Election 2019 : இந்தியா முழுவதும் மக்களவை தேர்தல் பிரச்சாரம் களம் சூடுப்பிடித்துள்ள நிலையில் அகில இந்திய அரசியல் கட்சி தலைவர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுப்பட்டுள்ளனர். இந்த பொதுக்கூட்டத்தில் சேலம் , ஈரோடு , நாமக்கல் , கரூர் , விழுப்புரம் உள்ளிட்ட மக்களவை தொகுதிகளில் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்யவுள்ளதாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி ஊடகத்துறைத் தலைவர் கோபண்ணா தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க.. நாற்பதும் நமதே… நாடும் நமதே’ – கோவையில் பிரதமர் மோடி சூளுரை
Live Blog
அகில இந்திய காங்கிரஸ் கட்சித்தலைவர் ராகுல் காந்தி 12/04/2019 அன்று தமிழகம் வருகிறார். அங்கு நடைப்பெறும் மாபெரும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்க உள்ளார்.
The Election Commission has stalled the release of biopic of PM @narendramodi https://t.co/lyg2krBQ6Q
— The Indian Express (@IndianExpress) April 10, 2019
திமுக பொருளாளர் துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்த் மீது தவறான பிரமாணப்பத்திரம் தாக்கல் என்ற பிரிவில் காட்பாடி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். வருமான வரித்துறை சோதனை தொடர்பாக லஞ்சம் கொடுக்க முயற்சி உள்ளிட்ட 2 பிரிவுகளின் கீழ் சீனிவாசன், தாமோதரன் ஆகியோர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
கடந்த வாரம் வேலூரில் உள்ள திமுக பொருளாளர் துரை முருகன் மற்றும் அவரது மகன் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். இந்த சோதனையின் முடிவில் பணம் பறிமுதல் செய்யப்பட்டதாக தகவல் வெளியானது. இந்நிலையில், இந்த வருமான வரித்துறை சோதனை குறித்து வேலூர் காட்பாடி காவல் நிலையத்தில் புகார் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடியில் வேட்பாளராக களம் இறங்கியுள்ள திமுக எம்பி கனிமொழிக்கு ஆதரவாக திமுக தலைவர் ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். பொதுமக்களிடம் பேசிய அவர், கவிஞர், சமூக போராளி உள்பட பல்வேறு முகங்களை கொண்ட பார்லிமெண்ட் டைகர் கனிமொழி என்று குறிப்பிட்டார். ஸ்டாலினின் இந்த பேச்சுக்கு மக்களிடையே பலத்த வரவேற்பு.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் உஷா ராணி, தலித் மலர் ஆகியோர் மீது சென்னையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. பொள்ளாச்சி சம்பவத்தை கண்டித்து மார்ச் 15-ல் நடந்த போராட்டத்தில் அரசு பற்றி அவதூறு பேசியதாக புகார் கலவரத்தை தூண்டும் வகையில் பேசுதல் உள்ளிட்ட 2 பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
பாசிச பாஜக அரசை அகற்றிட
ஊழல் மலிந்த அதிமுக அரசை அகற்றிட12 ஏப்ரல் 2019 அன்று தமிழகம் வருகிறார் இளம் தலைவர் திரு @RahulGandhi #TNWelcomesRahulGandhi pic.twitter.com/JrDFSX9IvE
— Tamil Nadu Congress Committee (@INCTamilNadu) 9 April 2019
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
Highlights