தமிழக தேர்தல் 2021: பிற்படுத்தப்பட்ட வகுப்புகளை ஒன்றிணைக்கும் பாஜக

BJP Caste Consolidation Politics in Tamil Nadu: விரிவாக்கம், ஒருங்கிணைப்பு, உட்புகுதல்" என்ற அரசியல் யுக்திகளில் அதிக கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளது.

By: Updated: February 20, 2021, 07:59:07 PM

BJP Caste Consolidation Politics in Tamil Nadu:  வரும் சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக ‘உயர் சாதியை’ அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்ட கட்சி தான் பாஜக என்ற பிம்பத்தை உடைக்கும் முயற்சிகளின் ஒரு பகுதியாக தமிழகத்தில் சிறிய பிற்படுத்தப்பட்ட சாதியினரை ஒன்றிணைக்கும் திட்டத்தை பாஜக முன்னெடுத்துள்ளது .

கவுண்டர்கள் (மேற்கு, கொங்கு மண்டலம்), தேவர்கள் (மதுரை மற்றும் தென் தமிழகம்) வன்னியர்கள் (வட தமிழகம்) மற்றும் நாடார் சமூகத்தினரை  பாஜக ஒன்றிணைத்து வருகிறது.

தமிழக அரசியலில் தனக்குள்ள கட்டுப்பாடுகள் நன்கு உணர்ந்த பாஜக, ” விரிவாக்கம், ஒருங்கிணைப்பு, உட்புகுதல்” என்ற அரசியல் யுக்திகளில் அதிக கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளது.

கட்சியின் அநேக உயர்மட்டத் தலைவர்கள் தமிழகத்தில் நடைபெறும் பேரணிகளில் உரையாற்றவுள்ளனர். அதே நேரத்தில், இந்து ஆதரவாளர்களை பலப்படுத்தும் முயற்சிகளில் கட்சியின் மாநில பிரிவு செயலாற்றி வருகிறது.

பிரதமர் நரேந்திர மோடி வரும் 25-ம் தேதி கோயம்புத்தூரில் நடைபெறும் பொதுக் கூட்டத்தில் பேச உள்ளார். பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்,  தமிழக பாஜக இளைஞரணி சார்பில், ‘தாமரை இளைஞர்கள் சங்கமம்’ எனும் மாநாட்டில் கலந்து கொள்ள நாளை சேலம் வரவுள்ளார்.  உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாஜக தேசியத் தலைவர் ஜே.பி நட்டா ஆகியோர் ஏற்கனவே மாநிலத்திற்கு பலமுறை பயணங்களை மேற்கொண்டனர். கட்சி உறுப்பினர்களின் மன உறுதியை வலுப்படுத்துவதற்குத் தொடர்ச்சியாக செயல்பட்டு வரும் நட்டா, மீண்டும் தமிழகத்திற்கு வரலாம்.

தென் மாநிலங்களில் பாஜக கட்சி வட்டாரங்களில்  எல்லோராலும் ஏற்றுக்கொள்ளக்கூடியவராக இருக்கும்  ராஜ்நாத் சிங்கின் நாளைய பேரணி ஒரு பெரும் கூட்டத்தை ஈர்க்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தென் மாநிலங்களில் பாஜக தனக்கு இருக்கும் சவால்களை அறிந்து வைத்திருப்பதாக மாநில பாஜகவுடன் நெருக்கமாக பணி செய்துக் கொண்டிருக்கும் ஒரு கட்சியின் தலைவர் தெரிவித்தார். ஆளும் அதிமுகவு கூட்டணியுடன் வரும் சட்டப்பேரவைத் தேர்தலை சந்திக்க இருக்கிறது. 30-35 சட்டமன்றத் தொகுதி இடங்களை வலியுறித்து வருகிறது. எவ்வாறாயினும், 20-25  தொகுதிகளுடன் திருப்தியடைய வேண்டியிருக்கலாம் என்றும் அவர் தெரிவித்தார்.

தமிழக கலாச்சாரத்தில் ஆழமாக வேரூன்றியிருக்கும்  தெற்கு vs வடக்கு, இந்தி vs தமிழ் என்ற அரசியல் சொல்லாடல் போரில், தேசியக் கட்சியாக தன்னை அடையாளப்படுத்திக் கொண்டிருக்கும் பாஜக வலுவின்றி காணப்படுகிறது.

“தமிழர்கள் தங்கள் மொழி சமஸ்கிருதத்திற்கு இணையானதாகவும், செழுமை, வரலாற்றின் அடிப்படையில் இந்தியை விட உயர்ந்ததாகவும் கருதுகின்றனர். மொழியை புறக்கணிப்பது ஒரு அவமானமாக கருதப்படுகிறது, ”என்று அவர் கூறினார்.

“தமிழர்களின் மனதில் நிலை நிறுத்திக் கொள்வது மிகப்பெரிய சவால்” என்றும் அவர் தெரிவித்தார்.

இந்த காரணமாகத்தான் நரேந்திர மோடி,ராஜ்நாத் சிங்  போன்ற உயர்மட்ட வட நாட்டுத் தலைவர்கள் தங்கள் பேச்சுகளின் போது தமிழ் சொற்றொடர்களைப் பயன்படுத்தி வருகின்றனர்.

மீனவர் சமூக நலனுக்கான மோடி அரசின் திட்டங்களையும், தேவேந்திரகுல வேளாளர்களின் நீண்ட நாள் கோரிக்கையான ஏழு பட்டியல் பிரிவு இனங்களை ஒரே பொதுப் பெயரில் வகைப்படுத்துவதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் முயற்சிகளையும் தமிழக பாஜக எடுத்துரைத்து வருகிறது.

பாஜக மூத்த தலைவர் பி. முரளிதர் ராவ் தி இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழிடம் பேசுகையில், “ தமிழ்நாடு சார்ந்த கட்சியாக பாஜக தன்னை காட்டிக்  கொண்டு வருகிறது. தமிழக மக்களுக்காக செயல்பட்டு வருகிறது. மீனவ  சமூகமாக இருந்தாலும், வேளாளர்கள் சமூகமாக  இருந்தாலும் சரி, அவர்களின் நலனுக்காக மத்திய அரசு  நடவடிக்கை எடுத்து வருகிறது. தமிழகத்தில் ஒரு ஆழ்ந்த அரசியல் மாற்றம் உருவாகிக் கொண்டிருக்கிறது” என்று தெரிவித்தார்.

BJP to woo backward castes in Tamil Nadu to counter ‘outsider’ tag

“தமிழ் மொழியை ஊக்குவிக்க விரும்பும்  தமிழ் சார்ந்த கட்சியாக தன்னைக் காட்டிக் கொள்ள பாஜக கடுமையாக போராடுகிறது,” என்று ராவ் தெரிவித்தார்.

தேசிய கட்சியாக தன்னை அடையாளப்படுத்திக் கொண்ட காங்கிரஸ் அம்மாநிலத்தில் கடும் வீழ்ச்சியை சந்தித்தது.  “தமிழ் சார்ந்த கட்சியாக உங்களை அடையாளப்படுத்தும் வரை தமிழக அரசியலில்  உங்களுக்கு முகாந்திரம் இல்லை” என்றும் அவர் மேலும் கூறினார்.

பட்டியல் வெளியேற்றம் ஏன் தேவை? இந்திய வருவாய் துறை அதிகாரி சேகர் (ஓய்வு) நேர்காணல்

அண்மையில், மதுரையில் பாஜக சமூக ஊடக பிரிவு நிர்வாகிகள் மற்றும் தன்னார்வலர்கள் கூட்டத்தில், பாஜக  தேர்தல் பிரச்சார உள்ளடக்கத்தை ஆங்கிலம், தமிழ் மற்றும் உள்ளூர் பேச்சுவழக்குகளில் கொடுக்க வேண்டும் என்று நட்டா வலியுறுத்தினார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Get all the Latest Tamil News and Election 2021 News in Tamil at Indian Express Tamil. You can also catch all the latest Lok Sabha Election 2019 Schedule by following us on Twitter and Facebook

Web Title:Bjp is focusing on small backward castes consolidation in tamil nadu politics

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X