Shaju Philip
BJP back to ground zero in Kerala : அரைடஜன் தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெறும் என்று கூறியதற்கு மாறாக பாஜக இம்முறை மொத்தமாக கேரளாவில் வாஷ்-அவுட் ஆனது. 2016ம் ஆண்டு வெற்றி பெற்ற நேமோம் தொகுதியில் கூட தோல்வியை சந்தித்தது பாஜக. மேலும் கடந்த தேர்தலின் போது 7 தொகுதிகளில் 2 இடத்திற்கு வந்தது பாஜக. ஆனால் தற்போது 5வது இடத்தை மட்டுமே அதனால் பிடிக்க முடிந்தது.
கேரள அரசியலில் பாஜக நேமோம் தொகுதியில் வெற்றி பெற்றது மிக முக்கியமான தருணமாக பார்க்கப்பட்டது. சபரிமலையில் பெண்கள் வழிபாட்டுக்கு அனுமதி தொடர்பான பிரச்சனையில் சர்ச்சையை எழுப்புவதன் மூலம் இந்து வாக்குகளை பெறலாம் என்று நம்பிக்கை வைத்திருந்தது. 2016ம் ஆண்டு பெற்றதை போன்றே 11% வாக்குகளை பாஜக இம்முறையும் பெற்றுள்ளது. ஆனால் இது நாடாளுமன்ற தேர்தலில் கிடைத்த வாக்குகளை விடவும் குறைவு.
பெரிய அளவில் தோல்வியுற்றவர்களில் பாஜகவின் மாநில தலைவர் கே. சுரேந்திரனும் அடங்குவார். அவர் போட்டியிட்ட கொன்னி மற்றும் மஞ்சேஸ்வர் என இரண்டு தொகுதிகளிலும் தோல்வியை தழுவினார். மிகவும் பிரபலமான, முதல்வர் வேட்பாளர் என்று சுயப்பிரகடனம் செய்து கொண்ட மெட்ரோமென் இ ஸ்ரீதரன் இறுதி சுற்று வாக்கு எண்ணிக்கை வரையிலும் கடுமையான போட்டியாளராக இருந்து இறுதியில் தோல்வியை தழுவினார். சபரிமலை விவகாரத்தில் பெரிதும் விமர்சிக்கப்பட்ட அம்மாநில கோவில் விவகாரத்துறை அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன், கழக்கூட்டம் தொகுதியில் சோபா சுரேந்திரனை வீழ்த்தி வெற்று பெற்றார்.
மேலும் படிக்க : 4 ஆண்டுகள் போராட்டம்; ஒரு இடத்திலும் வெற்றி பெறாத டிடிவி… 4 இடங்களை கைப்பற்றிய பாஜக
ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு கேரளாவில் பாஜக தனது கணக்கை நேமோமில் துவங்கியது. இந்த தேர்தலில் அந்த கணக்கை முடித்து வைப்போம் என்று தேர்தல் பிரச்சாரத்தில் சி.பி.எம். கட்சியின் முதல்வர் வேட்பாளர் பினராயி விஜயன் கூறியிருந்தார். ஞாயிற்றுக்கிழமை நேமோமில் சி.பி.எம். வேட்பாளர் வி. சிவன்குட்டி பாஜகவின் கும்மணம் ராஜசேகரனை தோற்கடித்த பிறகு, விஜயன், “பாஜக தலைவர்கள், பெரும்பான்மை பெறாமல் கூட ஆட்சி அமைப்பார்கள் என்று கூறினார்கள்” என்றார்.
நரேந்திர மோடியும் கூட தன்னுடைய பிரச்சாரத்தில் சபரிமலை விவகாரத்தை இழுத்தார். ஐயப்ப கோஷங்களை எழுப்பினார். பாஜகவின் தோல்வி கேரள பாஜகவில் அமைதியின்மையை உருவாக்கும். ஆர்.எஸ்.எஸ். சில இடங்களில் நேரடியாக பிரச்சாரத்தில் ஈடுபட்டது. கேரள மக்கள் புதிய பாஜக தலைமையை ஏற்றுக் கொள்ளவில்லை என்று பாஜக தலைவர் ஒருவர் கூறினார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil