தமிழக தேர்தல் நிலவரம் Live Updates : அதிமுக – தேமுதிக கூட்டணி ஒப்பந்த அறிக்கை இன்று வெளியாகும் – விஜய பிரபாகரன்

இரண்டு நாட்களுக்குள் வேட்பாளர்கள் பட்டியல் அறிவிக்கப்படும் - திமுக தரப்பு

By: Updated: March 10, 2019, 03:47:33 PM

General Election 2019 DMK seat Sharing Live Updates : நாளுக்கு நாள் தேர்தல் கூட்டணி விவகாரம் சூடு பிடித்துக் கொண்டே செல்கிறது. கடந்த பொதுத் தேர்தல் தேதியை மார்ச் 6ம் தேதியே தேர்தல் ஆணையம் அறிவித்துவிட்டது. ஆனால் இம்முறை தேர்தல் தேதி அறிவிப்பிலும் தாமதம் நீடித்து வருகிறது.

அப்படியாகவே தமிழக தேர்தல் களமும் கூட்டணி சர்ச்சைகளால் இழுபறியாகிக் கொண்டே செல்கிறது. திமுகவில் புதுவை உள்ளிட்ட 40 தொகுதிகளுக்கான தொகுதிப்பங்கீடு உறுதி செய்யப்பட்டுவிட்டது.

அதிமுகவில் பாஜக, பாமக, புதிய தமிழகம் உள்ளிட்ட கட்சிகள் கை கோர்த்துள்ளன. தேமுதிகவின் நிலைப்பாடு குறித்து இன்னும் உறுதியான முடிவுகள் எட்டப்பட்டவில்லை.

மேலும் படிக்க : திமுக அணிக்கு மேலும் ஒரு கட்சி ஆதரவு: யாருக்கு எந்தத் தொகுதிகள் என பேச்சுவார்த்தை

General Election 2019 DMK seat Sharing Live Updates

02:00 PM : அதிமுக – தேமுதிக கூட்டணி ஒப்பந்த அறிக்கை இன்று வெளியாகும்

இன்று மாலை அதிமுக – தேமுதிக இடையேயான கூட்டணி ஒப்பந்த அறிக்கை வெளியாகும் என விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரன் தெரிவித்துள்ளார்.

01:15 PM : அதிகாரப்பூர்வ அறிவிப்பிற்காக காத்திருக்கும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி

திமுகவுடனான தொகுதிப் பங்கீடு முடிவடைந்தது. எந்த தொகுதியில் அக்கட்சியினர் போட்டியிடுகின்றனர் என்ற அறிவிப்பினை திமுக வெளியிடும் என்று அக்கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் அறிவித்துள்ளார்.

01:00 PM : மக்களவைத் தேர்தலில் நிச்சயம் போட்டியிடுவேன்

ரஜினி காந்த் தற்போது மக்களவைத் தேர்தல் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தல் என இரண்டிலும் போட்டியிட போவதில்லை என்று திட்டவட்டமாக அறிவித்துவிட்டார்.

மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல் ஹாசன் தற்போது நடைபெற இருக்கும் மக்களவைத் தேர்தலில் நிச்சயம் போட்டியிடுவேன் என்று கூறியுள்ளார். மேலும் எந்த தொகுதியில் போட்டியிடுவேன் என்பதை விரைவில் அறிவிப்பேன் என்றும் கூறியுள்ளார்.

12:10 PM : மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியுடன் மீண்டும் பேச்சு வார்த்தை துவக்கம்

நேற்று அண்ணா அறிவாலயத்தில் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினருக்கான தொகுதி இறுதி செய்யப்படாத நிலையில், இன்று மீண்டும் பேச்சு வார்த்தை நடத்த உள்ளது திமுக.

11:30 AM : என்று நடைபெறுகிறது பொதுத்தேர்தல் 2019 ?

கடந்த 2014ம் ஆண்டு பொதுத் தேர்தல் தேதியை மார்ச் 6ம் தேதியே அறிவித்துவிட்டது தேர்தல் ஆணையம்.  ஆனால் இம்முறை தேர்தல் தேதிகள் அறிவிப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது என்று பலதரப்பட்ட கருத்துகள் நிலவி வந்த நிலையில், தேர்தல் தேதிகளை இன்று மாலை 5 மணிக்கு வெளியிடுகிறது தேர்தல் ஆணையம்.

10:30 AM : திமுக – மதிமுக இடையிலான தொகுதிப் பங்கீடு பேச்சு வார்த்தை முடிவடைந்தது. எந்த தொகுதியில் யார் வேட்பாளராக நிற்பார் என்பது குறித்து முக ஸ்டாலின் அறிவிப்பார் என்று மதிமுக தலைவர் வைகோ அறிவிப்பு.

10:15 AM : திமுக – மதிமுக பேச்சுவார்த்தை துவங்கியது

திமுக கூட்டணியில் மதிமுகவிற்கு ஒதுக்கப்பட்ட தொகுதி எது என அடையாளம் காண பேச்சுவார்த்தை அண்ணா அறிவாலயத்தில் துவங்கியது. ஈரோடு தொகுதியை ஒதுக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

10:00 AM : மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு சின்னம் ஒதுக்கீடு

நடிகர் கமல் ஹாசனின் கட்சியான மக்கள் நீதி மய்யத்திற்கு டார்ச் லைட் சின்னம் ஒதுக்கீடு செய்து அறிவித்துள்ளது தேர்தல் ஆணையம்.

08:30 AM : இரண்டு நாட்களுக்குள் வேட்பாளர்கள் பட்டியல் அறிவிக்கப்படும்

திமுக சார்பில் போட்டியிட விருப்பமனு அளித்தவர்களுடனான நேர்காணல் நேற்றும் இன்றும் அண்ணா அறிவாலயத்தில் நடந்து வருகிறது. நேர்காணல் முடிவுற்ற பின்பு, வேட்பாளர்கள் பட்டியல் அறிவிக்கப்படும் என்று திமுக அறிவித்துள்ளது.

07:00 AM : கூட்டணிக் கட்சித் தொண்டர்களுக்கு முதல்வர் அறிவுரை

அதிமுக கூட்டணியைப் பார்த்து திமுக தலைவர் பயந்துவிட்டதாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். நேற்று சேலம் மாவட்டம் ஓமலூரில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய அவர் கூட்டணிக் கட்சித் தொண்டர்கள் கவனமாக செயல்பட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

Get all the Latest Tamil News and Election 2020 News in Tamil at Indian Express Tamil. You can also catch all the latest Lok Sabha Election 2019 Schedule by following us on Twitter and Facebook

Web Title:General election 2019 dmk seat sharing dmdk next move live updates

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Advertisement

இதைப் பாருங்க!
X