தமிழர்களை ஒழிக்க நினைக்கும் பாஜக ஆட்சி.. பிரச்சாரத்தில் விளாசும் கனிமொழி!

சினிமா நட்சத்திரங்கள், நட்சத்திர பேச்சாளர்கள் இன்றி நடக்கும் தேர்தல் பிரச்சாரம் .

Election 2019 live updates : பிரச்சாரத்தில் விளாசும் கனிமொழி

Election 2019 live updates : மக்களவைத் தேர்தல் தேதி நெருங்கிவருவதைத் தொடர்ந்து நாடு முழுவதும் தேர்தல் பிரச்சாரம் தீவிரமாக நடைபெற்றுவருகிறது. தமிழகத்தைப் பொறுத்தவரை அ.தி.மு.க, தி.மு.க உள்ளிட்ட கட்சிகள் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளன.

மேலும் படிக்க..தேர்தல் 2019 : தமிழகத்தில் உதிக்கும் சூரியனும், உதிரும் நட்சத்திரங்களும்! 

Live Blog

மக்களவை தேர்தல் களம் அனல் பறக்கிறது. எப்படியாவது வெற்றி பெற்று விட வேண்டும் என, கட்சித் தலைமை முதல், கடைக்கோடி தொண்டர் வரை ஓடியாடி பிரச்சாரம் செய்து கொண்டிருக்கின்றனர்.

16:09 (IST)08 Apr 2019
கனிமொழி பிரச்சாரம்:

திருச்செந்தூர் அதை சுற்றியுள்ள பகுதியில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுப்பட்ட திமுக வேட்பாளர் கனிமொழி,  பாஜக அரசு தமிழகர்களை ஒடுக்க நினைப்பதாக குற்றம் சாட்டினார்.  தொடர்ந்து பேசிய அவர், தமிழிசை ஒருமுறை தூத்துக்குடி வந்த போதே செளமியா என்ற பெண்ணின் எதிர்காலத்தை கேள்வி குறி ஆகிவிட்டார் என்றும் விமர்சித்தார். 

15:07 (IST)08 Apr 2019
மன்சூர் அலிகான் விநோத வாக்கு சேகரிப்பு!

நாம் தமிழர் கட்சி சார்பில் திண்டுக்கலில் போட்டியிடும்  மன்சூர் அலிகான் விநோத முறையில் மக்களிடம் வாக்கு சேகரிப்பில் ஈடுப்பட்டு வருகிறார்.  

14:19 (IST)08 Apr 2019
மு. க ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரம்:

கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதியில் தி.மு.க. கூட்டணியின் சார்பில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் எச்.வசந்தகுமார் எம்.எல்.ஏ.வை ஆதரித்து மு.க ஸ்டாலின் தீவிர பிரச்சாரத்தில் ஈடுப்பட்டு வருகிறார். மாலை 5   மணி  நாகர்கோவில் நாகராஜா கோவில் திடலில் நடைபெறும் தி.மு.க. பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு, காங்கிரஸ் வேட்பாளர் எச்.வசந்தகுமாரை ஆதரித்து கை சின்னத்துக்கு வாக்குகள் கேட்டு உரையாற்றுகிறார்.

12:26 (IST)08 Apr 2019
முதல்வர் பழனிசாமி தேர்தல் பரப்புரை:

ஈரோடு மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் வெங்கு மணிமாறனை ஆதரித்து, தொகுதிக்கு உட்பட்ட திருப்பூர்  அதைச் சுற்றியுள்ள பகுதியில் முதல்வர் தேர்தல் பரப்புரை மேற்கொண்டு வருகிறார்.    கருத்து கணிப்புகள் அனைத்தும்பொய் என்றும், தமிழகத்தில் ஊடகங்கள் விலைபோய்விட்டதாகவும் முதல்வர் பழனிசாமி விமர்சனம் செய்தார். 

11:22 (IST)08 Apr 2019
தீர்ப்பை பட்டாசு வெடித்து கொண்டாடும் மக்கள்!

சேலம்  8 வழிச் சாலை திட்டம் ரத்து என  உயர்நீதிமன்றம் வெளியிட்டுள்ள தீர்ப்பை சேலம் பகுதி மக்கள் பட்டாசு வெடித்து கொண்டாடி வருகின்றனர். உண்மையாக போராடி மக்களுக்கு கிடைத்த வெற்றி எனவும் தீர்ப்பை விவசாயிகள் விமர்சித்துள்ளனர். 

11:12 (IST)08 Apr 2019
சேலம் 8 வழிச்சாலை திட்டம் ரத்து!

சென்னை - சேலம் 8 வழிச்சாலை திட்டத்துக்கு தமிழக அரசு நிலம் கையகப்படுத்தியது செல்லாது என்று சென்னை உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பை வழங்கியுள்ளது.  நிலத்தை கையகப்படுவர்களிடமே 8 வாரங்களில் ஒப்படைக்க வேண்டும் என்றும், மத்திய சுற்றுச்சூழல் அனுமதி பெற்ற பிறகே 8 வழிச்சாலை திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. 

10:29 (IST)08 Apr 2019
அய்யாக்கண்ணு பேட்டி!

10:27 (IST)08 Apr 2019
மோடிக்கு எதிராக போட்டியில்லை!

விவசாயிகளைக்கு தேவையான வாக்குறுதியை பாஜக அளித்துள்ளதால் 111 விவசாயிகள் பிரதமர் மோடிக்கு எதிராக போட்டியிடமாட்டோம்’  என்று விவசாயிகள் சங்க தலைவர் அய்யாகண்ணு  கூறியுள்ளார். 

09:02 (IST)08 Apr 2019
பாஜக தேர்தல் அறிக்கை வெளியீடு!

பாஜக தேர்தல் அறிக்கையை பிரதமர் மோடி இன்று காலை 11 மணிக்கு பாஜக தலைமை அலுவலகத்தில் வெளியிடுகிறார். இந்த தகவலை மத்திய அமைச்சர் அருண் ஜேட்லி உறுதிபடுத்தியுள்ளார். 

08:53 (IST)08 Apr 2019
முதல்வர் எடப்பாடி பழனிசாமி திண்டுக்கலில் பிரச்சாரம்!

”தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியில்லை என்று ஸ்டாலின் கூறுகிறார். மதுரை தேர்தல் பிரச்சாரத்திற்கு ஸ்டாலின் சென்றபோது அங்கு அதிகாலையில் நடை பயிற்சியில் ஈடுபட்டிருக்கிறார் அதாவது வாக்கிங் சென்றார். அந்த அளவிற்கு சுதந்திரமாக ஸ்டாலின் சென்று இருக்கிறாரர் என்றால் அவர் ஒருவர் சான்றே போதும்.ஆனால் திமுக ஆட்சியின்போது துணை முதல்வராக இருந்தும் இந்த ஸ்டாலின் மதுரை பக்கமே எட்டிப் பார்க்கவில்லை. அந்த அளவுக்கு சட்டம்  ஒழுங்கு சீர்கெட்டு இருந்தது. தற்போது அப்படி இல்லை சட்டம் ஒழுங்கு சிறப்பாக இருக்கிறது “ என்று  பேசினார். 

08:41 (IST)08 Apr 2019
துணை முதல்வர் பிரச்சாரம்!

அதிமுக என்பது ஆலமரம் போன்றது என்றும், அது, ஒன்றரை கோடி தொண்டர்கள் என்ற விழுதுகளுடன் மிக பலமாக இருப்பதாகவும், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்திருக்கிறார். திருநெல்வேலி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள சண்முகநல்லூர் மற்றும் கரிவலம்வந்தநல்லூர் ஆகிய இடங்களில், தென்காசி தொகுதி புதிய தமிழகம் கட்சி வேட்பாளர் கிருஷ்ணசாமியை ஆதரித்து வாக்குசேகரித்த அவர் இவ்வாறு கூறியிருக்கிறார். தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டுக்கு ஒரே நாளில் அனுமதி வாங்கித் தந்தவர் பிரதமர் நரேந்திர மோடி என துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் புகழாரம் சூட்டினார்.

கடந்த காலங்களில் தேர்தல் என்றாலே நடிகர், நடிகைகளின் பிரச்சாரம் களைகட்டும். பிரதான கட்சிகளின் பிரச்சார பீரங்கிகளாக சினிமா நட்சத்திரங்களே இருந்தனர். ஆனால் இந்த முறை அது எல்லாமே மிஸ்சிங்.

Web Title:

Election 019 tamilnadu campaign live updates

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Just Now
X
×Close
×Close