மோடி படம் வெளியாகத் தடையில்லை… ஆனால் நமோ டிவி குறித்து பதிலளிக்க தேர்தல் ஆணையம் உத்தரவு

தேர்தல் ஆணையம் தணிக்கைக் குழுவிற்கு படத்தினை அனுப்பியுள்ளது என்று தெரியவந்துள்ளது.

By: Updated: April 4, 2019, 09:28:25 AM

Ritika Chopra

Election Commission Permits PM Narendra Modi Movie : தேர்தல் நடைபெற இருக்கும் சமயத்தில், ஓமங் குமார் இயக்கத்தில், விவேக் ஓப்ராய் நடிப்பில் உருவாகியுள்ளது பி.எம்.நரேந்திர மோடி என்ற திரைப்படம். பிரதமர் மோடியின் வாழ்க்கை வரலாற்றை சித்தகரிக்கும் இந்த படத்தினை தேர்தல் சமயத்தில் வெளியிடக் கூடாது என்று எதிர்க்கட்சிகள், படத்தின் வெளியீட்டினை தள்ளி வைக்குமாறு நீதிமன்றத்தினை நாடியது.

தணிக்கைச் சான்றிதழுக்காக காத்திருக்கும் மோடி திரைப்படக்குழு

தேர்தல் ஆணையம் படத்தின் வெளியீட்டிற்கு மறுப்பு ஏதும் கூறாமல் தணிக்கைக் குழுவிற்கு படத்தினை அனுப்பியுள்ளது என்று தெரியவந்துள்ளது.  இந்த படத்தின் தயாரிப்பாளர்கள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ஹிதேஷ் ஜெய்ன் கூறுகையில் “படத்திற்கான தணிக்கைச் சான்றிதழை பெறும் பணிகள் நடந்து வருகிறது” என்று குறிப்பிட்டார்.

தணிக்கைக் குழுவின் மும்பை பிராந்திய அலுவலர் துஷார் கர்மார்கர் அவரை மின்னஞ்சல், அழைப்புகள், மற்றும் குறுஞ்செய்திகள் மூலம் தொடர்பு கொண்டும் அவரிடம் இருந்து எந்த விதமான பதிலும் வரவில்லை.

கடந்த ஞாயிற்றுக் கிழமை அன்று நடைபெற்ற மெய்ன் பி சௌகிதார் நிகழ்ச்சியின் போது நமோ டிவியை அறிமுகம் செய்து வைத்தார் நரேந்திர மோடி. அவருடைய பிரச்சாரங்கள், முக்கிய அறிவிப்புகள் ஆகியவற்றை நேரடியாக பார்க்கும் வண்ணம் அந்த தொலைக்காட்சி சேனல் உருவாக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான முறையான விளக்கம் அளிக்க வேண்டும் என்று மத்திய தொழில்நுட்பம் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகத்திற்கு உத்தரவிட்டிருந்தது தேர்தல் ஆணையம்.  நமோ டிவி குறித்தான புகாரினை ஆம் ஆத்மி கட்சி மற்றும் காங்கிரஸ் அளித்திருந்தது. இதற்கான விளக்கத்தினை அளிக்க நாளை வரை அவகாசம் கேட்டுள்ளது அந்த அமைச்சகம்.

மோடி திரைப்படத்தின் வெளியீட்டினை தள்ளிவைக்கக் கோரி உச்ச நீதிமன்றத்திற்கு காங்கிரஸ் அனுப்பிய மனுவில், ”பாபிஷ்யோதேர் பூத்” என்ற திரைப்படம் தணிக்கைக் குழுவினால் சான்று அளிக்கப்பட்டும் மேற்கு வங்கத்தில் திரையிட தடை விதிக்கப்பட்டது என்பதை குறிப்பிட்டிருந்தது.

ஆனால் உச்ச நீதிமன்றம் கூறிய தீர்ப்பில் நேரடியாக இந்திய சாசனம் Article 19(1) (a) உறுதி செய்த கருத்துச் சுதந்திரத்தை நெரிக்கும் வகையில் இருக்கும் என்பதால் படத்தை வெளியிடவோ தள்ளி வைக்கவோ தடை வழங்க இயலாது என்று கூறியது.

மேலும் தேர்தல் சமயத்தில் வெளியாகும் படங்களின் தணிக்கை சான்றிதழ் போன்ற விவகாரங்களில் தேர்தல் ஆணையம் தலையிடாது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் தணிக்கை குழுவிற்கு “தேர்தல் நடத்தை விதிமுறைகள்” நடைமுறையில் இருக்கிறது என்பதையும் நினைவுபடுத்தியுள்ளது. தணிக்கைக் குழுவு, அரசியல் ரீதியான படங்களை Cinematograph Act – சட்டப்படி தணிக்கை செய்யும் என்பது குறிப்பிடத்தக்கது.

படத்தினை தணிக்கை செய்ய தேர்தல் ஆணையத்திடம் இருந்து நோ அப்ஜெக்சன் சர்டிஃபிகேட் வாங்க வேண்டுமா அல்லது தேர்தல் ஆணையத்தினர் யாரையாவது தணிக்கைக் குழுவில் இடம் பெற செய்ய வேண்டுமா என்று தணிக்கைக் குழுவிடம் இருந்து கடிதம் அனுப்பபட்டது. அதற்கு தேர்தல் ஆணையம், Cinematograph Act படி படத்தினை தணிக்கை செய்யுமாறு உத்தரவிட்டுள்ளது.

பாஜகவிற்கும் எங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை – தயாரிப்பாளர்கள்

படத்தின் மூலம் வாக்காளர்கள் தங்களின் மனநிலையை மாற்றிக் கொள்ள இயலும் என்று கூறி படத்தினை தேர்தல் முடியும் வரை தள்ளிப்போடுமாறு தேர்தல் ஆணையத்திடம் காங்கிரஸ் கட்சி முறையிட்டது. மேலும் இந்த படத்தினை தயார் செய்தவர்கள் பாஜகவின் அங்கத்தினர் என்று குற்றம் சுமத்தியது.

இதற்கு பதில் அளிக்குமாறு படத்தின் நான்கு தயாரிப்பாளர்கள் மற்றும் பாஜக தரப்பிற்கு தேர்தல் ஆணையம் மார்ச் 25ம் தேதி பதில் அனுப்பியது. மார்ச் 28ம் தேதி தேர்தல் ஆணையத்திற்கு பதில் அனுப்பிய தயாரிப்பாளர்கள் குழு “எங்களுக்கும் பாஜகவிற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. எங்களின் சொந்த பணத்தை முதலீடு செய்தே பட எடுத்துள்ளோம்” என்று கூறியுள்ளது.

பாஜக தரப்பில் இருந்து அளிக்கப்பட்ட பதிலில் பூபேந்திர யாதவ் “படத்திற்கு ஏதாவது வகையில் தடை விதிக்கப்பட்டால் அது கருத்துச் சுதந்திரத்திற்கு எதிரான முடிவாகும். மேலும் அது ஒரு கமர்சியல் படம். அதற்கும் பாஜகவிற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அப்படம் தேர்தல் நடத்தை விதிகளை மீறவும் இல்லை” என்று அவர் கூறினார்.

கடந்த வாரம் அறிமுகமான நமோ சேனல் தற்போது டாட்டா ஸ்கை, டிஷ் டிவி, ஏர்டெல், சிடி நெட்வொர்க் என அனைத்து டி2எச் சேவையிலும் கிடைக்கின்றது. ஆனால் ஐ அண்ட் பி அமைச்சரவையோ, இந்த சேனல் அங்கிகரிக்கப்பட்ட தனியார் சேட்டிலைட் சேனல்கள் பட்டியலில் இடம் பெறவில்லை என்று கூறிவிட்டது.

மேலும் காங்கிரஸ் “ஒன்று இந்த சேனலில் ஒளிபரப்படும் நிகழ்ச்சிகள் government-sponsored channel-ஆக இருக்க வேண்டும் அல்லது முறையான அங்கிகாரம் பெறாத சேனலாக இருக்க வேண்டும் என்று புகார் எழுப்பியுள்ளது. மேலும் இதில் ஒளிபரப்பப்படும் அனைத்து நிகழ்ச்சிகளும் தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறுவதாக உள்ளது என்று குறிப்பிட்ட காங்கிரஸ், முறையாக இந்த சேனலின் ஒளிபரப்பினை ரத்து செய்ய வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டது.

மேலும் படிக்க : 2-வது தொகுதியாக கேரளாவின் வயநாட்டை ராகுல் தேர்வு செய்ய காரணம் என்ன?

Get all the Latest Tamil News and Election 2021 News in Tamil at Indian Express Tamil. You can also catch all the latest Lok Sabha Election 2019 Schedule by following us on Twitter and Facebook

Web Title:Election commission permits pm narendra modi movie to release ib for more time on namo tv

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X