி விசாரித்து அறிக்கை வழங்க வேண்டும்” என பாஜக அளித்த புகாரின் பேரில் தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ உத்தரவிட்டுள்ளார்.

01:20 PM – “நான் கூட்டணிக்கு வருவேன் என டிடிவி தினகரன் காத்திருந்தார். ஆனால், நான் செல்லவில்லை. என் வீட்டுக்கு வந்தும், நான் மருத்துவமனையில் சிகிச்சை எடுத்த போது வந்தும் என்னை சந்தித்து கூட்டணிக்கு வாருங்கள் என பல்வேறு கட்சியினர் அழைத்தனர்” என தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் தெரிவித்துள்ளார்.

01:00 PM – “தமிழகத்தில் ஏதாவது ஒரு மக்களவை தொகுதியில் ராகுல்காந்தி போட்டியிட வேண்டும். மக்களின் வேண்டுகோளை ஏற்று ராகுல் தமிழகத்தில் ஏதாவது ஒருபகுதியில் போட்டியிடுவார் என நம்பிக்கை உள்ளது” என்று தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

12. 30 PM : சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் ஓபிஎஸ்-ஈபிஎஸ் ஆலோசனை நடத்துவதாக தகவல் வெளியாகியுள்ளது. மக்களவை தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்கள் குறித்து ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது.

அதிமுக மற்றும் கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் குறித்து அறிவிப்பு இன்னும் சில மணி நேரங்களில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

12. 00 PM : புதுச்சேரி சபாநாயகர் வைத்திலிங்கத்தை காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் சஞ்சய்தத் சந்தித்து பேசினார்.  புதுச்சேரி மக்களவை தொகுதியில் வைத்திலிங்கம் காங்கிரஸ் வேட்பாளராக அறிவிப்பதற்காக இந்த சந்திப்பு நிகழ்ந்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

11. 30  AM :  சென்னை சாலிகிராமம் இல்லத்தில் தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்தை சந்தித்து நலம் விசாரித்தார் முதல்வர் பழனிசாமி.

11. 20  AM :  சென்னை அண்ணா அறிவாலயத்தில் மு.க.ஸ்டாலினுடன் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர்கள் எம்.செல்வராசு, சுப்பராயன் சந்திப்பு நிகழ்ந்தது.

11. 10  AM : ராமநாதபுரத்தில் காரில் உரிய ஆவணமின்றி எடுத்துச்செல்லப்பட்ட ரூ.4 லட்சம் பணம் தேர்தல் பறக்கும் படையினரால் பறிமுதல் பரமக்குடியில் பறக்கும்படை வாகன சோதனையில் 4 பேரிடம் இருந்து ரூ.6.22 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

11.00 AM : மக்களவை தேர்தல் மனு தாக்கலின்போது வேட்பாளருடன் 4 பேர் மட்டுமே வரவேண்டும் – தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ உத்தரவு பிற்பித்துள்ளார்.

10.00 AM :ஈரோடு மக்களவை தொகுதியில் மதிமுக பொருளாளர் அ.கணேசமூர்த்தி போட்டியிடுகிறார்.

 மதிமுக பொருளாளர் அ.கணேசமூர்த்தி

மதிமுக பொருளாளர் அ.கணேசமூர்த்தி

9.00 AM : அதிமுக கூட்டணியில் தொகுதிகள் அறிவிப்பதில் இழுபறி நீடித்து வரும் நிலையில் தேமுதிக தலைவர் விஜயகாந்தை அவரது இல்லத்தில் முதல்வர் பழனிசாமி சந்திக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளன.

அதிமுக கூட்டணியில் தொகுதிகள் அறிவிப்பதில் இழுபறி நீடித்து வரும் நிலையில் தேமுதிக தலைவர் விஜயகாந்தை அவரது இல்லத்தில் சந்திக்கிறார் முதல்வர் பழனிசாமி

நாடாளுமன்ற தேர்தலில், அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் பா.ஜ.க., பா.ம.க., தே.மு.தி.க., த.மா.கா., புதிய தமிழகம், புதிய நீதிக்கட்சி, என்.ஆர். காங்கிரஸ் ஆகியவை இடம்பெற்றுள்ளன. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளில் அ.தி.மு.க. 20 தொகுதிகளில் போட்டியிடுகிறது. பா.ம.க.வுக்கு 7 தொகுதியும், பா.ஜ.க. வுக்கு 5 தொகுதியும் ஒதுக்கப்பட்டுள்ளன. தே.மு.தி.க. 4 தொகுதிகளில் போட்டியிடுகிறது. கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகளுக்கு தொகுதி ஒதுக்குவது குறித்து கடந்த சில நாட்களாக கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சு வார்த்தை நடைபெற்று வந்தது.

இந்நிலையில் எந்தெந்த கட்சிகளுக்கு எந்தெந்த தொகுதிகள் என்ற பட்டியலை, அ.தி.மு.க. தலைமை அதிகாரப்பூர்வமாக இன்று அறிவிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி ஆகியோர் இதற்கான அறிவிப்பை வெளியிடவுள்ளனர்.

Get all the Latest Tamil News and Election 2019 News at Indian Express Tamil. You can also catch all the latest Lok Sabha Election 2019 Schedule by following us on Twitter and Facebook

×Close
×Close