Election 2019 Tamil Nadu alliance :தமிழகத்தில் லோக்சபா தேர்தலுக்கான கூட்டணி பேச்சுவார்த்தைகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
தேமுதிக நீண்ட நாட்களுக்கு பிறகு தமிழக அரசியல் களத்தில் மீண்டும் இவ்வளவு பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருப்பது தேமுதிகவினர் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தி இருக்கிறது
அ.தி.மு.க, தி.மு.க ஆகிய இரு கட்சிகளும் மக்களவைத் தேர்தலுக்கான கூட்டணி அமைப்பது குறித்து பல்வேறு கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன. தே.மு.தி.க தலைவர் விஜயகாந்தை மு.க.ஸ்டாலின், திருநாவுக்கரசர், மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் ஆகியோர் சந்தித்துப் பேசினர்.
தேமுதிக இந்த தேர்தலில் யாருடன் கூட்டணி வைக்கும் என்று கடும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. அதிமுக கூட்டணியில் தேமுதிக இடம்பெறுவதில் தொடர்ந்து இழுபறி நீடித்து வருகிறது.
தே.மு.தி.கவைப் பொறுத்தவரை அ.தி.மு.க, தி.மு.க ஆகிய இரு கட்சிகளுடனும் தொடர்ந்து பேசி வந்தது. இருப்பினும், கூட்டணி குறித்து தே.மு.தி.க இதுவரையில் உறுதி செய்யவில்லை. அ.தி.மு.க கூட்டணியில் தே.மு.தி.க இணையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தநிலையில், சென்னை கோயம்பேட்டில் உள்ள தே.மு.தி.க அலுவலகத்தில் அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் தலைமையில் அவசர ஆலோசனைக் கூட்டம் வரும் 5-ம் தேதி நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கூட்டணி தொடர்பான தனது முடிவை விஜயகாந்த் இதில் அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தக் கூட்டத்தில் நிர்வாகிகள் அனைவரும் தவறாமல் கலந்துகொள்ள வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க..தூத்துக்குடியில் போட்டியிட விருப்ப மனு தாக்கல் செய்யும் கனிமொழி!
06:45 PM - விஜயகாந்தை சந்தித்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய துணை முதல்வர் ஓ.பி.எஸ், "விஜயகாந்தின் உடல்நலத்தை விசாரிக்க வந்தோம். கூட்டணி குறித்தும் பேசினோம். இன்றோ, நாளையோ இதுகுறித்து நல்ல முடிவை அறிவிப்போம்" என்றார்.
05:45 PM - துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் ஆகியோர் தேமுதிக தலைவர் விஜயகாந்தை அவரது இல்லத்தில் நேரில் சந்தித்து பேசிவருகின்றனர்.
04:50 PM - தேமுதிக தலைவர் விஜயகாந்தை இன்னும் சற்று நேரத்தில் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் சந்திக்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
04:15 PM - திமுக - இந்திய ஜனநாயக கட்சி இடையே கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தானது. உதயசூரியன் சின்னத்தில் ஐஜேகே போட்டியிட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
3. 30 PM : திமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்- மதிமுக தொகுதி பங்கீடூ நாளை (5.3.19) இறுதி முடிவு எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
3. 20 PM : திமுக - மதிமுக கூட்டணி: மக்களவை தேர்தலில் திமுக - மதிமுக இடையே கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தானது. திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
#BREAKING | திமுக - மதிமுக கூட்டணி தொகுதி பங்கீடு உடன்பாடு கையெழுத்தானது! https://t.co/hKmplqTuxX
— News7 Tamil (@news7tamil) 4 March 2019
3. 00 PM : வைகோ பேச்சு வார்த்தை:
திமுக தொகுதி பங்கீட்டுக்குழுவுடன் அண்ணா அறிவாலயத்தில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பேச்சுவார்த்தைக்கு வருகை தந்துள்ளார். அவருடன் மல்லை சத்யா, செங்குட்டுவன் உள்ளிட்டோரும் பேச்சுவார்த்தையில் பங்கேற்பு.
2. 45 PM : கனிமொழி விருப்பமனு தாக்கல் :
தூத்துக்குடி தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட திமுக எம்பி கனிமொழி சென்னை அண்ணா அறிவாலயத்தில் விருப்பமனு தாக்கல் செய்தார்.
2.30 PM :கரூர் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட செந்தில்பாலாஜி விருப்ப மனு தாக்கல்
2.00 PM : செய்தியாளர்களிடம் பேசிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன், "மக்களவை தேர்தலில் 2 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது என்பதை மிகுந்த மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறோம். எந்தெந்த தொகுதிகள் என்பதை கலந்து பேசி மு.க.ஸ்டாலின் அறிவிப்பார். 21 சட்டப்பேரவை இடைத்தேர்தலிலும் திமுகவுக்கு இந்திய கம்யூனிஸ்ட் ஆதரவளிக்கும். இந்திய கம்யூனிஸ்ட் சின்னத்திலேயே போட்டியிட உள்ளோம்" என்றார்.
'திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 2 தொகுதிகள் ஒதுக்கீடு!'
கழக தலைவர் @mkstalin அவர்கள் முன்னிலையில், சென்னை அண்ணா அறிவாலயத்தில் ‘2019 - மக்களவைத் தேர்தல்’ தொகுதி பங்கீட்டு ஒப்பந்தம் கையெழுத்தானது. pic.twitter.com/qKzrJlMMjz
— DMK - Dravida Munnetra Kazhagam (@arivalayam) 4 March 2019
01:20 PM : திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 2 இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான ஒப்பந்தம் இன்று கையெழுத்தானது.
'திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 2 தொகுதிகள் ஒதுக்கீடு!'
கழக தலைவர் @mkstalin அவர்கள் முன்னிலையில், சென்னை அண்ணா அறிவாலயத்தில் ‘2019 - மக்களவைத் தேர்தல்’ தொகுதி பங்கீட்டு ஒப்பந்தம் கையெழுத்தானது. pic.twitter.com/qKzrJlMMjz
— DMK - Dravida Munnetra Kazhagam (@arivalayam) 4 March 2019
1.00 PM : தென்சென்னை, வேலூர் ஆகிய தொகுதிகளுக்கு விருப்ப மனுக்கள் தாக்கல்.
வேலூரில் திமுக சார்பில் துரைமுருகன் மகன் கதிர் ஆனந்த் இன்று விருப்ப மனு தாக்கல் செய்தார். அதே போல் தென் சென்னையில் தமிழச்சி தங்கபாண்டியன் விருப்ப மனு தாக்கல் செய்திருக்கிறார்.
12. 20 PM : சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுகவுடன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் 2ம் கட்ட தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடைப்பெற்று வருகிறது.
12.00 PM : திருமாவளவன் பேட்டி :
"திமுகவுடன் நடந்த பேச்சுவார்த்தையில் விசிகவுக்கு 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. எந்தெந்த தொகுதிகள் என்பது குறித்தும், தேர்தலில் எந்த சின்னத்தில் போட்டியிடுவோம் என்பது குறித்தும் பின்னர் அறிவிக்கப்படும்" என்றார்.
11. 20 AM: மக்களவை தேர்தலில் திமுக கூட்டணியில் விசிகவுக்கு 2 தொகுதிகள் ஒதுக்கீடு. இன்றைய தினம் நடைப்பெற்ற 2ம் கட்ட தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் இதுக் குறித்து முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
சிதம்பரத்தில் போட்டியிடுவதாக திருமாவளவன் ஏற்கனவே அறிவித்திருந்த நிலையில்,விழுப்புரம் அல்லது திருவள்ளூர் ஆகியவற்றில் ஒரு தொகுதி ஒதுக்கப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
மக்களவை தேர்தலில் திமுக கூட்டணியில் விசிகவுக்கு 2 தொகுதிகள் ஒதுக்கீடு #LokSabhaElections2019 #DMK #VCK pic.twitter.com/T26wuM0Xei
— PuthiyathalaimuraiTV (@PTTVOnlineNews) 4 March 2019
11.00 AM : திமுக சார்பில் வேலூர் தொகுதியில் போட்டியிட விருப்பம் தெரிவித்து துரைமுருகன் மகன் கதிர் ஆனந்த் இன்று விருப்ப மனு தாக்கல் செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கதிர்ஆனந்த் வேலூர் தொகுதியில் போட்டியிட்டால் வெற்றி வாய்ப்பு அதிகம் உள்ளதாக கணித்து கதிர்ஆனந்தை களம் இறக்க திட்டமிட்டுள்ளனர் என்றும் கூறப்படுகிறது.
10.00 AM : விசிக தலைவர் திருமாவளவனுடன் திமுக 2ம் கட்ட தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடைப்பெற்று வருகிறது.
விசிக தலைவர் திருமாவளவனுடன் திமுக 2ம் கட்ட தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை #DMK #VCK pic.twitter.com/sd5JY2BuGQ
— PuthiyathalaimuraiTV (@PTTVOnlineNews) 4 March 2019
08:30 AM : நேற்றைய தினம், சமத்துவக் கட்சி தலைவர் சரத்குமார், தேமுதிக தலைவர் விஜயகாந்தை அவரது இல்லத்தில் நேரில் சந்தித்து பேசியுள்ளார். இந்த புகைப்படத்தை விஜயகாந்த் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
சமத்துவ மக்கள் கட்சி தலைவர் திரு.சரத்குமார் அவர்கள், இன்று சாலிக்கிராமத்தில் உள்ள எனது இல்லத்தில், நேரில் சந்தித்தபோது எடுத்த படம்.
@realsarathkumar pic.twitter.com/jjC6M7gWpP
— Vijayakant (@iVijayakant) 3 March 2019
இந்த சந்திப்பில் லோக்சபா தேர்தல் கூட்டணி குறித்து விஜயகாந்த் - சரத்குமார் இருவரும் பேசி இருக்கலாம் என்ற தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.