மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு டார்ச் லைட் சின்னம் ஒதுக்கியது தேர்தல் ஆணையம்

தமிழக மக்களின் ஒளியாக மக்கள் நீதி மய்யம் விளங்கும் - கமல் ஹாசன் ட்வீட்

By: March 10, 2019, 11:17:45 AM

Battery Torch Symbol to Makkal Needhi Maiam Party : 2019ம் ஆண்டு பொதுத் தேர்தலுக்கான ஏற்பாடுகள் மும்பரமாக நடைபெற்று வருகிறது. இந்த தேர்தலில் புதிதாக நிறைய கட்சிகளும் தலைவர்களும் போட்டியிட தயாராகி வருகின்றனர். நட்சத்திரப் பட்டாளம் பிரச்சாரங்களுக்கு என்பது மறைந்து குறிப்பிடத் தக்க முக்கிய நட்சத்திரங்கள் கட்சிகள் துவங்கி தேர்தல் களத்தில் நிற்கின்றார்கள்.

மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு டார்ச் லைட் சின்னம்

தமிழகத்தில் முக்கிய நடிகர்களான ரஜினி மற்றும் கமல் ஹாசன் இருவரும் தத்தம் கட்சிகள் துவங்கி தமிழக அரசியல் குறித்த நிலைப்பாட்டினை அறிவித்து வந்த நிலையில், கமல் ஹாசன் இந்த பொதுத் தேர்தலில் போட்டியிடுவதாக அறிவித்திருந்தார். அதே போல் கர்நாடகாவில் மத்திய பெங்களூரு தொகுதியில் நடிகர் பிரகாஷ் ராஜ் சுயேட்சையாக போட்டியிட உள்ளார்.

தற்போது கமல் ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு சின்னம் ஒதுக்கி அறிவித்துள்ளது தேர்தல் ஆணையம். மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு டார்ச் லைட் சின்னத்தினை ஒதுக்கி அறிவித்ததை  தொடர்ந்து கமல் ஹாசன் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் ட்வீட் செய்துள்ளார்.

மேலும் படிக்க : தமிழக தேர்தல் நிலவரம் Live Updates : மதிமுகவின் தொகுதி இறுதி செய்யப்பட்டது!

நன்றி கூறிய கமல் ஹாசன்

டார்ச் லைட் சின்னத்தை தேர்தல் ஆணையம் எங்களுக்கு வழங்கியதிற்காக மக்கள் நீதி மய்யம் நன்றி கூறிக் கொள்கிறது. தமிழக மக்களின் ஒளியாக மக்கள் நீதி மய்யம் விளங்கும் என்றும் அந்த ட்வீட்டில் ட்வீட் செய்திருந்தார் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர்.

Get all the Latest Tamil News and Election 2020 News in Tamil at Indian Express Tamil. You can also catch all the latest Lok Sabha Election 2019 Schedule by following us on Twitter and Facebook

Web Title:Election commission allocated battery torch symbol to makkal needhi maiam party

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Advertisement

இதைப் பாருங்க!
X