தேர்தலில் சிறப்பாக பணியாற்றும் தொண்டர்களுக்கு 1 கோடி வரை சன்மானமாம்! களை கட்டும் தேர்தல் 2019

வேலூர் தொகுதியில் சிறப்பாக பணியாற்றும் தொண்டர்களுக்கு 50 லட்ச ரூபாய் சன்மானம் வழங்கப்படும் - துரை முருகன்

Election 2019 Tamil Nadu Party cadre : தேர்தல் என்றாலே ஒரே கொண்டாட்டமும் ஆனந்தமும் தான் கட்சித் தொண்டர்களுக்கு. ஒவ்வொரு தொகுதியிலும் தலைவர்கள் வந்து செல்லும் ஒவ்வொரு நொடியிலும் அவர்களுடனே இருந்து களப்பணி செய்யும் தொண்டர்களுக்கும் மகிழ்ச்சியான செய்திகளை அளித்திருக்கிறார்கள் அக்கட்சியின் தலைவர்கள்.

ஆரம்ப காலத்தில் கட்சித் தொண்டர்களுக்கு தங்க செயின், மோதிரம் என்பது கொடுப்பது போய் இன்று 1 கோடி ரூபாய் சன்மானம், ஃபாரீன் ட்ரிப் என்று வந்து நிற்கிறது.

1 கோடி வரை சன்மானம்

இந்த திடீர் ஆஃபரை அறிமுகப்படுத்தியவர் வேறு யாருமில்லை. அரக்கோணம் தொகுதியில் போட்டியிடும் முன்னாள் அமைச்சர் ஜெகத்ரக்‌ஷகன் தான். 6 சட்டசபை தொகுதிகள் அடங்கிய அரக்கோணம் தொகுதியில், எந்த தொகுதி அதிக அளவு வாக்குகளை பெற்றுத் தருகின்றதோ, அத்தொகுதியின் தேர்தல் பொறுப்புகளை கவனித்து வரும் கட்சி உறுப்பினருக்கு 1 கோடி வரை சன்மானம் அளிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

கல்வி நிறுவனங்கள் மற்றும் 5 நட்சத்திர ஹோட்டல் ஒன்றை நடத்தி வரும் ஜெகத்ரக்‌ஷகன் தமிழ்நாட்டில் இருந்து போட்டியிடும் 4 கோடீஸ்வரர்களில் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இது குறித்து திமுகவின் பொருளாள்ர் துரைமுருகன் கூறுகையில் “ஜெகத்ரக்‌ஷகன் வழங்கும் சன்மானமானது, பள்ளிகளில் அதிக மதிப்பெண் பெறும் மாணவர்களுக்கு அளிக்கப்படும் விருதினை போன்றது” என்று குறிப்பிட்டார். இந்த சன்மானம் மூலமாக தொண்டர்கள் உற்சாகத்துடன் வேலை செய்வார்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.

துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்த் போட்டியிடும் வேலூர் தொகுதியில் சிறப்பாக பணியாற்றும் தொண்டர்களுக்கு 50 லட்ச ரூபாய் சன்மானம் வழங்கப்படும் என்று துரை முருகன் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க : இலங்கையில் கோடி கோடியாய் முதலீடு செய்த அரக்கோணம் திமுக வேட்பாளர்

Get all the Latest Tamil News and Election 2020 News at Indian Express Tamil. You can also catch all the latest Lok Sabha Election 2019 Schedule by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Just Now
X
×Close
×Close