AIADMK concentrate on 18 constituencies in General Election 2019 : நாடாளுமன்ற மற்றும் சட்டமன்றத் தேர்தல் தேதிகளில் நேற்று அறிவிக்கப்பட்ட நிலையில் அதிமுக எத்தனை சீட்டுகள் வென்றால் ஆட்சியை தக்க வைத்துக்கொள்ள முடியும் என இந்த தேர்தலை ஒரு அலசல் அலசுவோம்.
தமிழகத்தில் ஒரே கட்டமாக வரும் ஏப்ரல் மாதம் 18-ஆம் தேதி மக்களவைத் தேர்தல் வாக்குப் பதிவு நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தமிழகத்தின் 18 சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடை தேர்தலும் மக்களவைத் தேர்தலுடன் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
General Election 2019 : 2019 தேர்தல் ஒரு அலசல்
தமிழகத்தில் வரும் மார்ச் 19ம் தேதி வேட்பு மனுத்தாக்கல் தொடங்குகிறது. வேட்பு மனுத் தாக்கல் செய்ய மார்ச் 26ம் தேதி இறுதி நாளாகும். வேட்பு மனுக்களின் பரிசீலனை மார்ச் 27ம் தேதி நடைபெறுகிறது. வேட்பு மனுவைத் திரும்பப் பெற மார்ச் 29ம் தேதி கடைசி நாள் ஆகும். வரும் ஏப்ரல் 18ம் தேதி வியாழக்கிழமையன்று தமிழகத்தில் ஒரே கட்டமாக மக்களவைத் தேர்தலுக்கு வாக்குப் பதிவு நடைபெறுகிறது. புதுச்சேரி மக்களவைத் தொகுதியிலும் ஏப்ரல் 18ம் தேதியே தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையர் சுனில் அரோரா அறிவித்துள்ளார்.
தமிழகத்தில் மக்களவைத் தேர்தலுடன் காலியாக உள்ள 21 சட்டமன்றத் தொகுதிகளில் 18 தொகுதிகளுக்கு இடைத் தேர்தலும் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தமிழகத்தின் மக்களவைத் தேர்தல் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலின் வாக்கு எண்ணிக்கை வரும் மே 23ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏப். 18-ல் தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தல்: 18 சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலும் அறிவிப்பு
இந்நிலையில், தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சிகளும் 39 நாடாளுமன்ற தேர்தல் தொகுதிகளில் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்தாலும், அதிகபடியான கவனம் 18 சட்டமன்றத் தொகுதிகளிலேயே இருக்கும். குறிப்பாக வேலூர், தருமபுரி மற்றும் தேனி ஆகிய தொகுதிகளில் பிரச்சாரம் சூடுபிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போதுள்ள நிலையின் அடிப்படையின், தமிழக சட்டசபையில் 234 எண்ணிக்கையில் 21 காலியாக உள்ளதால், 213 பேரின் இருப்பு மட்டுமே காணப்படுகிறது. ஆனால் இந்த தேர்தல் நடந்து முடிந்த பிறகு அவர்களின் எண்ணிக்கை 231 ஆக கூடும்.
நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் சில வழக்குகளில் காரணமாக 3 தொகுதிகளில் தேர்தல் நடைபெறுமா என்று இன்னும் அறிவிக்கப்படவில்லை. தனது ஆட்சியை தக்க வைத்துக்கொள்ள அதிமுகவிற்கு 116 பேரின் ஆதரவு தேவைப்படுகிறது. ஆனால் இதில் 97 பேரின் ஆதரவு திமுகவிற்கு உள்ளது, தினகரன் தனி நபர் என்பதால் அவரின் ஆதரவும் அதிமுகவிற்கு இருக்க வாய்ப்புகள் இல்லை.
அதிமுகவிற்கு 114 எம்.எல்.ஏக்களின் ஆதரவு இருந்தது. ஆனால் அவர்களின் மூன்று பேர் சுயேட்சை எம்.எல்.ஏக்கள் மற்றும் அதிமுகவில் இருந்து வெற்றிப்பெற்ற 3 எம்.எல்.ஏக்களும் தினகரனுக்கு ஆதரவு தெரிவித்ததால், அதிமுகவிற்கான பலம் இப்போது 108 ஆகவே இருக்கிறது.
எனவே வரும் சட்டமன்ற தேர்தலில் குறைந்தபட்சமாக 8 தொகுதிகளில் வெற்றிப்பெற்றால் மட்டுமே அதிமுகவால் இந்த ஆட்சியை தக்கவைத்துக் கொள்ள முடியும்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.